மெட்ராஸ்காரன் சினிமா விமர்சனம் : மெட்ராஸ்காரன் பொங்கல் ரேசில் ரசிகர்கள் மனதை வெல்லுவான் | ரேட்டிங்: 3/5
நடிகர்கள்:
ஷேன் நிகம் – சத்யா
கலையரசன் – துரை சிங்கம்
நிஹாரிகா – மீரா
ஐஸ்வர்யா தத்தா – கல்யாணி
கருணாஸ் – ஹீரோவின் மாமா
பாண்டியராஜன் – ஹீரோவின் அப்பா
சூப்பர் சுப்புராயன் – முத்து பாண்டி
சரண் – மணிமாறன்
கீதா கைலாசம்
தொழில்நுட்ப குழுவினர்கள் :
தயாரிப்பாளர் : எஸ்ஆர் புரொடக்ஷன்ஸ் – பி ஜெகதீஷ்
எழுத்தாளர் மற்றும் இயக்குனர்: வாலி மோகன் தாஸ்
இசை: சாம் சிஎஸ்
ஒளிப்பதிவாளர்: பிரசன்னா எஸ் குமார்
எடிட்டர்: வசந்தகுமார்
கலை – ஆனந்த் மணி
ஸ்டண்ட் – தினேஷ் சுப்பராயன்
பத்திரிக்கை தொடர்பு – சதீஷ் (எய்ம்)
சம்பாதிப்பதற்காக சென்னைக்கு வந்த சத்தியமூர்த்தி (ஷேன் நிகம்), தனது சொந்தஊரான புதுக்கோட்டைக்குத் திரும்பிய அவர், தான் பெற்ற வெற்றியை கொண்டாட தனது காதலி மீராவுடன் (நிஹாரிகா கொனிடேலா) பிரமாண்டமான திருமணத்தை ஏற்பாடு செய்கிறார். திருமணத்தில் அவ்வளவு ஆர்வம் இல்லாத அவரது வருங்கால மாமனார் ஒப்புக்கொண்டு வருகிறார். திருமண ஏற்பாடுகள் எல்லாம் நன்றாகவும் மகிழ்ச்சியாகவும் நடந்து கொண்டிருக்க அவரது வீட்டில் அன்பான உறவினர்கள் மற்றும் சிரிப்பு நிறைந்திருக்கும் போது, ஒரு சம்பவம் அவரது வாழ்க்கையை தலைகீழாக மாற்றுகிறது. உள்ளூர் துரைசிங்கத்துடன் ஒரு சிறிய வாக்குவாதத்தில் தொடங்கும் விஷயம், அன்று மாலை ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கும் தனது காதலி மீராவைப் பார்க்க சத்தியமூர்த்தி தனது செல்போனில் பேசிக்கொண்டே தனது காரை ஓட்டுகிறார். வழியில் நாய் குறுக்கே வந்தால் எதிர்பாராத விதமாக நிறைமாதக் கர்ப்பிணியான கல்யாணி (ஐஸ்வர்யா தத்தா) மீது காரை மோதிவிடுகிறார். அந்த ஊர் மக்கள் சத்யாவைப் பிடித்துக் கொள்கிறார்கள். விபத்தில் சிக்கியது துரைசிங்கத்தின் மனைவி. இந்த சம்பவம் சத்தியமூர்த்தியின் வாழ்க்கையில் ஒரு பெரும் மோதலாக மாறி, இருவரையும் மட்டுமல்ல, அவர்களைச் சுற்றியுள்ளவர்களையும் பாதிக்கிறது. பிறகு சத்தியமூர்த்தி – மீரா திருமணம் நடந்ததா? கல்யாணி மற்றும் அவரது வயிற்றிலிருக்கும் குழந்தை நிலை என்ன? துரைசிங்கம் – சத்தியமூர்த்தி மோதல் எங்கே போய் முடிந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.
கலையரசன் ஆக்ரோஷம், கோபம் மற்றும் விரக்தியை சரியாக சித்தரிக்கிறார், மேலும் துரைசிங்கமாக நன்றாக பொருந்துகிறார்.
நாயகனாக சத்தியமூர்த்தி கதாபாத்திரத்தில் ஷேன் நிகம், அழுத்தமான நடிப்பு இருந்தாலும் இன்றைய பிரபல ஹீரோவின் உடல்மொழி அங்கும் இங்கும் தெரிகிறது. அவர் பேசும் வசன உச்சரிப்பில் மலையாளம் கலந்த தமழ் கலவை வீசுகிறது.
காதலி மீராவாக நிஹாரிகா கொனிடேலா வருகிறார் நடனத்திலும் கவர்கிறார், வந்த போக்கில் அப்படியே திடீரென காணாமல் போகிறார்.
சிங்கத்தின் மனைவி கல்யாணியாக ஐஸ்வர்யா தத்தா, அவரது மைத்துனர் மணிமாறனாக சரண், சத்தியமூர்த்தியின் அம்மாவாக கீதா கைலாசம், அப்பாவாக பாண்டியராஜன், தாய் மாமனாக கருணாஸ், சூப்பர் சுப்பராயன் வில்லன்களில் ஒருவரான முத்து பாண்டியாக, உட்பட அனைத்து துணை கதாபாத்திரங்கள் தங்கள் கதாபாத்திரங்களுக்கு ஆழத்தையும் நுணுக்கத்தையும் சேர்த்து பிரகாசிக்கிறார்கள்.
சாம் சிஎஸ் இசை ஓகே. பின்னணி இசை மண்டையை பிளப்பது போல் அதிர்கிறது.
ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ் குமார், எடிட்டர் வசந்தகுமார், தினேஷ் சுப்பராயன் சண்டை காட்சிகள் திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையுடன் பயணிக்க உதவுகிறது.
தனது காதலியுடன் திருமண எனனும் அடுத்த கட்டத்திறகு நுழையும் போது எதிர்பாராத நடக்கும் வாய்தகராறு, அதனை தொடர்ந்து நடக்கும் ஒரு விபத்து, அதனால் ஒட்டு மொத்த குடும்பத்தினருக்கும் ஏற்படும் பாதிப்பு என பல்வேறு விஷயங்களை திருப்பங்கள் நிறைந்த அழுத்தமான கதைக்களத்தை கையாண்ட இயக்குநர் வாலி மோகன் தாஸ், ஆங்காங்கே துண்டாக எகிறும் கதாபாத்திரங்களை சரியாக செம்மைப்படுத்தி திரைக்கதையில் விறுவிறுப்பை கூட்டி இருக்கலாம்.
மொத்தத்தில் எஸ்ஆர் புரொடக்ஷன்ஸ் சார்பில் பி ஜெகதீஷ் தயாரித்திருக்கும் மெட்ராஸ்காரன் பொங்கல் ரேசில் ரசிகர்கள் மனதை வெல்லுவான்.