ராஜபீமா சினிமா விமர்சனம் : ராஜபீமா – கம்பீரம் | ரேட்டிங்: 3/5

0
311

ராஜபீமா சினிமா விமர்சனம் : ராஜபீமா – கம்பீரம் | ரேட்டிங்: 3/5

நடிகர்கள் :
ஆரவ் – ராஜா
அஷிமா நர்வால் – துளசி
நாசர் – சிங்கராயர்
கே.எஸ். ரவிக்குமார் – மந்திர வாசகம்
அருவி மதன் – மாமன்​
யாஷிகா ஆனந்த் – துர்கா
யோகி பாபு – இடி
ஓவியா – ஓவியா
பாகுபலி பிரபாகர் – தயாளன்
சயாஜி ஷின்டே – முதல்வர்
ராகவன் – ராஜா

தொழில்நுட்ப குழுவினர் :
இயக்குனர் – நரேஷ் சம்பத்
தயாரிப்பு நிறுவனம் – சுரபி பிலிம்ஸ்
தயாரிப்பாளர் – மோகன்
ஒளிப்பதிவாளர் – எஸ்.ஆர். சதீஷ் குமார்
இசை – சைமன் கே கிங்
எடிட்டர் – கோபிகிருஷ்ணா
பத்திரிக்கை தொடர்பு – சுரேஷ் சந்திரா, அப்துல் நாசர், டி ஒன்

பொள்ளாச்சியில், ராஜா (ஆரவ்) என்ற இளம் சிறுவன் தன் மீது அதீத பாசத்துடன் இருந்த தாயை இழந்து மனவேதனையில் இருக்கிறான். தந்தை சிங்கராயர் (நாசர்) மற்றும் மாமன் (அருவி மதன்) ராஜாவை மன அழுத்தத்திலிருந்து வெளியேற்றி அவனை சந்தோஷமா வைத்திட பல வழிகளில் முயற்சி செய்து பார்த்தும் அவனை பழைய நிலைக்கு கொண்டு வர முடியவில்லை. ஒரு நாள் தன் தந்தை மற்றும் மாமாவுடன் ஜீப்பில் பள்ளி செல்லும் போது வழியில் ஊர் மக்கள் ஒரு திசையை நோக்கி ஓடிக் கொண்டு இருந்தனர். ஊர் மக்களிடம் என்ன விஷயம் என்று விசாரிக்கும் போது, அவர்கள் ஊருக்குள் ஒரு யானை புகுந்து விட்டது என்று தெரிவித்தனர். இருவரும் திரும்பி பார்க்கும் போது சிறுவன் ராஜா அந்த யானையை நோக்கி தைரியமாக அதன் அருகில் செல்வதை பார்த்து ஆச்சரியம் அடைகிறார்கள். அந்த  தற்செயலான சந்திப்பு ராஜாவுக்கும், யானைக்கும் ஒரு பாசப் பிணைப்பு உருவாகிறது. மீண்டும் தான் இழந்த தாய் பாசம் கிடைத்த உணர்வுடன் அவன் பழைய நிலைக்கு திரும்புகிறான். ராஜாவின் தந்தை சிங்கராயர் யானையை வீட்டில் வைத்து வளர்க்க முடிவு செய்து வனத்துறையினரிடம் முறையான அனுமதியும் பெற்று யானைக்கு பீமா என பெயர் சூட்டி வளர்க்கிறார்கள். அவர்கள் ஒன்றாக வளரும் போது, ராஜா பீமாவுடனான பிரிக்க முடியாத பிணைப்பை வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் பிணைப்பாக மலர்கிறது. பிறகு, வாலிபனானதும் ராஜாவும் பீமாவும் அதிகாரப்பூர்வமற்ற வனவிலங்கு பாதுகாப்பு ஜோடியாக மாறி, வேட்டைக்காரர்களடமிருந்து காட்டை பாதுகாத்துவருகிறார்கள். ஒருநாள் பீமா உதவியுடன் ராஜா காட்டு மிருகங்களை மற்றும் யானைகளை கொன்று விலங்குகளின் கொம்பு மற்றும் யானை தந்தம் கடத்துபவர்களை வனத்துறை அதிகாரியிடம் பிடித்துக் கொடுக்கிறான். இந்நிலையில், ஜோதிடத்தில் அதீத நம்பிக்கை கொண்டு அதன்படி தினந்தோறும் ஒரு வண்ணத்தில் துண்டு போட்டுக் கொண்டு வலம் வரும் அதிகார வெறி கொண்ட வனத்துறை அமைச்சர் மந்திர வாசகம் (கே.எஸ். ரவிக்குமார்) தனது பதவிக்காக எதையும் செய்யக் கூடியவர். அவரது ஜாதகத்தில் கிரக நிலை சரி இல்லாததால் அவரது பதவிக்கு ஆபத்து வரும் என்று அவரது ஆஸ்தான ஜோதிடர் எச்சரிக்கை விடுகிறார். அதற்கு பரிகாரமாக ஒரு குறிப்பிட்ட யானையை பலியிடுவது மூலம் முதலமைச்சராகும் பாதையை அமைக்கும் என்கிறார். ஜோதிடர் யோசனைப்படி அந்த குறிப்பிட்ட அடையாளம் உள்ள யானையை தேடுகிறார்கள். அப்போது அமைச்சர் மந்திர வாசகத்துக்கு ஏற்கனவே ஒரு சந்தர்ப்பத்தில் ஜோதிடர் குறிப்பிட்ட அடையாளம் உள்ள பீமா பற்றிய ஞாபகம் வருகிறது. உடனே வன அதிகாரிகள் மற்றும் உள்ளூர் வேட்டைக்காரர்கள் மூலம், பீமாவுக்கு போதைப்பொருளை ஊசி மூலம் அதிகப்படியாக செலுத்துகிறார்கள். பிறகு பீமாவுக்கு மதம் பிடித்துள்ளது என்று சொல்லி வனத்துறை அதிகாரிகள் பீமாவை புத்துணர்வு முகாமுக்கு அதிரடியாக அழைத்து செல்கிறார்கள். விஷயம் அறிந்த ராஜா பதறியடித்துக் கொண்டு தனது அன்புக்குரிய நண்பனைத் தேடி முகாமுக்கு வருகிறான். அங்கு அவர் கூறும் அடையாளத்தை வைத்து வன அதிகாரி பீமா என்ற யானையை காட்டுகிறார்கள். யானையை பார்த்த ராஜா இது என்னுடைய பீமா இல்லை என்று அதிகாரிகளிடம் கூறுகிறான். மேலும் பீமா அங்கு இல்லையென்பது ராஜாவுக்கு தெரியவருகிறது. அதன் பின் ராஜா தன் பீமாவை அவர்கள் எங்கு வைத்துள்ளார்கள், பீமாவை என்ன செய்தார்கள் என்ற குழப்பத்தில் தேடும் போது என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.

ஆரவ் ராஜாவாக தனது கதாபாத்திரத்திற்கு ஒரு திடமான தீவிரத்தை கொண்டு வருகிறார். மேலும் பீமாவுடனான அவரது கெமிஸ்ட்ரி படத்தின் உணர்ச்சி அடித்தளத்தை உருவாக்குகிறது.

மூடநம்பிக்கை, அதிகார வெறி கொண்ட வனத்துறை அமைச்சர் மந்திர வாசகமாக கே.எஸ். ரவிக்குமார் அவருக்கு உண்டான பாணியில் வில்லத்தனத்தில் அசத்தி உள்ளார்.

ஓவியா ஒரு பாடலுக்கு ஆடி விட்டு போகிறார். அதே போல அமைச்சரின் வளர்ப்பு மகனாக இடியாக யோகி பாபு சும்மா நகைச்சுவைக்காக வந்து போகிறார்.

தந்தை சிங்கராயராக நாசர், காதலி துளசியாக அஷிமா நர்வால், மாமாவாக அருவி மதன், சிறப்பு தோற்றத்தில் துர்காவாக யாஷிகா ஆனந்த், கடத்தல் வேட்டைக்காரன் தயாளனாக பாகுபலி பிரபாகர், முதல்வராக சயாஜி ஷின்டே,  என அனைவரும் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தியுள்ளனர். நேர்த்தியான நடிப்புகள் மூலம் அதை சிறப்பாக பதிவு செய்துள்ளார்.

தொழில்நுட்ப ரீதியாக ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர். சதீஷ் குமார், இசையமைப்பாளர் சைமன் கே கிங் இசை மற்றும் பின்னணி இசை, படத்தொகுப்பாளர் கோபிகிருஷ்ணா ஆகியோரின் பணி திரைக்கதைக்கு மேலும் வசீகரத்தை சேர்க்கிறது.

வழக்கமான தாய் பாசம், அன்பு, வனவிலங்கு உடனான பாசப்பிணைப்பு, மற்றும் மூடநம்பிக்கை கலந்த கதைக்களத்தில் பரபரப்பான திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் இயக்குனர் நரேஷ் சம்பத்.

மொத்தத்தில் சுரபி பிலிம்ஸ் எஸ்.மோகன் தயாரித்துள்ள ராஜபீமா – கம்பீரம்.