யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைவிமர்சனம்: ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ அனைவரும் பார்க்க வேண்டிய அகதிகளின் உணர்வு பூர்வமான படம் | ரேட்டிங்: 3.5/5

0
415

யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைவிமர்சனம்: ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ அனைவரும் பார்க்க வேண்டிய அகதிகளின் உணர்வு பூர்வமான படம் | ரேட்டிங்: 3.5/5

நடிகர்கள்: விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ், மகிழ் திருமேனி, விவேக், ரகு ஆதித்யா, மதுரா, கனிஹா, ரித்விகா, மோகன் ராஜா, கரு.பழனியப்பன், சின்னி ஜெயந்த், வித்யா பிரதீப், இமான் அண்ணாச்சி, ராஜேஷ்.
இயக்கம்: வெங்கட கிருஷ்ண ரோகந்த்
இசை: நிவாஸ் கே. பிரசன்னா
தயாரிப்பு: சந்தாரா ஆர்ட்ஸ் எஸ்.இசக்கி துரை
மக்கள் தொடர்பு : நிகில்இலங்கையை சேர்ந்த புனிதன் (விஜய்சேதுபதி) லண்டன் இசை பள்ளியில் சேர்ந்து இசையை கற்றுக் கொள்ள ஆசைப்படுகிறான். ஆனால், புறப்படும் வழியிலேயே இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்படும் சிறுவன் சிறையில் இருந்து இளைஞனாக வெளியே வருகிறார். அங்கிருந்து கள்ளத் தோணி வழியாக கேரளாவுக்கு செல்கிறார். புனிதன் மயங்கிய நிலையில் மலையாள மீனவர்களால் மீட்கப்பட்டார், அவர்கள் அவரை கேரளாவில் உள்ள ஒரு இசைக்கடை உரிமையாளரிடம் அழைத்துச் செல்கிறார்கள். புனிதனின் இசை அறிவால் கவரப்பட்ட கடைக்காரர் அவருக்கு கடையில் வேலை கொடுத்து இங்கிலாந்தில் நடக்கும் சர்வதேச இசைப் போட்டியில் பங்கேற்க ஊக்குவிக்கிறார். புனிதனின் இசை கவனிக்கப்பட்டு, போட்டியில் பங்கேற்க அழைக்கப்படுகிறார். ஆனால் உண்மையான பிரச்சனை அங்குதான் தொடங்குகிறது. ஒரு கட்டத்தில் தமிழகத்துக்கு வரும்போது அடையாள ஆவணங்கள் எதுவும் இல்லாததால் போலீஸால் கைது செய்யப்படுகிறார். விஜய்சேதுபதியை லாக்கப்பில் இருந்து வெளியே அழைத்து வரும் இன்னொரு இலங்கை தமிழரான கரு பழனியப்பன் அவருக்கு கிருபாநிதி என்ற பெயரையும் அதற்குரிய ஆவணங்களையும் கொடுத்து அந்த பெயரில் அகதி முகாமில் தங்க அரசுக்கு விண்ணப்பிக்கும்படி கூறுகிறார். அதுவே ஆபத்தாக மாறுகிறது. கிருபாநிதியான விஜய்சேதுபதியை தீர்த்து கட்ட போலீஸ் அதிகாரி ராஜன் (மகிழ் திருமேனி) தேடி அலைகிறார். அதன் பின்னர் கிருபாநதி என்கிற பெயரில் அடையாளத்தை பெற மீண்டும் கொடைக்கானலில் உள்ள கேரட் பண்ணையில் பணிபுரியும் கனகராணி (கன்னிகா) என்ற நபரை கண்டுபிடிக்கும் தேடலைத் தொடங்குகிறார். வழியில், இசைக்கலைஞரான ஜெசியை சந்திக்கிறார் அத்துடன் ஜெசியுடன் பயணிக்கிறார். அப்போது ஒரு புகழ்பெற்ற உள்ளூர் தேவாலயத்தில் இசைக்கலைஞரான மாடில்டாவை (மேகா ஆகாஷ்) சந்திக்கிறார். இசையின் மீதான அவர்களின் அன்பால் ஒன்றிணைந்து, அவர்கள் ஒருவருக்கொருவர் புரிந்துக் கொள்கிறார்கள். லண்டனில் நடக்கும் ஒரு இசைப் போட்டியில் கலந்து கொள்ள நினைக்கும் புனிதன் பல்வேறு முயற்சிகள் செய்து அங்கே செல்ல முயலும் போது அவருக்கான அடையாளத்தின் ஆதாரங்களைக் கொடுக்க முடியவில்லை. கிருபாநிதி யார்? எதற்காக விஜய்சேதுபதியை மகிழ் திருமேனி கொலை செய்ய முயற்சிக்கிறார்? லண்டன் இசை போட்டியில் பங்கேற்க வேண்டும் என்ற கிருபாநிதியின் கனவு நிறைவேறியதா? என்பதே படத்தின் மீதி கதை

விஜய்சேதுபதி புனிதன் என்ற அழுத்தமான கதாபாத்திரத்தில் தனக்குரிய அடையாளம் தேடி அலைதல், லண்டன் இசை அரங்கில் அகதிகளின் துயரங்களை வெளிப்படுத்தும்போது அபாரமான நடிப்பின் மூலம் இதயங்களை கனக்க வைக்கிறார்.வசீகரிக்கும் மேகா ஆகாஷ், மிடுக்கான போலீஸ் அதிகாரியாக வலம் வந்து கிருபாநிதியை கொல்ல வெறித்தனம் காட்டும் மகிழ்திருமேனி, அனுபவ நடிப்பால் மனதை கவரும் சின்னி ஜெயந்த், குணசித்திர நடிப்பால் கவனம் பெறும் மறைந்த நடிகர் விவேக், இயக்குனர் மோகன்ராஜா, திரையில் சிறிது நேரம் தோன்றினாலும் கலக்கும் இயக்குனர் கரு பழனியப்பன், ராஜேஷ், கனிகா, தபியா மதுரா, ரித்விகா, இமான் அண்ணாச்சி, அஜய்ரத்னம், சம்பத்ராம் ஆகியோர் அந்தந்த கதாபாத்திரங்களில் நிறைவான நடிப்பை வழங்கி கதை விறுவிறுப்பாக செல்ல உதவி உள்ளனர்.

தொழில்நுட்ப கண்ணோட்டத்தில், நிவாஸ் கே பிரசன்னா இசை மற்றும் பின்னணி இசையும் படத்துக்கு கூடுதல் பலம்.
வெற்றி வேல் மகேந்திரன் கேமரா யுத்த களம், கடல், காடுகள், நகரம் என்று பல இடங்களில் சுழன்று திரைக்கதைக்கு பெரிய பலம் சேர்த்து உள்ளனர்.  கடல் ஓரம் தலை உடைந்த புத்தர் சிலை, நிலச்சரிவில் சிக்கிய தேவாலயம் ஆகியவை தத்ரூபமாக வடிவமைத்த கலை இயக்குனர் கே.வீரசமர் உழைப்பு பாராட்டுக்குரியது.
யாதும் ஊரே யாவரும் கேளிர் ஒரு பொருத்தமான மற்றும் குறிப்பிடத்தக்க செய்தியைக் கொண்டுள்ளது, இலங்கை தமிழ் அகதிகள் பிரச்சினைகளை பேசும் படம். அகதிகளின் வாழ்க்கை மற்றும் அவர்களின் ஆழ்ந்த வாழ்வியல் போராட்ட வலிகளும் போராட்டங்களால் அகதிகள் எதிர்கொள்ளும் அடையாள நெருக்கடியான ஒரு பொருத்தமான மற்றும் சிந்தனையைத் தூண்டும் பிரச்சனையை சமூக அக்கறையுடன் அச்சமின்றி திரையில் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர் வெங்கட கிருஷ்ணா ரோகாந்த்.
மொத்தத்தில், சந்தாரா ஆர்ட்ஸ் எஸ்.இசக்கி துரை தயாரித்துள்ள ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ அனைவரும் பார்க்க வேண்டிய அகதிகளின் உணர்வு பூர்வமான படம்.