ராயர் பரம்பரை திரைவிமர்சனம் : ராயர் பரம்பரை குடும்பத்துடன் ஒரு முறை ஜாலியாக கண்டுகளிக்கலாம் | ரேட்டிங்: 2.5/5
ராயர் பரம்பரை படத்தை சின்னசாமி சினி கிரியேஷன்ஸ் சார்பில் சின்னசாமி மௌனகுரு தயாரித்து ராம்நாத்.டி இயக்கி இருக்கிறார்.
நடிகர்கள் : கிருஷ்ணா, சரண்யா, ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, ஆர்.என்.ஆர் மனோகன், கிருத்திகா, அன்ஷுலா ஜிதேஷ் தவான், கே.ஆர்.விஜயா, கஸ்தூரி, ஷர்மிளா, பாவா லட்சுமணன், சேசு, மிப்பு, தங்கதுரை, கல்லூரி வினோத்.
தொழில்நுட்ப வல்லுநர்கள்:
ஒளிப்பதிவு – விக்னேஷ் வாசு
இசை – கணேஷ் ராகவேந்திரா
எடிட்டர் – சசி குமார்
கலை – ராகவ குமார்
ஸ்டண்ட் – சூப்பர் சுப்பராயன்
பாடலாசிரியர் – மோகன் ராஜா
நடனம் – சாண்டி, ஸ்ரீசிவா, சங்கர், ஸ்ரீ செல்வி
ஆடை – ரங்கசாமி
ஒப்பனை – ஆர்.கே.ராம கிருஷ்ணன்
தயாரிப்பு மேலாளர் – ரகு
நிர்வாகத் தயாரிப்பாளர் – ஆர்.எஸ்.மணிகண்டன்
மக்கள் தொடர்பு – எய்ம் சதீஷ்
ராயர் பரம்பரை முழு குடும்பத்திற்கும் ஒரு நகைச்சுவை பொழுதுபோக்காக வெளி வந்திருக்கும் படம். ராயர் பரம்பரை பொள்ளாச்சி அருகே ஒரு கிராமத்தில் கிருஷ்ணா மற்றும் மொட்டை ராஜேந்திரன் ஒரு சிறிய அரசியல் கட்சியை நடத்துகிறார்கள், அதன் செயல்திட்டம் காதலர்களை பிரித்து வைப்பது, அவர்கள் காதல் என்ற கருத்தை நம்புவதில்லை. கிருஷ்ணாவை நாயகிகள் கிருத்திகா சிங் மற்றும் அன்ஷுலா ஜிதேஷ் தவான், காதலிக்கிறார்கள். ஆனால், கிருஷ்ணா அவர்களை நண்பர்களாக பார்க்கிறார். அவர்கள் காதலை ஏற்க மறுக்கிறார். இதனிடையே ராயர் பரம்பரையைச் சேர்ந்த ஆனந்தராஜுக்கு காதல் என்றாலே பிடிக்காது. ஏனென்றால் இவரின் தங்கை (கஸ்தூரி) காதலித்து திருமணம் செய்து ஊரை விட்டு ஓடிபோயிருப்பார். தங்கையின் இந்த செயலால் பரம்பரை கௌரவமும் மானமும் போனதாக கருதியதால் இவருக்கு காதல் மீது மிகப்பெரிய வெறுப்பு எற்படுகிறது. இதற்காக இந்த ஊரில் யாரும் காதலிக்கக் கூடாது யார் காதலித்தாலும் உடனே அவர்களை துன்புறுத்தி தடுத்து விடுவார். அதுபோக அவருக்கு ஜோதிடத்தில் நம்பிக்கையுடையவர். ஜோதிடர் (மறைந்த மனோபாலா) ராயரின் மகள் ஜாதகப்படி காதலித்து, பெற்றோரின் சம்மதத்துடன் தான் திருமணம் செய்து கொள்வார் என்று ஆணித்தரமாக கூறுகிறார். இந்நிலையில் ஆனந்தராஜ் தனது மகள் சரண்யாவை கிருஷ்ணா காதலிப்பதாக நினைத்து அவரை கொலை செய்ய தன் அடியாட்களிடம் கூறுகிறார். ஏற்கனவே கல்லூரியில் சரண்யாவும், கிருஷ்ணாவும் ஒருவரை ஒருவர் அறிமுகமானவர்கள். சில சந்தர்ப்பங்களில் ஊரில் அவர்கள் இருவரும் ஒன்றாக பயணிக்கும் சூழ்நிலை ஏற்பட இருவரும் காதலிக்க தொடங்குகிறார்கள். அதன் பின் கிருஷ்ணா, ராயரின் கொலை முயற்சியிலிருந்து தப்பித்தாரா? யார் இந்த கிருஷ்ணா?எதற்காக ராயரின் ஊருக்கு வந்தார்? கிருஷ்ணா யாரை காதலித்தார்? அண்ணன் தங்கை ஒன்று சேர்ந்தார்களா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
கிருஷ்ணாவின் சினிமா பயணம் ஒரு ரோலர்- கோஸ்டர் சவாரி என்று தான் சொல்ல வேண்டும். நீண்ட இடைவெளிக்குப்பிறகு ஒரு நல்ல பொழுது போக்கு கதைகளத்தில் பாட்டு, நடனம், காதல், சண்டை என சிறப்பான நடிப்பை கொடுத்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் கிருஷ்ணா.