மிரள் விமர்சனம் : மிரள் எதிர்பாராத அதிரடி திருப்பத்தை கொடுத்து படத்தின் போக்கை மாற்றி பயமுறுத்த வைக்கும் அதிர்ச்சி தரும் த்ரில்லர் | ரேட்டிங்: 3.5/5

0
356

மிரள் விமர்சனம் : மிரள் எதிர்பாராத அதிரடி திருப்பத்தை கொடுத்து படத்தின் போக்கை மாற்றி பயமுறுத்த வைக்கும் அதிர்ச்சி தரும் த்ரில்லர் | ரேட்டிங்: 3.5/5

அக்சஸ் பிலிம் பேக்டரி ஜி.டில்லிபாபு தயாரிப்பில் பரத், வாணிபோஜன், கே.எஸ்.ரவிக்குமார், மீரா கிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி, அர்ஜய், ஜீவா சுப்ரமணியன், மாஸ்டர் அன்கித், பாக்யா, மாஸ்டர் சாந்தனு ஆகியோர் நடித்துள்ளனர்.
கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் எம்.சக்திவேல்.இசை-பிரசாத்.எஸ்.என், ஒளிப்பதிவு-சுரேஷ்பாலா, படத்தொகுப்பு-கலைவாணன்.ஆர், கலை-மணிகண்டன் ஸ்ரீனிவாசன், சண்டை-டேன்ஜர் மணி, ஒலி-சச்சின் சுதாகரன், ஹரிஹரன், உடை-முகமது சுபீர்,ஒப்பனை-வினோத் சுகுமாரன், தயாரிப்பு நிர்வாகம்-எஸ்.சேதுராமலிங்கம், பிஆர்ஒ-சுரேஷ்சந்திரா, ரேகா.

மனைவி வாணி போஜன், மகன், வேலை என்று பரத்திற்கு வாழ்க்கை சந்தோஷமாக சென்று கொண்டிருக்கிறது. திடீரென்று வாணி போஜனுக்கு அசாம்பாவித கனவு வர அதிலிருந்து மீண்டு வர முடியாமல் மன ரீதியில் பாதிப்புக்குள்ளாகிறார். பரத் எவ்வளவு முயற்சி செய்தாலும், மருத்துவரை அணுகினாலும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறது. மாமியார் மீரா கிருஷ்ணன் யோசனைப்படி குலதெய்வ கோயிலில் வழிபாடு செய்ய குடும்பத்துடன் புறப்படுகிறார்.கிராமத்தில் வழிபாடு முடித்து அவசரமாக ஊருக்கு திரும்ப வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இரவில் காரில்  மாற்றுப் பாதையில் குடும்பத்துடன் செல்லும் பரத்தின் கார் பழுதாகி நின்று விடுகிறது. இந்த சமயத்தில் மர்ம முகமுடி அணிந்த நபரின் பயமுறுத்தலால் திசை திருப்பப்படும் பரத் காரில் மனைவி மகன் இல்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சியாகிறார். அவர்களை கண்டுபிடிக்க அந்த இரவில் தேடி அலைகிறார். இறுதியில் பரத் மனைவி, மகனை கண்டு பிடித்தாரா? பயமுறுத்தும் நபர் யார்? எதற்காக? இதற்கான விடையை திரையில் காணலாம்.

பரத், வாணிபோஜன் இருவருமே படத்தில் மையப்புள்ளியாக இருந்து படத்தின் முக்கியமான கதாபாத்திரங்களாக குறையில்லாமல் நிறைவாக காட்சிகளில் இயல்பாக நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி மனதில் திகில் அனுபவத்தை ஏற்படுத்தி மனதில் பதிகின்றனர்.

கே.எஸ்.ரவிக்குமார், மீரா கிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி, அர்ஜய், ஜீவா சுப்ரமணியன், மாஸ்டர் அன்கித், பாக்யா, மாஸ்டர் சாந்தனு கதையோட்டத்திற்கேற்ப சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர்.

இசை-பிரசாத்.எஸ்.என், ஒளிப்பதிவு-சுரேஷ்பாலா, படத்தொகுப்பு-கலைவாணன் ஆகியோர் படத்தின் முக்கிய காட்சிகளுக்கு உயிர் கொடுத்து தத்ரூபமாக பயமுறுத்தி படத்தை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்கின்றனர்.

எம்.சக்திவேல் திரைக்கதையில் பார்வையாளர்களை அவர்களின் இருக்கைகளுக்கு இணங்க வைக்கும் ஒரு த்ரில்லராக கொடுத்துள்ளார். வசனங்கள் திரைக்கதையின் கீழ் வருவதால், மிரலில் உள்ள உரையாடல், பார்வையாளர்களை தேவையில்லாத விஷயங்கள் பேசாமல் கதையை முன்னோக்கி நகர்த்த உதவுகிறது. பார்வையாளர்கள் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கும், திரையில் நடக்கும் அனைத்து மர்மங்களையும் தெரிந்து கொள்வதற்கும் வழி வகை செய்திருப்பதில் வெற்றி பெறுகிறார் அறிமுக இயக்குனர் எம்.சக்திவேல். மிரல் நிச்சயமாக ஒரு அறிமுக இயக்குனரால் உருவாக்கப்பட்ட திரைப்படமாகத் தெரியவில்லை, தேர்ந்த  இயக்குனராகவே அடையாளம் காட்டியுள்ளது. படத்தின் தொழில்நுட்ப அம்சங்கள் திரைக்கதைக்கு முழு நீதியை வழங்குகின்றன மற்றும் தவிர்க்கும் பாடல்களின் தேர்வு படத்தின் வேகத்திற்கு மிகப்பெரிய சாதகமாக உள்ளது. ஸ்கிரிப்ட்டில் புதைந்திருக்கும் பதற்றத்தை இழுக்க பின்னணி ஸ்கோர் அதிர வைத்துள்ளது.த்ரில்லர் படத்திற்கு தேவையான வழக்கமான டயர் பஞ்சர்கள், டைவர்ஷன் போர்டுகள், ஜம்ப்ஸ்கேர்கள் என்று பலவிதத்தில் த்ரில்லர் படத்தின் சதிதிட்டத்தின் கதையம்சங்களுடன் கொடுத்து அசத்தியுள்ளார் இயக்குனர் சக்திவேல். முதல் பாதியில் ஒரே பாதையில் பயணிக்க, இரண்டாம் பாதி இறுதியில் தான் படத்தின் முழு ஸ்கிர்ப்டின் வெளிப்பாடு தெரிய வைக்கிறது புரிய வைக்கிறது. இதில் காதல்,திருமணம், நட்பு, துரோகம், பழி வாங்குதல் என்பதை ஹாரர் த்ரில்லராக வடிவமைத்து கொடுத்துள்ளார் இயக்குனர் சக்திவேல்.

மொத்தத்தில் அக்சஸ் பிலிம் பேக்டரி ஜி.டில்லிபாபு தயாரிப்பில் மிரள் எதிர்பாராத அதிரடி திருப்பத்தை கொடுத்து படத்தின் போக்கை மாற்றி பயமுறுத்த வைக்கும் அதிர்ச்சி தரும் த்ரில்லர்.