யசோதா விமர்சனம் : யசோதா உணர்வுபூர்வமான சஸ்பென்ஸ் கலந்த ஃபீல் குட் எமோஷனல் டிராமா | ரேட்டிங்: 3.5/5

0
289

யசோதா விமர்சனம் : யசோதா உணர்வுபூர்வமான சஸ்பென்ஸ் கலந்த ஃபீல் குட் எமோஷனல் டிராமா | ரேட்டிங்: 3.5/5

நடிகர்கள்: சமந்தா, வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீPபாதா, பிரியங்கா ஷர்மா.

தயாரிப்பாளர்: சிவலெங்கா கிருஷ்ண பிரசாத்

இசையமைப்பாளர்கள்: மணி சர்மா

ஒளிப்பதிவு: எம்.சுகுமார்

எடிட்டர்: மார்த்தாண்டன். கே.வெங்கடேஷ்

கலை : அசோக்

இயக்கம்: ஹரி-ஹரிஷ்

பிஆர்ஒ-சுரேஷ் சந்திரா, ரேகா

சமந்தா நாயகியாக நடித்துள்ள படம் யசோதா ரசிகர்களை எந்தளவுக்கு கவர்ந்துள்ளது என்பதை விமர்சனத்திற்கு சென்று பார்ப்போம்.

“யசோதா” வித்தியாசமாகத் தொடங்குகிறது, ஏனெனில் அது தொடர்பில்லாத இரண்டு கதைகள் – ஒரு கொலை விசாரணை மற்றும் வாடகைத்தாய் மைய மோசடி. சமந்தா (யசோதா) தன் சகோதரியின் அறுவை சிகிச்சைக்காக வாடகைத் தாய்க்கு ஒப்புக்கொள்கிறார். ஈவா வாடகைத் தாய் மருத்துவ மையத்திற்;கு செல்கிறார். இந்த வாடகைத்தாய் மருத்துவமனையை மது (வரலக்ஷ்மி சரத் குமார்) பராமரிக்கிறார். . யசோதா இந்த மையத்தில் கௌதம் (உன்னி முகுந்தன்) என்ற அழகான மருத்துவரால் சிகிச்சை பெறுகிறார்,   ஈவா என்று முதலில் பெயரிடப்பட்ட இந்த வாடகைத்தாய் மையம் யாருக்கும் தெரியாமல் இயங்கி வருகிறது. ஆனால் இந்த வாடகைத் தாய் பண்ணைக்குள் பல அநியாயங்கள் நடப்பதையும் இதன் பின்னணியில் ஏதோ சதி இருப்பதை யசோதா உணர்கிறாள். வாடகைத்தாய் என்ற பெயரில் நடக்கும் குற்றங்கள் என்ன? யசோதா என்ன செய்தாள்?, யார் இந்த உண்மையான யசோதா?, ஏன் இப்படியெல்லாம் செய்கிறாள்?, கடைசியாக வாடகைத்தாய் என்ற பெயரில் நடந்த சட்டவிரோத தொழிலை எப்படி நிறுத்தினாள்? என்பதுதான் மீதிக்கதை.

யசோதாவாக நடித்த சமந்தா தனது பாத்திரத்திற்கு ஏற்றவாறு மாறுபாடுகளைக் காட்டி அற்புதமான நடிப்பால் கவர்கிறார். கதை தன்னைச் சுற்றியே சுழல்வதால் கதையின் பாரத்தை தன் தோளில் சுமந்துள்ளார். அவர் தனது கதாபாத்திரத்தின் இரண்டு அம்சங்களிலும் கச்சிதமாக பொருந்தி முதல் பாதியில் அப்பாவி இளம் கருவுற்றபெண்ணாக, இரண்டாம் பாதியில் ஆக்ரோஷமான ஆதிக்கம் செலுத்தும் உடல்வாகுடன்; ஆக்ஷனில் கச்சிதம். சில எமோஷனல் காட்சிகளை சிறிய எக்ஸ்பிரஷன்களுடன் சமந்தா சிறப்பாக செய்துள்ளார்.

வில்லன் வேடத்தில் தோன்றிய உன்னி முகுந்தன், தனது தோற்றத்திற்கு ஏற்றவாறு உடலமைப்பையும் மிக சிறப்பாக மாற்றியிருக்கிறார்.

மற்றொரு முக்கிய வேடத்தில் நடித்த வரலக்ஷ்மி சரத்குமார், தனது நடிப்பால் கவர்ந்து, தனது முக்கியமான கதாபாத்திரத்திற்கு வில்லத்தனத்தில் அமைதியாக பயணித்து இந்தப் படத்தை கச்சிதமாக செய்துள்ளார்.

ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத் ராஜ் மற்றும் சத்ரு ஆகியோர் தங்கள் நடிப்பால் கவர்ந்து, தங்கள் பாத்திரங்களுக்கு முழு நீதி செய்திருக்கிறார்கள்.

கலை இயக்குனர் அசோக், எம் சுகுமாரின் ஒளிப்பதிவு, மணி ஷர்மாவின் ஸ்கோர் படத்திற்கு நன்றாக உதவுகின்றன. பின்னணி இசை மிகவும் கவனம் ஈர்க்கிறது. யானிக் பென்னின் அதிரடி சண்டைக்காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

இயக்குனர்களான ஹரியும், ஹரிஷ{ம் வித்தியாசமான கதைக்களத்தில் கதை எழுதியுள்ளனர். ஒரு சமூகப் பிரச்சினை தொடர்பாக மிகவும் சுவாரஸ்யமான கருப்பொருள் எடுத்துள்ளனர்.பல திரைப்படங்கள் மருத்துவ மாஃபியாக்கள் மற்றும் தீய மருத்துவர்களின் கருப்பொருளைக் கையாண்டுள்ளன. வாடகைத் தாய்மை சார்ந்த படங்களும் வெளிவந்துள்ளன. “யசோதா” இந்த அனைத்து கூறுகளையும் ஒருங்கிணைத்து கட்டமைப்பிற்குள் மிகவும் வித்தியாசமான கதையை சமூகத்தில் நடக்கும் சில முறைகேடுகளை அநியாயங்களை நயவஞ்சகமான உலகத்தை வெளிச்சம் போட்டு காட்ட திரைக்கதை அமைத்து சிலிர்ப்பாக படமாக்கியும் இயக்கியும் ஹரி மற்றும் ஹரிஷ{ம் கொடுத்துள்ளனர்.

மொத்தத்தில் ஸ்ரீதேவி மூவிஸ் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரித்துள்ள ‘யசோதா” உணர்வுபூர்வமான சஸ்பென்ஸ் கலந்த ஃபீல் குட் எமோஷனல் டிராமா.