யூகி திரைப்பட விமர்சனம்: யூகி முழுமையான த்ரில்லர் அனுபவம் தர தவறிவிட்டது | ரேட்டிங்: 2.5/5
யூகி இயக்குனர் ஜாக் ஹாரிஸ் இயக்கத்தில் கதிர், நட்டி, நரேன், கயல் ஆனந்தி, பவித்ரா லட்சுமி, ஆத்மியா, முனிஷ்காந்த், நமோ நாராயண் மற்றும் வினோதினி ஆகியோர் நடித்துள்ளனர்.
புஷ்பராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவாளராகவும், ஜோமின் எடிட்டராகவும், கோபி ஆனந்த் கலை இயக்குநராகவும் இப்படத்தின் தொழில்நுட்பக் குழுவினராக பணியாற்றியுள்ளனர். படத்திற்கு ரஞ்சன் ராஜ் இசையமைத்துள்ளார்.
ராஜ்தாஸ் குரியாஸ், சிஜு மேத்யூ, நேவிஸ் சேவியர், லவன் மற்றும் குசன், திரைப்பட தயாரிப்பாளர் சாக் ஹாரிஸ் ஆகியோர் இணைந்து படத்தைத் தயாரித்துள்ளனர். மக்கள் தொடர்பு-சுரேஷ் சந்திரா, ரேகா டிஒன்.
புஷ்பராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவாளராகவும், ஜோமின் எடிட்டராகவும், கோபி ஆனந்த் கலை இயக்குநராகவும் இப்படத்தின் தொழில்நுட்பக் குழுவினராக பணியாற்றியுள்ளனர். படத்திற்கு ரஞ்சன் ராஜ் இசையமைத்துள்ளார்.
ராஜ்தாஸ் குரியாஸ், சிஜு மேத்யூ, நேவிஸ் சேவியர், லவன் மற்றும் குசன், திரைப்பட தயாரிப்பாளர் சாக் ஹாரிஸ் ஆகியோர் இணைந்து படத்தைத் தயாரித்துள்ளனர். மக்கள் தொடர்பு-சுரேஷ் சந்திரா, ரேகா டிஒன்.
பிரபல நடிகரான ஜான் விஜய், அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டதில் இருந்து யூகி தொடங்குகிறது. படத்தில் சில நிமிடங்களில் நான்கு முக்கியமான கதாபாத்திரங்கள் நமக்கு அறிமுகமாகின்றன – ஒரு துப்பறியும் நபர் (நரேன்), சேது (நட்டி), காணாமல் போன சிலை வழக்கில் சந்தேகப்பட்டியலில் உள்ள போலீஸ் அதிகாரி (பிரதாப்போத்தன்) மற்றும் ஒரு சப் இன்ஸ்பெக்டர் (கதிர்). இந்த கதாபாத்திரங்கள் அனைத்தும் ஒரு பொதுவான நோக்கத்தால் இணைக்கப்பட்டுள்ளதற்கான காரணம் காணாமல் போன கார்த்திகா (ஆனந்தி) கண்டுபிடிப்பது – துப்பறியும் நந்தகுமார் (நரேன்) எஸ்ஐ ராஜ்குமார் (கதிர்) மற்றும் ஷாலினி (ஆத்மியா) ஆகியோருடன் சேர்ந்து காணாமல் போன வழக்கின் மர்மத்தை நெருங்கும்போது, ஒரு பெண் டாக்டரின் தற்கொலை மற்றும் மருத்துவமனை செவிலியர் வெளிப்படுத்திய தகவல்கள் கார்த்திகாவின் வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சிகரமான அத்தியாயங்களை அவிழ்த்து விடுகின்றன. கார்த்திகா யார், உண்மையில் அவளுக்கு என்ன நடந்தது? பிரதாப் போத்தன் கண்டுபிடிக்க சொல்லும் பெண் யார்? சிலை கடத்தலில் ஈடுபட்ட வழக்கைத் தீர்த்தது யார்? ஜான் விஜய் எதற்காக கொல்லப்பட்டார்? கார்த்திகாவின் கணவன் யார்? எல்லாக் கேள்விகளுக்கும் பதில்கள் அறிய மீதி படத்தை காண்க.
துப்பறியும் நபராக நரேனை சுற்றித்தான் மொத்தத் திரைக்கதையும் நகர்கிறது. அவரது பாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார்.
சேதுவாக நட்டியின் நடிப்பு பார்வையாளர்களை கவரும் அளவுக்கு சுவாரஸ்யமாக உள்ளது.
முதல் பாதியில் கதிருக்கு அதிக ஸ்கோப் இல்லை என்றாலும், படம் முன்னேறும்போது அவரது கதாபாத்திரம் வலுவடைகிறது. கிளைமாக்ஸ{க்கு முந்தைய காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
பவித்ரா லட்சுமி தனக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார்.
கார்த்திகாவாக வரும் ஆனந்தியின் நடிப்பு மிகவும் இயல்பாகவும் பரிதாபத்தையும் ஏற்படுத்தி பிரமிக்க வைக்கிறது.
கார்த்திகாவாக வரும் ஆனந்தியின் நடிப்பு மிகவும் இயல்பாகவும் பரிதாபத்தையும் ஏற்படுத்தி பிரமிக்க வைக்கிறது.
ஆத்மியா, வினோதினி, ஜான் விஜய் ஆகியோர் கொடுக்கப்பட்ட பாத்திரங்களுக்கு நியாயம் சேர்த்துள்ளனர்.
ரஞ்சின் ராஜின் இசை, டான் வின்சென்ட்டின் பின்னணி இசையும் படத்தின் முழு உணர்வையும் உயர்த்துகிறது.
புஷ்பராஜ் சந்தோஷின் பிரேம்கள் படம் பார்ப்பதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது.
வாடகைத் தாய் மூலம் மக்கள் எவ்வாறு சுரண்டப்படுகிறார்கள் என்பதையும் படம் தொடுகிறது. யோசனை சுவாரஸ்யமாக இருந்தாலும், இந்த த்ரில்லரை இயக்குனர் ஜாக் ஹாரிஸ் கதைக்களத்தில் புத்துணர்ச்சியை புகுத்த முடியவில்லை. திரைக்கதை துண்டு, துண்டாக நகர்வதால் படத்தின் மீது எந்த விதமான ஒட்டுதலும், ஈர்ப்பும் ஏற்படவில்லை.
மொத்தத்தில் ஏஏஆர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜூவிஸ் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து ஜூவிஸ் ஃபிலிம் ஹவுஸ் தயாரித்துள்ள யூகி முழுமையான த்ரில்லர் அனுபவம் தர தவறிவிட்டது.