ராமம் ராகவம் சினிமா விமர்சனம் : ராமம் ராகவம் இன்றைய இளம் தலைமுறையினருக்கு ஒரு தந்தையின் தியாகத்தை உணர வைக்கும் பாடம் | ரேட்டிங்: 2.5/5

0
254

ராமம் ராகவம் சினிமா விமர்சனம் : ராமம் ராகவம் இன்றைய இளம் தலைமுறையினருக்கு ஒரு தந்தையின் தியாகத்தை உணர வைக்கும் பாடம் | ரேட்டிங்: 2.5/5

ஸ்லேட் பென்சில் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் தனராஜ் கொரனானி இயக்க, சமுத்திரக்கனியின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராமம் ராகவம்’. இப்படத்தை ஜிஆர்ஆர் மூவிஸ் சா​ர்பில் ரகு தமிழ்நாடெங்கும் வெளியிடுகிறார்.

நடிகர்கள்: சமுத்திரக்கனி, பிரமோதினி, தன்ராஜ் கொரனானி, மோக்ஷா, சுனில், ஹரீஸ் உத்தமன், சத்யா, ஸ்ரீனிவாஸ் ரெட்டி, பிரித்விராஜ்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:
இசை : அருண்சிலுவேறு
ஒளிப்பதிவு : துர்கா கொல்லிபிரசாத்
பாடல்கள் : யுகபாரதி, முருகன்மந்திரம்
திரைக்கதை இயக்கம் : தன்ராஜ் கொரனானி
தயாரிப்பு : ப்ருத்வி போலவரபு
பத்திரிக்கை தொடர்பு : குணா

கடலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு உறுதியான நேர்மையான அரசாங்க அதிகாரி தசரத ராமன் (சமுத்திரக்கனி). தனது மகன் ராகவா (தனராஜ்) பிறந்ததிலிருந்தே உயிருக்கு உயிராக நேசித்து வருகிறார். ஆனால் அவரது மகன் ராகவனோ பள்ளிப்பருவத்திலேயே தீய பழக்கங்களுக்கு உள்ளாகி, சரியாக படிக்காமல், எந்த வேலையும் செய்யாமல் ஊதாரியாக, புகைத்துக் கொண்டு சூதாடியாகவும் வளர்ந்து பணத்திற்காக பல தவறுகளைச் செய்கிறான். தன் மகனை எதையும் விட அதிகமாக நேசிக்கும் ராமர், அவனை சரியான பாதையில் கொண்டு செல்ல முயற்சிக்கிறார். ஆனால் அது எதுவும் வேலை செய்யவில்லை.  கடைசியில், பணத்திற்காக ராகவா தன் தந்தையின் கையொப்பத்தை போலியாக போட்டு மாட்டி கொள்வதுடன் தந்தையின் பெயருக்கு அவப்பெயர் ஏற்பட காரணமாகிறான். மகனின் இந்த செயலை கண்டு ராமர், ராகவனை அடித்து போலீசில் ஒப்படைக்கிறார். இந்தக் காரணத்திற்காக, தங்கள் தந்தை மீது வெறுப்பும் கோபமும் ஏற்படுகிறது. ராகவா தனது தந்தையைக் கொல்ல முடிவு செய்கிறான். இதற்காக தனது நண்பரான லாரி ஓட்டுநர் தேவா (ஹரிஷ் உத்தமன்) உதவியை நாடி, தேவாவுக்கு சொந்தமாக லாரி வாங்க பணம் கொடுப்பதாக ஆசை வார்த்தை காட்டி சம்மதிக்க வைக்கிறான். இந்த விஷயம் தந்தை தசரத ராமனுக்கு தெரிய வருகிறது. அதை அறிந்த பிறகு ராமர் என்ன செய்தார்? ராகவனால் தன் தந்தையின் அன்பைப் புரிந்துகொள்ள முடிந்ததா? இறுதியில் என்ன ஆயிற்று? இதற்கிடையில் ராகவாவின் காதல் கதை என்ன என்பதை அறிய மீதி படத்தை திரையில் பார்க்க வேண்டும்.

டோலிவுட் திரையுலகில் நகைச்சுவை நடிகராக ஈர்க்கப்பட்ட தன்ராஜ், இப்போது இயக்குனராக மாறி ‘ராமம் ராகவம்’ படத்தை இயக்கியுள்ளார். தன் கதாபாத்திரத்தின் எதிர்மறை அம்சங்களைக் காட்டும் காட்சிகளை முன்னிலைப்படுத்தி தன்ராஜ் சிறப்பாக நடித்துள்ளார்.

சமுத்திரக்கனி வழக்கம் போல் தனது இருப்பை தனது அனுபவத்தை வெளிப்படுத்தி, உணர்ச்சிகரமான காட்சிகளுக்கு நுட்பமான முறையில் திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளார்.

பிரமோதினி, மோக்ஷா, சுனில், ஹரீஸ் உத்தமன், சத்யா, ஸ்ரீனிவாஸ் ரெட்டி, பிரித்விராஜ் உட்பட அனைவரும் தங்கள் பாத்திரத்திற்க்கான அற்புதமான நடிப்பின் மூலம் திரையில் நுட்பமாக தீவிரத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

துர்கா கொல்லிபிரசாத் ஒளிப்பதிவு ஒவ்வொரு காட்சியும் யதார்த்தமாகத் தெரிகிறது.

அருண் சிலுவேருவின் அசையில் யுகபாரதி, முருகன்மந்திரம் பாடல்களும், பின்னணி இசையும் உணர்ச்சிபூர்வமான காட்சிகளை உயர்த்தினார்.

படத்தொகுப்பாளர் மார்த்தாண்ட் கே வெங்கடேஷின் எடிட்டிங் சற்று சிறப்பாக இருந்திருக்கலாம்.

வழக்கமான தந்தை-மகன் உறவை பற்றிய கதைக்களம் என்றாலும் திரைக்கதையில் தந்தையின் அன்பைப் புரிந்து கொள்ளாத, பொறுப்பற்ற முறையில் சுற்றித் திரியும் மகன், இவர்கள் உறவைப் புதிய முறையில் வித்தியாசமாகக் காட்டி யாரும் எதிர்பாராத உணர்ச்சிபூர்வமான க்ளைமேக்ஸ் அமைத்து பார்வையாளர்களை கண்கலங்க வைத்துள்ளார் இயக்குனர் தன்ராஜ் கொரனானி.

மொத்தத்தில் ஸ்லேட் பென்சில் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் ராமம் ராகவம் இன்றைய இளம் தலைமுறையினருக்கு ஒரு தந்தையின் தியாகத்தை உணர வைக்கும் பாடம்.