ரிங் ரிங் சினிமா விமர்சனம் :​ ‘ரிங் ரிங்’ ஜாலியான டைம் பாஸ் படம் | ரேட்டிங்: 2.5/5

0
300

ரிங் ரிங் சினிமா விமர்சனம் :​ ‘ரிங் ரிங்’ ஜாலியான டைம் பாஸ் படம் | ரேட்டிங்: 2.5/5

விவேக் பிரசன்னா, டேனியல் அன்னி போப், பிரவீன் ராஜா, அர்ஜுனன், சாக்ஷிஅகர்வால், ஸ்வயம் சித்தா, சஹானா, ஜமுனா நடித்துள்ளனர்.

எழுதி இயக்கியுள்ளார் சக்திவேல். ஒளிப்பதிவு பிரசாந்த் டி எஃப் டெக், இசை வசந்த் இசைப்பேட்டை, எடிட்டிங் பிகே, கலை இயக்கம் தினேஷ் மோகன், பாடல்கள் பா. ஹரிஹரன், தயாரிப்பு ஜெகன் நாராயணன். பத்திரிக்கை தொடர்பு சக்திசரவணன்.

இது நண்பனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சந்திக்கும் விவேக் பிரசன்னா – ஸ்வயம் சித்தா, டேனியல் அன்னி போப் – ஜமுனா, பிரவீன் ராஜா – சாக்ஷிஅகர்வால், அர்ஜுனன் – சஹானா ஆகிய நான்கு ஜோடிகளின் கதை. பிறந்த நாள் பார்டியில் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து நல்லா ஜாலியா இருக்கும் நான்கு நண்பர்களில் டேனியல் அன்னி போப், விவேக் பிரசன்னா தனது கைபேசியில் பல விஷயங்கள் மறைத்து வைத்திருப்பதாக கேலி செய்கிறார், தான் செல்லும் விஷயங்கள் உண்மை இல்லை என்றால் விவேக் பிரசன்னா கைபேசியில் இருக்கும் வாட்ஸ்அப் மெசேஜ்களை மறைக்காமல் எல்லோரிடமும் காட்டும் படி கூறுகிறார். இந்த சிக்கலில் மாட்டி விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் விவேக் பிரசன்னா, மற்ற அனைவரையும் உள்ளே இழுத்து, அதை ஒரு விளையாட்டாக மாற்றுகிறார். ஒவ்வொரு நபரின் கைபேசியிலும் என்ன இருக்கிறது என்பதை வெளிப்படுத்த வெளிப்படையாக பகிரப்பட வேண்டும், தங்களுக்கு மறைக்க எதுவும் இல்லை என்பதை நிரூபிக்க பெண்கள் உட்பட அனைவரும் கவலைப்படாமல் தங்களுடைய கைபேசியை மேசை மீது வைக்க வேண்டும் என்று கூறுகிறார். தயக்கத்துடன் அனைவரும் தங்கள் கை பேசிகளை ஒரு மேசை மீது வைக்க முன்வருகிறார்கள். அப்போது அந்த விபரீத விளையாட்டால் ஒவ்வொருவரும் தங்களின் மறைக்கப்பட்ட புன்னகைக்கு பின்னால், மேற்பரப்பில் மறைத்துக் கொண்டிருக்கும், ரகசியங்கள் ஒவ்வொன்றாக ஒவ்வொருவருக்கும் வரும் அழைப்புகளும், மெசேஜ்கள் மூலம் வெளிப்படும் போது என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.

விவேக் பிரசன்னா, டேனியல் அன்னி போப், பிரவீன் ராஜா, அர்ஜுனன், சாக்ஷிஅகர்வால், ஸ்வயம் சித்தா, சஹானா, ஜமுனா உட்பட அனைவரும் தங்கள் கதாபாத்திரத்தை நன்றாக உள்வாங்கி சிறப்பான முகபாவனைகள் மூலம் நடிப்பை வெளிப்படுத்தி ஒரே ரூமில் நடக்கும் பெரும்பாலான குறிப்பிட்ட முக்கிய காட்சிகள் சுவாரஸ்யம் குறையாமல் நகைச்சுவையுடன் நகர செய்துள்ளனர்.

ஒளிப்பதிவு பிரசாந்த் டி எஃப் டெக், இசை வசந்த் இசைப்பேட்டை, எடிட்டிங் பிகே, கலை தினேஷ் மோகன், பாடல்கள் பா. ஹரிஹரன் ஆகியோர் கதைக்கு ஏற்ப போதுமான அளவு தொழில்நுட்ப ரீதியாக நேர்த்தியான பங்களிப்பை வழங்கி உள்ளனர்.

செல்போனை மையமாக வைத்து 2016 ஆம் ஆண்டு வெளியான இத்தாலிய நகைச்சுவை நாடகமான ‘பெர்ஃபெக்ட் ஸ்ட்ரேஞ்சர்ஸ்’ மற்றும் அதை தொடர்ந்து இந்தியில் வெளிவந்த ‘கேல் கேல் மெய்ன்’ படத்தின் தழுவல்தான் ரிங் ரிங். தமிழ் சினிமாவுக்கு ஏற்ப திரைக்கதையில் கதாபாத்திரங்களின் வாழ்க்கை மற்றும் ஒருவருக்கொருவர் அவர்கள் வைத்திருக்கும் மறைக்கப்பட்ட உறவுகளை, நகைச்சுவையுடன் சொல்லி உள்ளார் இயக்குனர் சக்திவேல்.

மொத்தத்தில் ஜெகன் நாராயணன் தயாரித்திருக்கும் ‘ரிங் ரிங்’ ஜாலியான டைம் பாஸ் படம்.