லக்கி மேன் திரைப்பட விமர்சனம் : லக்கி மேன் அனைவருடைய வாழ்க்கையை கனெக்ட் செய்யும் ஃபீல் குட் மற்றும் சிறந்த ஹாலிடே படம்  | ரேட்டிங்: 3/5

0
252

லக்கி மேன் திரைப்பட விமர்சனம் : லக்கி மேன் அனைவருடைய வாழ்க்கையை கனெக்ட் செய்யும் ஃபீல் குட் மற்றும் சிறந்த ஹாலிடே படம்  | ரேட்டிங்: 3/5

திங்க் ஸ்டுடியோஸ் மற்றும் எஸ் என் எஸ் மூவி புரொடக்ஷ்ன்ஸ் தயாரித்து பாலாஜி வேணுகோபால் இயக்கி இருக்கும் படம் லக்கி மேன்.
நடிகர்கள்
முருகனாக யோகி பாபு
வீரா இன்ஸ்பெக்டராக சிவக்குமார்
தெய்வானையாக ரைச்சல் ரபேக்கா
வெங்கட் ஆக அப்துல் லீ
ஆர்.எஸ். ரவியாக சிவாஜி
ரமணனாக ஜெயக்குமார்
பரத் ஊக்கமளிக்கும் பேச்சாளராக கௌதம் சுந்தரராஜன்
வணக்கம் கந்தசாமி கான்ஸ்டபிள் செண்பக மூர்த்தி
தியாகி சுப்பையாவாக ராகுல் தாத்தா
குமாரகுருவாக பிரதீப் கே விஜயன்
அமர்நாத் ஆக அமித் பார்கவ்
தமிழனாக சாத்விக்
அபர்ணாவாக சுஹாசினி குமரன்
புகழேந்தியாக விளங்கு ரவி
டேவிட் சாலமன் இன்ஸ்பெக்டராக கமேஷ்
கமிஷனராக அஜித் கோஷி
நாகார்ஜுனாவாக டெம்பிள் மங்கீஸ் தாவூத்
சீனியராக மிப்பு சாமி
தொழில் நுட்ப கலைஞர்கள்:
எழுத்தாளர் மற்றும் இயக்குனர்: பாலாஜி வேணுகோபால்
இசை: சீன் ரோல்டன்
ஒளிப்பதிவாளர்: சந்தீப் கே. விஜய்
ஆசிரியர்: ஜி. மதன்
கலை இயக்குனர்: சரவணன் வசந்த்
ஒலி வடிவமைப்பு: தபஸ் நாயக்
ஆடை வடிவமைப்பாளர்: நந்தினி நெடுமாறன்
மக்கள் தொடர்பு : டிஒன், ரேகா, சுரேஷ்சந்திரா.
ரியல் எஸ்டேட் முகவர் முருகன் (யோகி பாபு), பிறப்பிலிருந்தே துரதிஷ்டசாலி. அனைவரும் அவன் அதிர்ஷ்டம் இல்லாதவன் என்று சொல்ல அவன் மனம் வருந்தி வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறான். தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் புரோக்கர் தொழிலில் கிடைக்கும் குறைந்த கமிஷன் வருமானத்தில் மனைவி தெய்வானை (ரேச்சல் ரெபக்கா) மற்றும் 8 வயது மகன் தமிழன் (சாத்விக்) ஏழ்மையான வாழ்க்கை நடத்துகிறான். இந்த போராட்டமான வாழ்க்கைக்கு தனது துரதிர்ஷ்டம் தான் காரணம் என்று நினைக்கிறார். எதிர்பாராத விதமாக அதிர்ஷ்டக் குலுக்கலில் ஒரு கார் பரிசு விழுகிறது. கார் இருப்பதால் ரியல் எஸ்டேட் கம்பெனியில் மாதச் சம்பளம் கிடைக்கிறது, தொழிலில் முன்னேற்றம் அடைந்து, பணம் சம்பாதிக்கிறான். இப்போ எல்லோரும் அவனை லக்கி மேன் என்கின்றனர். ஒரு நேர்மையான மற்றும் கண்டிப்பான போலீஸ் அதிகாரி சிவக்குமாருடன் (வீரா) ஒரு நிகழ்ச்சி நிரலுடன் அவன் பாதைகளை கடக்கும் வரை இந்த அதிர்ஷ்டமான காரால் அவனது வாழ்க்கை சிறப்பாக போய் கொண்டிருக்கிறது. இந்நிலையில், லக்கி மேன் காரை அந்த போலீஸ் அதிகாரி  சாலையில் நிறுத்தி விசாரிக்கும் போது துரதிர்ஷ்டவசமாக சம்பவத்தால் முருகனுக்கு பிரச்சனை ஆரம்பம் ஆகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு, முருகனின் கார் திடீரென்று காணாமல் போகிறது? யார் காரை திருடினார்கள்? போலீஸ் அதிகாரிக்கும் முருகனுக்கும் என்ன பிரச்சனை நடந்தது? திருடு போன அதிர்ஷ்ட கார் மீண்டும் கிடைத்ததா? என்பதே மீதிப்படம்.
கதையின் நாயகனாக லக்கிமேன் முருகன் கதாபாத்திரத்தை படம் முழுவதும் யோகி பாபு தாங்கி செல்கிறார். அத்துடன் அவ்வப்போது நம்மை சிரிக்கவும் செய்து, இயல்பான நடிப்பின் மூலம் மீண்டும் தான் ஒரு சிறந்த குணச்சித்திர நடிகர் என்பதை உறுதி செய்வதுடன் ஒரு சில காட்சிகளில் பார்ப்பவர்களின் கண்களை குளமாக்கி உள்ளார்.
யோகி பாபுவின் மனைவி தெய்வானையாக ரேச்சல் ரபேகாவின் யதார்த்தமான நடிப்பு திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது.
நேர்மையான மற்றும் கண்டிப்பான போலீஸ் அதிகாரி சிவக்குமார் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வீரா நல்ல தேர்வு இறுக்கமான முகபாவனையுடன் கம்பீரமாக நடித்துள்ளார்.
நண்பன் வெங்கட்டாக அப்துல் லீ அனைவரையும் கலகலப்பாக வைத்துள்ளார்.
யோகி பாபுவின் மகன் தமிழனாக சிறுவன் சாத்விக் கதாபாத்திரத்திற்கு சூப்பரான தேர்வு. உடல் மொழியிலும், உருவத்திலும் யோகிபாபு மாதிரி நடிப்பில் கலக்கி உள்ளார்.
ஆர்.எஸ். ரவியாக சிவாஜி, ரமணனாக ஜெயக்குமார், பரத் ஊக்கமளிக்கும் பேச்சாளராக கௌதம் சுந்தரராஜன், வணக்கம் கந்தசாமி கான்ஸ்டபிள் செண்பக மூர்த்தி, தியாகி சுப்பையாவாக ராகுல் தாத்தா, குமாரகுருவாக பிரதீப் கே விஜயன், அமர்நாத் ஆக அமித் பார்கவ், அபர்ணாவாக சுஹாசினி குமரன், புகழேந்தியாக விளங்கு ரவி, டேவிட் சாலமன், இன்ஸ்பெக்டராக கமேஷ், கமிஷனராக அஜித் கோஷி, நாகார்ஜுனாவாக டெம்பிள் மங்கீஸ் தாவூத், சீனியராக மிப்பு சாமி என அனைவரும் தங்களுடைய கதாபாத்திரத்தை சுவாரஸ்யமாக நகர சிறப்பாக உழைத்திருக்கிறார்கள்.
எடிட்டர் மதனின் நேர்த்தியான படத்தொகுப்பு, சந்தீப் கே.விஜயின் ஒளிப்பதிவு, ஷான் ரோல்டனின் இசை மற்றும் பின்னணி இசை கதையோடு கனெக்ட் செய்ய வைத்துள்ளது.
ஒவ்வொருவரும் தன் வாழ்க்கையில் துரதிஷ்டம் என்கிற அன்லக்கி யை எதிர் கொண்டிருப்போம். எளிமையான கதை களத்தில் உண்மையான அதிர்ஷ்டம் என்றால் என்ன என்பதைக் சிம்பிளா கதையின் நாயகனாக கதையையும், வில்லனாக ஈகோவை மட்டும் முக்கிய அம்சமாக திரைக்கதை அமைத்து குடும்பம் சார்ந்த படமாக கலகலப்பாகவும், கொடுத்திருக்கிறார் இயக்குநர் பாலாஜி வேணுகோபால்.
மொத்தத்தில் திங்க் மூவீஸ் மற்றும் எஸ் என் எஸ் மூவி புரொடக்க்ஷ்ன்ஸ் தயாரித்திருக்கும் லக்கி மேன் அனைவருடைய வாழ்க்கையை கனெக்ட் செய்யும் ஃபீல் குட் மற்றும் சிறந்த ஹாலிடே படம்.