மாயன் சினிமா விமர்சனம் : மாயன் – சோதனை | ரேட்டிங்: 2/5

0
230

மாயன் சினிமா விமர்சனம் : மாயன் – சோதனை | ரேட்டிங்: 2/5

நடிகர்கள் :
வினோத் மோகன் (ஆதி), பிந்து மாதவி (கோபெரும்தேவி), ஜான் விஜய் (சக்ரவர்த்தி), ஆடுகளம் நரேன் (ராமலிங்கம்), சாய் தீனா (வீர சூரன்), ரஞ்சனா நாச்சியார் (சின்னா), கஞ்சா கருப்பு (தக்லஸ்), ராஜா சிம்மன் (முருக சூரன்), மரியா (ஆதிகாளி), பியா பாஜ்பாயி (கௌரவ தோற்றம்)

தொழில்நுட்ப கலைஞர்கள் :
எழுத்து – இயக்கம் : ஜெ.ராஜேஷ் கண்ணா
தயாரிப்பு : ஃபாக்ஸ் அண்ட் க்ரோ ஸ்டூடியோஸ் ஜெ.ராஜேஷ் கண்ணா
இணை தயாரிப்பு: ஜி.வி.கே.எம். எலிபன்ட் பிக்சர்ஸ் டத்தோ கணேஷ் மோகன சுந்தரம்
ஒளிப்பதிவாளர்: கே.அருண் பிரசாந்த்
இசையமைப்பாளர் : எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட்
படத்தொகுப்பு: எம்.ஆர்.ரெஜிஸ்
கலை இயக்குனர்: எ.வனராஜ்
வி.எஃப்.எக்ஸ் : எஸ்.ரமேஷ் ஆச்சார்யா
உடை வடிவமைப்பு: நிவேதா ஜோசப்
ஒலி வடிவமைப்பு: யுகேஐ.ஐயப்பன்
சண்டைப்பயிற்சி : தினேஷ் காசி
நடனம் : நந்தா கோபால்
கலரிஸ்ட் : எஸ்.சிவசந்தோஷ்
ஸ்டில்ஸ்: ஹரி
பத்திரிக்கை தொடர்பு – வெங்கடேஷ்

அமைதியான சுபாவம் கொண்டு, ஐடி துறையில் பணிபுரியும் ஆதிக்கு (வினோத் மோகன்) 13 நாட்களில் உலகம் அழிந்துவிடும் என்று ஒரு மின்னஞ்சல் செய்தி வருகிறது. அதை முதலில் நம்பாத ஆதி, விசித்திரமான பாம்புகள் மற்றும் வித்தியாசமான சின்னங்களுடன் சில சந்திப்புகளுக்குப் பிறகு, தன்னைச் சுற்றி நடக்கும் சில நிகழ்வுகளால் தனக்கு வந்த மின்னஞ்சல் செய்தியை நம்புகிறான். உலகம் அழியத்தான் போகிறது என்பதால், தனது மனம் விரும்பிய அனைத்தையும் தைரியமாக செய்கிறான். வங்கியில் கடன் வாங்கி வீடு வாங்குகிறான். தனது முதலாளி ராமலிங்கத்தை (ஆடுகளம் நரேன்) எதிர்கொண்டு அவரை அவமானப்படுத்தி விட்டு வேலையையும் விட்டுவிடுகிறான். கந்து வட்டிக்காரன் வீர சூரன் (சாய் தீனா) உட்பட அனைவரையும் அடித்து நொறுக்குகிறான், தனது காதலியான கோபெரும்தேவியை (பிந்து மாதவி) அதிரடியாக உடனே திருமணம் செய்துகொள்கிறான், மேலும் ஒரு போலீஸ் அதிகாரி சக்ரவர்த்தியுடன் (ஜான் விஜய்) சண்டை போடுகிறான். தனக்கு தெரிந்த உண்மையை வெளியே யாருக்கும் சொல்லாமல் ஒவ்வொரு நாளையும் கடத்தும் போது அந்த 13 வது நாளும் வருகிறது. ஆதி எதிர்பார்த்தது போல் உலகம் அழிந்ததா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

ஆதி கதாபாத்திரத்தில் புதுமுக நடிகர் நடிகர் வினோத் மோகன், நல்ல உடற்கட்டுடன் தோன்றினாலும் உணர்ச்சிகரமான காட்சிகளில் உணர்ச்சியை வெளிப்படுத்தும் அளவுக்கு முகபாவங்கள் இல்லை, என்றாலும் முடிந்தவரை சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த முயற்சித்துள்ளார். சண்டைக் காட்சிகளில் அசத்தியுள்ளார்.

கோபெரும்தேவியாக நடித்திருக்கும் பிந்து மாதவி, போலீஸ் அதிகாரி சக்ரவர்த்தியாக நடித்திருக்கும் ஜான் விஜய், வில்லன்களாக நடித்திருக்கும் சாய் தீனா, ராஜ சிம்மன், ஆடுகளம் நரேன், ரஞ்சனா நாச்சியார், கஞ்சா கருப்பு, மரியா, பியா பாஜ்பாயி (கௌரவ தோற்றம்) ஆகியோரின் பாத்திரங்கள் பெரிதாக இல்லாவிட்டாலும் திரைக்கதைக்கு தேவையான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

அருண் பிரசாந்த்தின் ஒளிப்பதிவில் கேமரா கோணங்கள் ஓகே.

எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட் இசை மற்றும் பின்னணி இசை சற்று இரைச்சலை கட்டுப்படுத்தி இருந்தால், கதைக்கு ஏற்ப மிரட்டலாக இருந்திருக்கும்.

அதே போல படத்தொகுப்பாளர் எம்.ஆர்.ரெஜிஸ் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பை கூட்டி இருக்கலாம்.

தயாரிப்பின் பட்ஜெட்டுக்கு ஏற்றது போல் க்ளைமேக்ஸில் ஆடு முகம் மற்றும் டைனோசர் முகம் கொண்ட போர் வீரர்களின் படைகள் இடம்பெறும் வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் அமைந்துள்ளது. சினிமாவில் திரைக்கதை என்பது ஆணி வேர் மாதிரி, திரையில் வரிசைப்படுத்தி காட்டப்படும் காட்சிகள் மூலம் உணர்வுகள் மற்றும் கதை நகர்த்தலை சிறந்த திரைக்கதை மூலம் வெற்றிப்படமாக மாற்றலாம், அதேசமயம் நல்ல கதையை திரைக்கதை சொதப்பலால் தோல்வி படமாகவும் மாற்றலாம். மாயன் நாட்காட்டி ஆனது, அண்ட சுழற்சிகளை கண்காணிக்கும் ஒரு சிக்கலான கால இடைவெளிகளின் மூலம், கலிகாலம் முற்றிவிட்டது, உலகம் அழியப் போகிறது என்கிற கருத்தை மையமாக வைத்து ஃபேண்டஸி, திரில்லர் மற்றும் வரலாறு என மூன்றுவித ஜானரில் நகரும் சுவாரஸ்யமும், விறுவிறுப்பும் இல்லாத திரைக்கதை மூலம் பார்வையாளர்களை ஏமாற்றி விட்டார் இயக்குனர் ராஜேஷ் கண்ணா.

மொத்தத்தில் ஃபாக்ஸ் அண்ட் க்ரோ ஸ்டுடியோஸ் மற்றும் ஜி.வி.கே.எம். எலிபன்ட் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள மாயன் – சோதனை.