மார்க் ஆண்டனி திரைப்பட விமர்சனம் : மார்க் ஆண்டனி மாஸ்-ஆக்ஷன் டைம்பாஸ்  என்டர்டெய்னர் | ரேட்டிங்: 4/5

0
1293

மார்க் ஆண்டனி திரைப்பட விமர்சனம் : மார்க் ஆண்டனி மாஸ்-ஆக்ஷன் டைம்பாஸ்  என்டர்டெய்னர் | ரேட்டிங்: 4/5

நடிகர்கள்:
விஷால், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், சுனில், ரிது வர்மா, அபிநயா, ரெடின் கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், நிழல்கள் ரவி, சென்ட்ராயன், விஷ்ணு பிரியா காந்தி, டத்தோ ஸ்ரீ ஜி ஞானராஜா மற்றும் பலர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:
எழுத்தாளர் மற்றும் இயக்குனர்: ஆதிக் ரவிச்சந்திரன்
தயாரிப்பாளர் : எஸ்.வினோத் குமார் – மினி ஸ்டுடியோ
இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு : அபிநந்தன் ராமானுஜம்
எடிட்டர்: விஜய் வேலுக்குட்டி
கலை இயக்குனர்: சு.மு.விஜய்முருகன்
ஸ்டண்ட் : பீட்டர் ஹெய்ன், திலீப் சுப்பராயன், கனல் கண்ணன், தினேஷ் சுப்பராயன்
நடனம்: தினேஷ், பாபா பாஸ்கர், அசார்
வசனங்கள்: ஆதிக் ரவிச்சந்திரன்
கூடுதல் திரைக்கதை: எஸ்.ஜே.அர்ஜுன், ஆர்.சவரி முத்து
பாடல் வரிகள்: மதுரகவி, அசால் கோலார், ஆதிக் ரவிச்சந்திரன்
ஆடை வடிவமைப்பாளர்: சத்யா என்.ஜே
காஸ்ட்யூமர்: சீனு
ஒப்பனை: சக்தி
இசை மேற்பார்வையாளர்: யெகோவாசன் அழகர்
ஒலி வடிவமைப்பு மற்றும் கலவை: சுரேன், ஜி.எஸ்.அழகிய கூத்தன்
விஎஃப்எக்ஸ்: சனத் டிஜி, சதீஷ் சிடி
DI: B2H
வண்ணம்: ரகுநாத் வர்மா
தயாரிப்பு நிர்வாகி: கணேசன், எஸ்.வி.ஹரி கிருஷ்ணன்
மக்கள் தொடர்பு : ரியாஸ் கே அகமது
லோகோ மற்றும் விளம்பர வடிவமைப்பு: சிவ குமார் எஸ் (சிவாடிஜிட்டலார்ட்)
ஆண்டனி (விஷால்) மற்றும் ஜாக்கி மார்த்தாண்ட (எஸ்.ஜே. சூர்யா) மிகவும் நெருங்கிய நண்பர்கள். அவர்கள் இருவரும் பிரபல தாதாக்கள்; மற்றும் மற்றொரு கேங்க்ஸ்டர் ஏகாம்பரம் (சுனில்) உடன் சண்டையிடுகிறார்கள். ஒரு நாள் ஏகாம்பரம் ஆண்டனியை கொன்றுவிட்டு ஊரை விட்டுத் தப்பிச் செல்கிறான். தன் நண்பனைக் கொன்றதற்காக ஏகாம்பரம் பழிவாங்க வேண்டும் என்பதில் ஜாக்கி உறுதியாக இருக்கிறார். ஜாக்கி ஆண்டனியின் மகன் மார்க்கை (விஷால்) வளர்க்கிறார், மேலும் அவர் தனது சொந்த மகன் மதனை விட (எஸ்.ஜே. சூர்யா) மார்க்குக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். தனது தாயின் மரணத்திற்கு தந்தை ஆண்டனி தான் காரணம் என்று நம்பும் மார்க் தன் தந்தையை வெறுக்கிறார். தன் தேவைகளை பூர்த்தி செய்ய மெக்கானிக்காக வேலை செய்கிறார்.  மதனுக்கு மார்க்கின் காதலி ரம்யாவையும் (ரிது வர்மா) பிடிக்கும். அப்போது, காதலி ரம்யா தனது தந்தையின் காரை ரிப்பேர் செய்யும்படி மார்க்கிடம்  கேட்டபோது, மார்க் கார் டிக்கியில் ஒரு பெட்டியைக் கண்டு எடுக்கிறார். அதில் கடந்த காலத்தில் மக்களிடம் பேசக்கூடிய ஒரு தொலைபேசி இருப்பதை காண்கிறான். அதாவது, விஞ்ஞானி சிரஞ்சீவி (செல்வராகவன்) தனது அறையில் காலப்பயண ஊடகத்தை வடிவமைக்க முயல்கிறார். ஆனால் அவருக்கு முன் இருந்த விஞ்ஞானிகளைப் போல் டெலிபோர்ட் செய்யும் இயந்திரத்தை உருவாக்க விரும்பவில்லை. ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் கடந்த காலத்தை மீண்டும் எழுதுவதில் மகிழ்ச்சி அடைகிறார். சிரஞ்சீவியின் டைம் டிராவலிங் ஃபோன் இறுதியாக வெற்றியடைகிறது. அதை அணுகும் எவரும் கடந்த காலத்தைச் சேர்ந்தவர் களுக்கு அழைப்பு விடுத்து அவர்களுடன் தொடர்பு கொள்ளலாம். மேலும் சில தனிப்பட்ட இலக்குகளை மாற்றியமைத்த பிறகு, அவர் டைம் டிராவலிங் ஃபோனை பெட்டியில் வைத்து, பெட்டியை  கார் டிக்கியில்  வைத்துக் கொண்டு கிளப்புக்கு மகிழ்ச்சியாக புறப்படுகிறார். அப்போது கிளப்பில் ஏற்பட்ட சண்டையில் அவர் சுடப்படுகிறார். அந்த பெட்டியை தான் மார்க கார் டிக்கியில் கண்டெடுக்கிறார். இந்தத் தொலைபேசி மார்க், மதன் மற்றும் ஜாக்கி ஆகியோர் வாழ்க்கையில் என்ன மாற்றத்தை உருவாக்கியது என்பதும், தன் தாயின் கொலை குறித்து உண்மையை அவன் எப்படி அறிந்து கொள்கிறார் என்பது தான் படத்தின் மீதிக்கதை.
விஷால் கேங்ஸ்டராகவும், மெக்கானிக் காகமும் இரட்டை வேடத்தில் தூள் கிளப்பியுள்ளார். அப்பா கதாபாத்திரம் அட்டகாசமாக இருந்தாலும், மகன் கதாபாத்திரம் அபிமானத்துடன் இரண்டு வேடங்களுக்கும் இடையே உள்ள குணாதிசயங்கள் மாறுபாடுகளை காட்டி நடிப்பில் அசத்தியுள்ளார். கிளைமாக்ஸில் மொட்டை அடித்த தலையுடன் ஸ்டைலிஷ்சா வருகிறார்.
எஸ்.ஜே.சூர்யா மாஸ் என்ட்ரி கொடுத்து தனித்து நின்று ஒரு மயக்கும் நடிப்பின் மூலம் பார்வையாளர்களை வசீகரித்துள்ளார். தந்தை மகன் என இரட்டை வேடங்களில் அசாத்தியமான டயலாக் டெலிவரி, மாடுலேசன், டான்ஸ் மற்றும் பல விதமான மேனரிஸத்துடன் கடைசி வரை மஜா செய்வதுடன், போன் காட்சிகளிலும், சில்க் ஸ்மிதா காட்சியிலும் அனைவரையும் கலகலப்பாக வைக்க எல்லாவற்றையும் நடிப்பில் கொண்டு வந்தது படத்தின் ஹைலைட் என சொல்லாம்.
விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா, அவர்கள் காம்பினேஷன் காட்சிகள் கலகலப்பாக இருக்கிறது.
 மார்க்கின் காதலியாக நடித்துள்ள ரிது வர்மா, குறைவான திரை நேரம் இருந்தபோதிலும், அவரது கதாபாத்திரத்தில் எதிர்பார்த்ததை வழங்கியுள்ளார்.
வியக்கத்தக்க தோற்றத்துடன் விஞ்ஞானி சிரஞ்சீவியாக செல்வராகவன், ஏகாம்பரம் வேடத்தில் சுனில், அப்பா விஷாலுக்கு ஜோடியாக அபிநயா இவர்கள் மூவரும் சிறப்பான நடிப்பை கொடுத்து தங்கள் திரை இருப்பின் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.
ரெடின் கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், நிழல்கள் ரவி, சென்ட்ராயன், விஷ்ணு பிரியா காந்தி, டத்தோ ஸ்ரீ ஜி ஞானராஜா ஆகியோர் தேர்வு இந்த அறிவியல் புனைகதை கேங்க்ஸ்டர் கதைக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது.
சில்க் ஸ்மிதாவின் சிஜி ஐ உருவாக்கம் தொடர்பாக குழுவினர் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்.
பீட்டர் ஹெய்ன், திலிப் சுப்பராயன், கனல் கண்ணன், தினேஷ் சுப்பராயன் ஆகியோரின் ஆக்‌ஷன் பிளாக்குகள் நன்றாகவே உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக டபுள் டெக்கர் சண்டைக்காட்சி சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆர்.கே.விஜய் முருகன் கலை மற்றும் அபிநந்தன் ராமானுஜத்தின் விஷுவல் ட்ரீட்க்கு ஜி.வி.பிரகாஷ் குமாரின் அட்டகாசமான பின்னணி இசை ஒவ்வொரு காட்சியையும் மேம்படுத்தி தூக்கி நிறுத்தியுள்ளது.
காலப்பயணம் மையமாகக் கொண்ட டைம் டிராவலிங் கதையுடன் பயணிக்க விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு பக்க பலமாக இருக்கிறது.
டைம் ட்ராவல் வகை திரைப்படங்கள் என்பது இயற்கையாகவே மீண்டும் மீண்டும் வரும் காட்சிகள் என்று அர்த்தம்! காலப் பயணம் மற்றும் அறிவியல் புனைகதை பின்னணியில் திரைக்கதை அமைத்து அந்த அந்த காலகட்டத்திற்கு ஏற்ற உடை, நடிகர்களின் தேர்வு மற்றும் தோற்றம், வண்ணம் என அனைத்திலும் கவனமாகக் கையாண்டு நகைச்சுவை கலந்து படைத்துள்ளார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்.
மொத்தத்தில் மினி ஸ்டுடியோ சார்பில் எஸ்.வினோத் குமார் தயாரித்துள்ள மார்க் ஆண்டனி மாஸ்-ஆக்ஷன் டைம்பாஸ்  என்டர்டெய்னர்.