மின்மினி சினிமா விமர்சனம் : மின்மினி தற்போதைய தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் புத்துணர்ச்சியூட்டி உணர்வுபூர்வமாக இணைக்கும் நட்பின் பயணம் | ரேட்டிங்: 3/5
நடிகர்கள்:
சபரி கார்த்திகேயனாக பிரவீன் கிஷோர்
பாரி முகிலனாக கௌரவ் காளை
பிரவீணாவாக எஸ்தர் அனில்
படக்குழுவினர்:
எழுத்தாளர் மற்றும் இயக்குனர் – ஹலிதா ஷமீம்.
ஒளிப்பதிவாளர்- மனோஜ் பரமஹம்சா
இசையமைப்பாளர் – கதீஜா ரஹ்மான்
எடிட்டர் – ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா
கலை இயக்குனர் – செரிங் குர்மெட் குங்கியம்
தயாரிப்பு ஒலி கலவை – ராகவ் ரமேஷ்
விஎஃப்எக்ஸ் மேற்பார்வையாளர்- லிங்கின் லிவி
ஒலி வடிவமைப்பு – அழகியகூத்தன் , சுரேன்.ஜி
வண்ணக்கலைஞர்- நேசிகா ராஜகிமாறன்
மறுபதிவு கலவைகள் – எஸ்.சிவகுமார் , கிருஷ்ணன் சுப்ரமணியன்
லைன் புரொட்யூசர் – ஸ்டான்சின் டோர்ஜாய் கியா
மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா மற்றும் அப்துல் நாசர்
நிர்வாகத் தயாரிப்பாளர் – கே.ஜெயசீலன்
தயாரிப்பாளர்கள்- மனோஜ் பரமஹம்சா ஐஎஸ்சி, ஆர்.முரளி கிருஷ்ணன்
ஊட்டியில் உள்ள ஒரு பள்ளி அமைப்பில் கதை தொடங்குகிறது. ஒவ்வொருவரும்; அவரவர் சொந்த ஆசைகள் மற்றும் ஆளுமைகள் கொண்ட பலதரப்பட்ட மாணவர்கள். அவர்களில் பாரி முகிலன்; (கௌரவ் காளை) ஒரு திறமையான கால்பந்தாட்ட விளையாட்டு வீரர், மற்றும் குறும்புக்கார மாணவராக இருந்தாலும் இரக்கமுள்ள இதயத்தைக் கொண்டவர். பள்ளியில் சேரும் அமைதியான தனி நபரும் ஓவியரும், செஸ் சாம்பியனுமான மாணவர் சபரி கார்த்திகேயன் (பிரவீன் கிஷோர்). பாரி, சபரியை அவ்வப்போது சீண்டி கொண்டே இருப்பதால் பாரியிடமிருந்து விலகி இருப்பான். இருவரும் ஒருவருக்கொருவர் மிகவும் வித்தியாசமான குணத்தோடு இருப்பதாலும் தோழமையுடன் பழகுவதில்லை. இவர்கள் கேம்புக்கு செல்லும் போது மாணவர்கள் பயணிக்கும் பள்ளி வாகனம் வழியில் விபத்தில் சிக்கிக் கொள்ள தீப்பிடித்து எரியும் வாகனத்தில் இருந்து சக மாணவர்கள் அனைவரையும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடும் பாரி, சபரியை காப்பாற்றி கீழே குதிக்கும் பாரியின் பின்னந்தலை பாறையில் மோதி பலத்த காயமடைந்து கோமா நிலைக்கு தள்ளப்படுகிறார். பிறகு மூளைச்சாவு அடைந்த அவரின் உடல் இதய உறுப்பு தானத்தால் உயிர் பிழைத்து புதிய வாழ்க்கையை தொடங்கும் பிரவீணா (எஸ்தர் அனில்), பாரிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, அவரது எதிர்கால ஆசைகள் அறிந்து கொண்டு அதை நிறைவேற்ற வேண்டும் என்று அவர் படித்த ஊட்டி பள்ளியில் சேருகிறார். அதே நேரத்தில், பாரி இறப்புக்கு பிறகு அவர் தன்னுடன் நட்பாக இருக்க விரும்பியதை அறிந்துக்கொள்ளும் சபரி, தன் உயிரை காப்பாற்ற தன் உயிரை தியாகம் செய்த நண்பன் பாரியை நினைத்து குற்ற உணர்ச்சியில் மூழ்கி, நண்பனின் கனவு வாழ்க்கையை நிறைவேற்ற தொடங்குகிறார். பல ஆண்டுகள் கடந்து இளம் வயது பருவத்தில் பிரவீணாவும் சபரியும் தங்கள் ராயல் என்ஃபீல்டில் இமயமலைக்கு சவாரி செய்யும் போது வழியில் அவர்களின் பாதைகள் மீண்டும் ஒன்றிணைகின்றன. பயணத்தின் ஒவ்வொரு தருணத்திலும் திளைத்து வியக்கும் பிரவீணா குற்ற உணர்ச்சியில் மூழ்கி இருக்கும் சபரியின் மீட்பைக் கண்டறியவும் உதவுகிறார். ஆனால், சபரி பயண இலக்கை அடைவதில் கவனம் செலுத்துகிறார். அதன் பின் பயணித்தின் போது என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.
எஸ்தர் அனில், பிரவின் கிஷோர் மற்றும் கௌரவ் காளை ஆகியோர் துடிப்பான பள்ளி பருவம் மற்றும் இளம் வயது பருவத்தில் (எஸ்தர் அனில், பிரவின் கிஷோர்) தங்கள் கதாபாத்திரங்களை கவனிக்க வைக்கிறார்கள்.
இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் மகள் கதிஜா ரஹ்மானின் வசீகரிக்கும் இசை, ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் நேர்த்தியான காட்சியமைப்புகள் பெரிய அளவில் பேசப்படும்.
படத்தொகுப்பாளர் ரேமண்ட் டெரிக் க்ராஸ்டர் படத்தின் இதயத்தைத் தூண்டும் தருணங்களை பார்வையாளர்கள் உணரும் வகையில் நேரியல் வடிவத்தில் கதையை எடிட்டிங் செய்துள்ளார்.
உணர்ச்சிப்பூர்வமாக இணைக்கப்பட்ட நட்பின் கதை, கலகலப்பான மற்றும் இளமையுடன் கூடிய இரண்டு பகுதிகளாக விரிவடைகிறது. குழந்தைகளில் இருந்து இளைஞர்களாக மாறுபவர்கள் கதை என்பதால், நடிகர்கள் சிறு வயதில் இருந்து இளைஞர்களாக மாற 7 ஆண்டுகள் காத்திருந்து இயக்குனர் ஹலிதா ஷமிம் மனித வாழ்க்கையின் உணர்ச்சிகளையும் அப்பாவித்தனத்தையும் அழகாகவும் நேர்த்தியாகவும் முன்வைக்க கடுமையாக உழைத்துள்ளார்.
மொத்தத்தில் மனோஜ் பரமஹம்சா ஐஎஸ்சி, ஆர்.முரளி கிருஷ்ணன் இணைந்து தயாரித்துள்ள மின்மினி தற்போதைய தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் புத்துணர்ச்சியூட்டி உணர்வுபூர்வமாக இணைக்கும் நட்பின் பயணம்.