ரெஜினா சினிமா விமர்சனம் : ரெஜினா சைலண்ட் கில்லர் | ரேட்டிங்: 3/5

0
468
ரெஜினா சினிமா விமர்சனம் : ரெஜினா சைலண்ட் கில்லர் | ரேட்டிங்: 3/5
(Yellow Bear Production LLP) எல்லோ பியர் புரொடக்‌ஷன் சதீஷ் நாயர் தயாரித்து கதையின் நாயகியாக சுனைனா நடித்திருக்கும் படம் ரெஜினா.
 இப்படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமாகியுள்ள மலையாள பிரபலம் டோமின் டி சில்வா.
 இதில் நிவாஸ் ஆதித்தன், ரித்து மந்த்ரா, அனந்த் நாக், தீனா கஜராஜ், விவேக் பிரசன்னா, பவா செல்லதுரை, அப்பானி சரத், ரஞ்சன், பசுபதி ராஜ், ஞானவேல் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
 இந்தப்படத்திற்கு பவி கே.பவன் ஒளிப்பதிவு செய்ய, கமருதீன் கலை இயக்குநராக பணியாற்றி உள்ளார். டோபி ஜான் படத்தொகுப்பை மேற்கொள்ள, விஜி சதீஷ் நடனம் அமைத்துள்ளார். ஆடை வடிவமைப்பு ஏகன் கவனித்துள்ளார். மக்கள் தொடர்பு ஜான்சன்.
ரெஜினா (சுனைனா) ஒரு இளம் பெண்ணாக குழந்தை பருவ அதிர்ச்சியான சம்பவத்தின் மனஉளைச்சலில் இருக்கிறாள். அவளது தந்தை, ஒரு சமூக ஆர்வலர். அவள் பள்ளி நாட்களில் சமூக விரோதிகள் ஆள்மாறாட்டத்தால் இவளது தந்தை அவள் கண் முன்னே கொல்லப்படுகிறார். இந்த சம்பவத்தின் நினைவு பல வருடங்கள் கழித்தும் அவளை வேதனையில் வைத்திருக்கிறது. அதன் பின் ஒரு வங்கி ஊழியரான ஜோ (அனந்த் நாக்) வருகைக்கு பிறகு, அவளுடைய வாழ்க்கை மீண்டும் அழகாக மாறுகிறது. திருமணம்  செய்து கொண்டு ஜோவுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்தி வருகிறார். ஒரு நாள் துப்பாக்கி ஏந்திய முகமூடி அணிந்த கும்பல் ஜோவின் வங்கிக்குள் நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டு இருக்கும் போது, ஒரு கொள்ளையன்; ஜோவை மட்டும் அடித்துக் கொன்று விட்டு அனைவரும் தப்பி செல்கிறார்கள். போலீஸ் அவர்களை துரத்தும் போது கொள்ளையர்களின் கார் விபத்துக்குள்ளாகிறது. காயத்துடன் டிரைவர் மட்டும் பிடிபட மற்றவர்கள் தப்பி தலைமறைவாகிறார்கள். இந்த சம்பவம் ரெஜினாவை பேரழிவிற்கு உள்ளாக்குகிறது. கொலைக் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி காவல் நிலைய படியேறும் ரெஜினாவை அங்கு உள்ள உயர் அதிகாரி மற்றும் காவலர்களால் பலமுறை திருப்பி அனுப்பப்படுகிறார். மரியாதையையும் நீதியையும் தேடும் அப்பாவி ரெஜினா குற்றவாளிகளை சட்டரீதியாக கையாள்வதில் பல தோல்வியுற்ற முயற்சிகளுக்குப் பிறகு, ரெஜினா தனது கணவரின் மரணத்திற்கு காரணமானவர்களை பழி வாங்க ஒரு ஆபத்தான பணியை மேற்கொள்கிறார். கலக்கமடைந்த ரெஜினா வர்கலாவுக்குத் தப்பிச் சென்று ஜூலியுடன் (ரிது மந்த்ரா) கடற்கரை ஓரு உணவகத்தில் வேலை செய்யத் தொடங்குகிறார். ரெஜினா முன்னேற முயற்சிக்கையில், ஜூலியின் கணவர் அறிவு (நிவாஸ் ஆதித்தன்) சிறையிலிருந்து திரும்புகிறார். ரெஜினாவின் திட்டமிடப்பட்ட பழிவாங்கலை செயல்படுத்தத் தொடங்குகிறார். யார் இந்த அறிவு? அவர் எதற்காக சிறை சென்றார்? ரெஜினா எப்படித் தனது திட்டத்தை செயல்படுத்துகிறார்? அவளுடைய திட்டம் வெற்றி பெற்றதா அல்லது மீண்டும் குழப்பத்தில் சிக்கிக் கொண்டாளா? என்பது கதையின் மீதி உருவாக்கம்.
ஒரு சாதாரண இல்லத்தரசி ஆக இருக்கும் ஒரு பெண், அசாதாரணமான விஷயங்களைச் எதிர்கொண்டு, மரியாதையையும் நீதியையும் தேடும் அப்பாவிப் பெண், ஒரு கட்டத்தில் தனது எதிரிகளை அமைதியாக வீழ்த்தி பழிவாங்கும் ரெஜினா கதாபாத்திரத்தில் சுனைனாவின் நேர்த்தியான நடிப்பு, டயலாக் டெலிவரி மூலம் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
ஜூலியாக ரிது மந்திரா, ஜூலியின் கணவராக நிவாஸ் ஆதித்தன், கேங்ஸ்டராக சாய் தீனா, அனந்த் நாக், வங்கி மேலாளராக கஜராஜ், விவேக் பிரசன்னா, பவா செல்லதுரை, அப்பானி சரத், ரஞ்சன், பசுபதி ராஜ், ஞானவேல் என அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரங்களுக்கு உணர்ந்து அதற்குண்டான சிறந்த பங்களிப்பை நடிப்பின் மூலம் வழங்கியுள்ளனர்.
நான்-லீனியர் பேட்டர்னில் விவரிக்கப்பட்ட கதைக்கு ஏற்றவாறு பவி கே.பவன் ஒளிப்பதிவு, சதீஷ் நாயர் இசை மற்றும் பின்னணி இசை படத்தின் மனநிலைக்கு கச்சிதமாக பொருந்தி அதன் உணர்வையும் உயர்த்துகிறது அவர்களின் தொழில்நுட்ப பங்களிப்பு.
பெண்களை மையமாகக் கொண்டு பழிவாங்கும் ஒரு எளிய கதை. ஆரம்பத்தில் திரைக்கதை மெதுவாக நகர்கிறது. ஒரு பெண் பழிவாங்கும் போது என்ன நடக்கும் என்பதை பிற்பாதியில் வேகத்தை கூட்டி பழிவாங்கும் த்ரில்லர் கதையை சுவாரசியமாக சொல்ல முயற்சித்துள்ளார் இயக்குநர் டோமின் டி சில்வா.
மொத்தத்தில் எல்லோ பியர் புரொடக்‌ஷன் சதீஷ் நாயர் தயாரித்துள்ள ரெஜினா சைலண்ட் கில்லர்.