ரகு தாத்தா விமர்சனம் : ரகு தாத்தா ஒரு நல்ல பொழுதுபோக்கு படம் | ரேட்டிங்: 2.5/5
ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரித்திருக்கும் ரகு தாத்தா படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சுமன் குமார்
கீர்த்தி சுரேஷ் – கயல்விழி பாண்டியன், எம்.எஸ்.பாஸ்கர் – ரகோத்தமன், தேவதர்ஷினி – அலமேலு, ரவீந்திர விஜய் – தமிழ் செல்வன், ஆனந்தசாமி – ரங்கநாதன்
தொழில்நுட்ப கலைஞர்கள்:- கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: விஜய் சுப்ரமணியம், இசையமைப்பாளர்: ஷான் ரோல்டன், நிர்வாக தயாரிப்பாளர்: ரியா கொங்கரா, இணை இயக்குனர் – துர்கேஷ் பிரதாப் சிங், ஒளிப்பதிவு இயக்குனர்: யாமினி யக்ஞமூர்த்தி, படத்தொகுப்பு : டி.எஸ். சுரேஷ், தயாரிப்பு வடிவமைப்பாளர்: ராம்சரந்தேஜ் லபானி, விளம்பர எடிட்டர்: ஸ்னீக் பீக், ஆடியோகிராஃபர்கள்: ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி, எஸ். சிவகுமார் (ஏஎம் ஸ்டுடியோஸ்) ,ஆடை வடிவமைப்பாளர்: பூர்ணிமா, கீர்த்தியின் ஆடை வடிவமைப்பாளர்: ஸ்ருதி மஞ்சரி, வசனம்: மனோஜ் குமார் கலைவாணன், போஸ்ட் புரொடக்ஷன் சூப்பர்வைசர்: ஓ.கே. விஜய்,விளம்பர வடிவமைப்பாளர்: ஜெயன், ஸ்டில் போட்டோகிராபர் – விஷ்ணு எஸ் ராஜன், பி ஆர் ஒ யுவராஜ்
1960களின் காலகட்டத்தில் கதைக்களம் ஆரம்பிக்கிறது. தமிழ்நாட்டின் வள்ளுவன்பேட்டை என்ற ஊரில் வங்கியில் வேலை செய்து வருகிறார் கயல்விழி பாண்டியன் (கீர்த்தி சுரேஷ்). பெற்றோர், அண்ணன் மற்றும் ரகு தாத்தா (எம்.எஸ். பாஸ்கர்) ஆகியோருடன் கயல்விழி வசிக்கிறார். இவர் தமிழ் மீது மிகுந்த பற்று கொண்டவராகவும் அதே சமயம் இந்தியை எதிர்க்கும் பெண்ணாகவும் இருக்கிறார். மேலும், ஒரு பெண்ணியவாதியாக கயல், ஒரு பெண்ணின் படைப்புகளை மக்கள் படிக்க மாட்டார்கள் என்று எண்ணி க.பாண்டியன் என்ற புனைப்பெயரில் கதைகளை எழுதியும் வருகிறார். தன் தாத்தாவின் மேல் அளவு கடந்த பாசம் வைத்திருக்கும் கயல் ஊரில் ஹிந்தி திணிப்புக்கு எதிராக போராடி, அங்கே திறக்கப்பட்ட ஏக்தா சபையை ஊர் மக்களை திரட்டி தன் தாத்தாவுடன் சேர்ந்து மூட வைத்து பிரபலமாகிறார். கயல் தனது எழுத்து வெற்றியையும் சுதந்திரத்தையும் அனுபவிக்கும் போது அவரின் எழுத்துக்களுக்கும் கொள்கைகளுக்கும் ரசிகனாக காட்டிக் கொள்ளும் பொறியாளரான செல்வன் (ரவீந்திர விஜய்) நட்பாக பரிச்சயமாகிறார். திருமணத்தில் ஈடுபாடு இல்லாத கயல்விழிக்கு பெற்றோரின் தொடர்ச்சியான அழுத்தம் அவரது மகிழ்ச்சியைத் தடுக்கிறது. இந்நிலையில் ரகு தாத்தாவுக்கு வயிற்றில் புற்றுநோய் இருப்பதை குடும்பத்தினர்களுக்கு தெரிய வர அதிர்ச்சியாகின்றனர். தனது தாத்தாவின் உடல் நிலையை கருத்தில் கொண்டு, குடும்ப அழுத்தத்திற்கு அடிபணிந்து, திருமணம் செய்து கொள்ள சம்மதம் சொல்லுகிறார். வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை நிராகரித்து மக்களின் நலனுக்காக உழைக்கும் மற்றும் அன்பான அனைத்தையும் நம்பும் பொறியாளரான தனது நண்பரான செல்வனை (ரவீந்திர விஜய்) திருமணம் செய்ய முடிவு செய்கிறார். ஆனால் தமிழ்ச்செல்வனும் பிற ஆண்களைப் போலவே பிற்போக்கு சிந்தனை கொண்டவராக இருப்பதை அறிந்ததும் அதிர்ச்சி அடைந்து அவர் அதிரடி முடிவு ஒன்றை எடுக்கிறார். அந்த முடிவு என்ன? அந்த முடிவு சரியானதா, அதனால் வரும் சிக்கல்கள் என்னென்ன, அதை கயல்விழி எப்படி சமாளிக்கிறார், ரகு தாத்தாவின் கடைசி ஆசை நிறைவேறியதா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
கீர்த்தி சுரேஷ், ரவீந்திர விஜய் ஆகியோர் கேரக்டர், இயல்பாக இருக்கிறது. இருவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
தாத்தா எம்.எஸ்.பாஸ்கர், தோழி தேவதர்ஷினி, அண்ணன் ஆனந்த்சாமி, அவர் மனைவி இஸ்மத் பானு உட்பட அனைவரும் தங்களது கதாபாத்திரத்தில் தனித்து ஸ்கோர் செய்கின்றனர்.
பீரியட் கதைக்கான உணர்வை கச்சிதமாக திரையில் கொண்டுவந்துள்ளார் ஒளிப்பதிவாளர் யாமினி யக்ஞமூர்த்தி.
இசை மற்றும் பின்னணியில் ஏமாற்றி விட்டார் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்.
‘‘இந்தியும் ஒரு மொழி, கற்பது கற்காதது அவரவர் இஷ்டம். ஹிந்தி வெறுக்கவில்லை ஹிந்தி திணிப்பை தான் வெறுக்கிறோம்” என்ற மையக்கருவை வைத்து நகைச்சுவை கலந்த திரைக்கதை அமைத்து கதை நிகழும் காலத்தை மனதில் வைத்து ஆடை, ஒப்பனை கலை பொருட்கள் என அனைத்தையும் நேர்த்தியாக கையாண்டு படைத்துள்ளார் அறிமுக இயக்குநர் சுமன் குமார்.
மொத்தத்தில் ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரித்திருக்கும் ரகு தாத்தா ஒரு நல்ல பொழுதுபோக்கு படம்.