மால் திரைப்பட விமர்சனம்: மால் வேகம் குறைவு | ரேட்டிங்: 2/5
நடிகர்கள்:
கஜராஜ் வேடத்தில் கஜராஜ்
கதிர் வேடத்தில் அஸ்ரப்
பிலிப்ஸாக தினேஷ் குமரன்
கர்ணனாக சாய்கார்த்தி
யாழினியாக கவுரி நந்தா
கௌதமாக விஜே பப்பு
ஜெய் என ஜெய்
கஜராஜ் வேடத்தில் கஜராஜ்
கதிர் வேடத்தில் அஸ்ரப்
பிலிப்ஸாக தினேஷ் குமரன்
கர்ணனாக சாய்கார்த்தி
யாழினியாக கவுரி நந்தா
கௌதமாக விஜே பப்பு
ஜெய் என ஜெய்
தொழில்நுட்ப கலைஞர்கள் :-
இசை : பத்மயன் சிவானந்தம்
ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு : சிவராஜ் ஆர்
தயாரிப்பு : கோவை பிலிம் மேட்ஸ்
தயாரிப்பாளர்கள் : சிவராஜ் ஆர் மற்றும் சாய்கார்த்தி
இயக்கம் : தினேஷ் குமரன்
மக்கள் தொடர்பு : சுரேஷ்சுகு மற்றும் தர்மதுரை
இசை : பத்மயன் சிவானந்தம்
ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு : சிவராஜ் ஆர்
தயாரிப்பு : கோவை பிலிம் மேட்ஸ்
தயாரிப்பாளர்கள் : சிவராஜ் ஆர் மற்றும் சாய்கார்த்தி
இயக்கம் : தினேஷ் குமரன்
மக்கள் தொடர்பு : சுரேஷ்சுகு மற்றும் தர்மதுரை
இப்படம் ஆஹா ஒடிடி தளத்தில் வெளிவந்துள்ளது.
தஞ்சையில் இருந்து வெளிநாட்டுக்கு கடத்தப்பட இருக்கும் சோழன் சிலையை மீட்பதற்கான முயற்சியில் காவல்துறை தனிப்படை ஈடுபடுகிறது. அதே சமயம்,சிலை மாபியாவின் மன்னன் சேர, கர்ணனிடம் (சாய் கார்த்தி) பணியை ஒப்படைக்கும் போது, கர்ணன் தன்னுடைய கூட்டாளிகளிடம் இந்தப் பணியை ஒப்படைக்கிறான். இடையில் வேறு ஒரு கும்பல் சிலையை கர்ணனின் கூட்டாளிகளிடம் இருந்து பறிக்க நினைக்கும் போது அந்த இடத்தில் ஒரு பெரிய குழப்பம் ஏற்படுகிறது. – கர்ணனின் டீம்மை சேர்ந்தவர்கள் கடத்தல் காரர்கள் இடையே நடக்கும் கார் சேஸிங்கில், இரண்டு உள்ளூர் சங்கிலிப் பறிப்பாளர்கள் கதிர் மற்றும் பிலிப்ஸ் (அஸ்ரஃப் மற்றும் தினேஷ்) பணக்காரர் ஆக வேண்டும் என்று எண்ணம் உடையவர்கள் சங்கிலி பறிப்பு நடத்திய போது திருட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் கஜராஜிடம் (கஜராஜ்) மாட்டி திரும்பும் போது வழியில் கடத்தல் காருடன் விபத்து ஏற்படுகிறது. உடனே அவர்கள் அங்கிருந்து தப்பிக்கிறார்கள். தப்பிக்கும் போது அங்கு இன்னொரு கார் நிற்பதை கவனிக்கிறார்கள். விபத்து நடந்த இடத்திற்கு இன்ஸ்பெக்டர் கஜராஜ் வருகிறார். சிலை காரில் இருப்பதை பார்க்கிறார். காரில் பயணித்தவர்கள் இறக்கிறார்கள். சிலை இன்ஸ்பெக்டர் கஜராஜ் கைக்கு போகிறது. விஷயம் அறிந்த கர்ணன் சிலையை தன்னிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று இன்ஸ்பெக்டர் கஜராஜை மிரட்ட, அவர் சிலையை எடுத்து கொண்டு தன் வீட்டிற்கு செல்கிறார். அதே நேரத்தில் சங்கிலிப் பறிப்பாளர்கள் கதிர் மற்றும் பிலிப்ஸ் தங்களிடமிருந்த திருட்டு நகைகளை பறித்த இன்ஸ்பெக்டர் கஜராஜின் வீட்டில் கொள்ளை அடிக்க போகிறார்கள். அப்போது வீட்டில் கான்ஸ்டபிள் ஒருவர் கொலை செய்யப்பட்டு இருப்பதை பார்க்கிறார்கள். அங்கிருந்து தப்பிக்கும் போது இன்ஸ்பெக்டர் கஜராஜ் வந்து விட, வீட்டில் பதுக்கி வைத்திருந்த சிலை காணாமல் போவதை அறிந்து அதிர்ச்சி அடைகிறார். கதிர் மற்றும் பிலிப்ஸ் தான் சிலையை திருடி விட்டார்கள் என இந்த பிரச்சனையில் இவர்களும் இழுக்கப்படுகிறார்கள். அதை தொடர்ந்து சிலை திருட்டு மற்றும் ஒரு பழங்கால சோழர் சிலை கடத்தும் முயற்சி, தொடர்பில்லாத இரண்டு ஊடகப் பிரமுகர்கள் மற்றும் சங்கிலிப் பறிப்பாளர்கள் கதிர் மற்றும் பிலிப்ஸ் ஆகிய நான்கு நபர்களை சுற்றி சூழலுகிறது. காணாமல் போன சோழர் சிலை என்ன ஆனது? இன்னொரு காரில் பயணித்த ஆள் யார்? இந்த சூழலில் சிக்கும் நான்கு பேர் வாழ்க்கை என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.
போலீஸ் இன்ஸ்பெக்டராக கஜராஜ், கதிரரக அஸ்ரப், பிலிப்ஸாக தினேஷ் குமரன், கர்ணனாக சாய்கார்த்தி, சாய் கார்த்திக்கின் மனைவி யாழினியாக கவுரி நந்தா, கௌதமாக விஜே பப்பு, ஜெயாக ஜெய் ஆகியோர் தங்களது கதாபாத்திரத்திற்கு முடிந்த அளவு சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளனர்.
ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு இரண்டுமே சிவராஜ் ஆர் விறுவிறுப்பு குறைந்த திரைக்கதைக்கு முடிந்த அளவுக்கு சிறப்பாக செய்துள்ளனர்.
பத்மயன் சிவானந்தம் இசை மற்றும் பின்னணி இசை ஓகே.
சிலை கடத்தல் சம்பவத்தை எடுத்துக் கொண்டு, நான்கு நபர்களை சுற்றி சுழலும் திரைக்கதையில் விறுவிறுப்பு குறைவு. அத்துடன் மால் ஒரு த்ரில்லர் என்று கருதப்பட்டாலும், படம் எந்த த்ரில்லையும் வழங்கத் தவறிவிட்டது. பொதுவாக இதுபோன்ற கதை களம் என்றால், அதில் திரைக்கதையும், காட்சிகள் விறுவிறுப்பாக இருக்க வேண்டும். இதில் இயக்குனர் தினேஷ் குமரன் திரைக்கதையில் தொய்வைப் போக்கி விறுவிறுப்பை சற்று கூடியிருந்தால் முழுமையாக ரசித்திருக்கலாம்.
மொத்தத்தில் கோவை பிலிம் மேட்ஸ் சார்பில் சிவராஜ் ஆர் மற்றும் சாய்கார்த்தி இணைந்து தயாரித்து ஆஹா ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் மால் வேகம் குறைவு.