மை டியர் பூதம் விமர்சனம்: மை டியர் பூதம் நேர்த்தியான கற்பனை கலந்த மாயாஜாலத்துடன் மனம் மயக்கும் பூதம் |மதிப்பீடு: 2.5/5

0
368

மை டியர் பூதம் விமர்சனம்: மை டியர் பூதம் நேர்த்தியான கற்பனை கலந்த மாயாஜாலத்துடன் மனம் மயக்கும் பூதம் |மதிப்பீடு: 2.5/5

அபிஷேக் பிலிம்ஸ் பேனரில் ரமேஷ் பி பிள்ளை தயாரித்து மஞ்சப்பை மற்றும் கடம்பன் புகழ் என்.ராகவன் இயக்கத்தில் பிரபுதேவா, அஸ்வந்த் அசோக்குமார், ரம்யா நம்பீசன், ஆலியா, சுரேஷ் மேனன், சம்யுக்தா, இமான் அண்ணாச்சி , பரம் குகனேஷ், சாத்விக், சக்தி, கேசிதா ஆகியோர் நடித்துள்ளனர். இசை: டி.இமான். ஒளிப்பதிவு : யு.கே.செந்தில்குமார், எடிட்டிங் : சாம் லோகேஷ்,கலை இயக்கம் : ஏ ஆர் மோகன், வசனம் : தேவ ஹாசா, பிஆர்ஒ-நிகில்.

பூதங்களின் தலைவராக இருக்கும் கர்கிமுகி தவமிருந்து பெற்ற பிள்ளை கிங்கினி மகர லோகத்தில் விளையாட ஆசைப்பட அழைத்துச் செல்கிறார். அங்கே எதிர்பாராத விபரீதத்தால் ஒரு முனிவரின் தவம் களைய கிங்கினிக்கு சாபம் கொடுக்கிறார். கர்கிமுகி முனிவரிடன் தன் மகனை விட்டுவிடும்படியும், தனக்கு அந்த சாபத்தை கொடுக்குமாறு மன்றாடுகிறார். முனிவரும் கர்கிமுகியை சிலையாக மாறி பூலோகத்தில் இருக்கவேண்டும் என்றும் அவரை கண்டு எடுக்கும் நபரால் விடுதலையாகும் 48 நாளில் ஒரு மந்திரத்தை அந்த நபர் உச்சரித்தால் மீண்டும் பூதலோகத்திற்கு திரும்பி வரலாம் மகனுடன் வாழலாம் என்று கூறி சாபம் ஈடுகிறார். பூமியில் விழுந்து கிடக்கும் கர்கிமுகியை பள்ளி மாணவனான பேச்சு குறைபாடு இருக்கும் திருநாவுக்கரசு எடுத்து விமோசனம் தருகிறான். அவனுடனே பயணிக்கும் கர்கிமுகி தோழனாக இருந்து சாகசங்கள் செய்து மகிழ்விக்கிறார். கர்கிமுகி சாபத்திலிருந்து விடுபட திருநாவுக்கரசு சரியாக உச்சரிக்க வேண்டும், ஆனால் திருநாவுக்கரசால் அந்த மந்திரத்தை தடுமாறாமல் சொல்ல முடியாமல் தவிக்கிறான். இறுதியில் திருநாவுக்கரசு மந்திரத்தை சொல்லி கர்கிமுகியை விடுதலை செய்தானா? கர்கிமுகி தன் மகன் கிங்கினியாவுடன் சேர்ந்தாரா? க்ளைமேக்சில் நடந்த விபரீதம் என்ன? என்பதே மீதிக்கதை.

பிரபுதேவா குதூகலம் மிக்க பூதராஜாவாக வித்தியாசமான வெள்ளை, சிகப்பு கலந்த உடையலங்காரம், மொட்டை தலையின் நடுவே நீண்ட பின்னல், முகபாவனை, ஒப்பனை, உடலசைவு, நடனம் என்று குஷி படுத்தும் கதாபாத்திரம் குழந்தைகளின் மனம் கவர்கிறார். இதற்காக பல மெனக்கெடல்கள், பணிவான,கனிவான பேச்சு, சிறுவனை உற்சாகப்படுத்தி குறைப்பாட்டை போக்க பாடுபடுவது என்று அசத்தியுள்ளார்.

திக்கி பேசும் குறைபாடு கொண்ட சிறுவன் திருநாவுக்கரசாக அஸ்வந்த் அசோக்குமார் முதிர்ந்த தேர்ச்சியான நடிப்பு,  திக்கும் மேனரசிங்களை தன் முகத்தில் அசலாக காட்டி சிலிர்க்க வைக்கிறார். வசன உச்சரிப்பு கச்சிதம் அதுமட்டுமில்லாமல் நீண்ட வசனத்தையும் தப்பில்லாமல் தடுமாறாமல் சொல்லும் அற்புத ஞாபக சக்தியால் நடிப்பில் மிஞ்சிவிடுகிறார். வெல்டன்.

அம்மாவாக ரம்யா நம்பீசன், ஆலியா, சுரேஷ் மேனன், சம்யுக்தா, இமான் அண்ணாச்சி , பரம் குகனேஷ், சாத்விக், சக்தி, கேசிதா ஆகியோர் படத்திற்கு சிறந்த தேர்வு.

டி.இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் ரகம்.

ஒளிப்பதிவு : யு.கே.செந்தில்குமார்,கற்பனை கலந்த படம் என்பதால் விஷ{வல் எஃபெக்ட்ஸ், கிராபிக்ஸ் காட்சிகள்  அதிகம் காட்டி, படத்தின் நம்பகத்தன்மையை குறைவில்லாமல் பார்த்துக் கொள்வதில் தனித்து நிற்கிறார்.

எடிட்டிங் : சாம் லோகேஷ்,கலை இயக்கம் : ஏ ஆர் மோகன், வசனம் : தேவ ஹாசா அனைவரின் பங்களிப்பு கச்சிதம்.

குழந்தைகளின் உலகிற்கு அழைத்துச் சென்று உற்சாகப்படுத்தி அனைவரையும் ரசிக்க வைத்துகள்ளார் இயக்குனர் என்.ராகவன். பேச்சு குறைபாட்டை மன ரீதியாக அணுகி கனிவோடு சொல்வதை கேட்டால் குணம் பெறுவர் என்பதை இந்தப் படத்தின் மூலம் உணர்த்தி சாகசங்கள் கலந்து கொடுத்திருப்பதில் வெற்றி பெற்றுள்ளார் இயக்குனர் என்.ராகவன்.

மொத்தத்தில் அபிஷேக் பிலிம்ஸ் பேனரில் ரமேஷ் பி பிள்ளை தயாரித்திருக்கும் மை டியர் பூதம் நேர்த்தியான கற்பனை கலந்த மாயாஜாலத்துடன் மனம் மயக்கும் பூதம்.