மார்கழி திங்கள் விமர்சனம் : ஆணவ படுகொலைகள் செய்யும் சாதி என்கிற வெறியை தண்டிக்கும் திரைப்படம் மார்கழி திங்கள் | ரேட்டிங்: 2.5/5

0
245

மார்கழி திங்கள் விமர்சனம் : ஆணவ படுகொலைகள் செய்யும் சாதி என்கிற வெறியை தண்டிக்கும் திரைப்படம் மார்கழி திங்கள் | ரேட்டிங்: 2.5/5

வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர் சுசீந்திரன் தயாரித்து கதை, திரைக்கதை எழுத மார்கழி திங்கள் படத்தை இயக்கியிருக்கிறார் மனோஜ்.கே.பாரதிராஜா.
இதில் இயக்குனர் பாரதிராஜா, ஷ்யாம் செல்வன், ரக்ஷனா, நக்ஷா சரண், சுசீந்திரன், அப்புக்குட்டி ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை-இசைஞானி இளையராஜா, ஒளிப்பதிவு-வாஞ்சிநாதன் முருகேசன், எடிட்டர்-தியாகு, கலை-சேகர், வசனம்-செல்ல செல்லம்,  சண்டை- தினேஷ் காசி, நடனம்-ஷோபி பால்ராஜ், உடை-வாசுகி பாஸ்கர், இணை இயக்குனர் – ராஜ பாண்டியன், தயாரிப்பு மேற்பார்வை -சுவாமிநாதன், கிரியேடிவ் புரொடியூசர்- துரை, பிஆர்ஒ-நிகில்.
திண்டுக்கல் மாவட்டம் நெய்காரபட்டியில் தாய், தந்தையை இழந்த கவிதா (ரக்ஷனா) தனது பாசமான தாத்தா ராமையாவுடன் (பாரதிராஜா) ஒரு சிறிய நகரத்தில் வசிக்கிறார். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வினோத் தன் வகுப்பில் எல்லாத் தேர்வுகளிலும் முதலாவதாக வருவதால் கவிதா அவனை வெறுக்கிறாள். அவரின் சக வகுப்பு மாணவரான வினோத்திற்கும் (ஷியாம் செல்வம்), யார் முதல் மதிப்பெண் எடுப்பது என்ற போட்டி எழுகிறது. பொதுத் தேர்வில் அவனை விஞ்சிவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாள். அவள் அவனை விஞ்ச ஒரு சபதம் கூட எடுக்கிறாள். பொதுத் தேர்வுகளில் சிறப்பாக செயல்பட்டு அவள் வெற்றி பெறுகிறாள், ஆனால் வினோத்தின் தியாகத்தைப் பற்றி அறிந்ததும், அப்படியே அவனைக் காதலிக்கிறாள். இரண்டு வருடங்கள் கடந்து பள்ளிப்படிப்பை முடிக்கிறார்கள். கல்லூரிக்கு செல்லும் நேரம் வரும்போது வினோத் சென்னையில் உள்ள கல்லூரியில் படிப்பை தேர்வு செய்கிறார். அதே போல கவிதா சென்னையில் உள்ள கல்லூரியில் படிக்க ஆசை படுகிறார். ஆனால்,  கவிதா சென்னை செல்வதை ராமையா எதிர்க்கிறார், மேலும் அவரது சொந்த ஊருக்கு அருகில் உள்ள கல்லூரியில் படிப்பை தேர்வு செய்யச் சொல்கிறார். வினோத் மீது தனக்குள்ள காதலை தாத்தா ராமையாவிடம் தெரிவிக்க கவிதா முடிவு செய்து அவரிடம் வினோத் மீது உள்ள காதலை தெரிவிக்கிறாள். முதலில் முகத்தில் அதிர்ச்சியை காட்டும் தாத்தா ராமையா, பேத்திக்காக ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வினோத்தின் பெற்றோரிடம் பேசி அவனுடன் அவளது திருமணத்தை முடிக்க ராமையா சம்மதிக்கிறார். இருப்பினும், அவர் ஒரு நிபந்தனை விதிக்கிறார். இருவரும் கல்லூரிப் படிப்பை முடித்த பிறகுதான் திருமணம் நடக்கும். அதுவரை இருவரும் சந்தித்து பேசக் கூடாது, ஒருவரையொருவர் சந்திக்கவும் கூடாது என்று கண்டிஷன் போடுகிறார் கவிதாவின் தாத்தா. கவிதா, தாத்தா விதித்த நிபந்தனைகள் ஒப்புக்கொள்கிறாள். பின்னர் இருவரும் வெவ்வேறு கல்லூரியில் சேர்ந்து படிக்கிறார்கள். மூன்று வருடங்கள் கழித்து அவள் படிப்பை முடித்துவிட்டு ஊர் திரும்பும்போது, வினோத்தையும் அவனது குடும்பத்தினரையும் எங்கும் காணவில்லை. அடுத்து என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.

தாத்தாவாக பாரதிராஜா தன் தளர்ந்த உடலாலும், குரலாலும் தாத்தா கதாபாத்திரமாகவே வாழ்ந்து  திரைக்கதைக்கு உயிர் கொடுத்துள்ளார்.
புதுவரவு ஷியாம் செல்வன் கதாநாயகனாகவும், நாயகியாக ரக்ஷனா, இருவரும் பள்ளி பருவம் காலேஜ் பருவம் என்று சிறப்பாக நடித்து தங்களது தேர்வை நியாயப்படுத்தி இருக்கிறார்கள்.
தயாரிப்பாளரும், இயக்குனருமான சுசீந்திரன் வில்லனாக மிரட்ட முயற்சித்துள்ளார். மற்றும் கவிதாவின் தோழியாக நக்ஷா சரண், அப்புக்குட்டி, சூப்பர் குட் சுப்பிரமணி உள்பட அனைவரும் நல்ல தேர்வு.
வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு மற்றும் மெதுவாக நகரும் தியாகுவின் எடிட்டிங் பேசும் படி இல்லை
.
இளையராஜாவின் பாடல்களும் பின்னணி இசையும் மெதுவாக நகரும் திரைக்கதைக்கு ஓர் அளவு நகர உதவியுள்ளார்.
வழக்கமான காதல் ஆணவ படுகொலைகளை மைய்யப்படுத்தி சுசீந்திரனின் திரைக்கதை அமைத்துள்ளார். ஆனால் கடைசி 20 நிமிடங்கள் மட்டுமே செல்லா செல்வத்தின் வசனங்களும், திரைக்கதையும் பேசுகிறது.
பள்ளி மாணவர்களை பற்றிய கதை என்றாலே நகைச்சுவைக்கு பஞ்சமே இருக்காது. நகைச்சுவை காட்சிகள் இடம் பெற நிறைய வாய்ப்பு இருந்தும் படத்தில் ஒரு நகைச்சுவை காட்சியும் இல்லை. மெதுவாக நகரும் திரைக்கதையை விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்ல இயக்குனர் மனோஜ் பாரதிராஜாவால் முடியவில்லை. ஆனால் கடைசி 20 நிமிடங்கள் அந்த காட்சி அமைப்பின் மூலம் விறுவிறுப்பை கூட்டி இயக்குநராகவும் வெற்றி பெற்றுள்ளார்.
மொத்தத்தில் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் மார்கழி திங்கள், ஆணவ படுகொலைகள் செய்யும் சாதி என்கிற வெறியை தண்டிக்கும் திரைப்படம் மார்கழி திங்கள்.