மஹா விமர்சனம்: மஹா சிறந்த கிரைம் திரில்லர் திரைப்படம் |மதிப்பீடு: 3.5/5

0
372

மஹா விமர்சனம்: மஹா சிறந்த கிரைம் திரில்லர் திரைப்படம் |மதிப்பீடு: 3.5/5

நடிகர் சிம்பு, நடிகை ஹன்சிகா நடிப்பில் ‘மஹா’ படத்தை எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் மதியழகன் மற்றும மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் இணைந்து படத்தை தயாரித்துள்ளனர்.
மஹா திரைப்படத்தில் குழந்தை மானஸ்வி, ஸ்ரீகாந்த், தம்பி ராமையா, கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் யு.ஆர்.ஜமீல் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஜிப்ரான் இசையமைக்க லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிஆர்ஒ-சுரேஷ் சந்திரா. இது ஹன்சிகாவின் 50-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தை கொலை வழக்கை தீர்க்கும் போலீஸ்காரரின் கதைதான் ‘மஹா’.விமானப் பெண்ணாக வரும் ஹன்சிகா மோத்வானி பைலட் சிம்புவை காதலிக்கிறார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இதனிடையே ஒரு 8 வயது சிறுமி மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். போதைக்கு அடிமையாகி இருக்கும் ஒருவன் தொடர்ந்து குழந்தைகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து வீதியில் வீசிக்கொண்டு வருகிறான். அவனை பிடிக்க போலீஸ் அதிகாரியாக களமிறக்கப்படுகிறார் விக்ரம் (ஸ்ரீகாந்த்). இந்நிலையில் அவர் வழக்கை முடிக்கும் முன்னரே மற்றொரு பள்ளி மாணவியான மஹாவின் மகள் ஐஸ்வர்யா (குழந்தை மானஸ்வி) காணாமல் போகிறாள். விஷயங்கள் தீவிரமாக இருக்கும்போது வழக்கில் தொடர்புடைய போலீஸ்காரர்களில் ஒருவரான அலெக்ஸின் (தம்பி ராமையா) பேத்தியும் கடத்தப்படுகிறாள். அதன் பின் கடத்தப்பட்ட குழந்தை என்ன ஆனது?அந்தக்குழந்தை மீட்கப்பட்டதா இல்லையா..? தொடர் கொலையாளி கண்டுபிடிக்கப்பட்டாரா? என்பதே படத்தின் மீதி கதை.

ஹன்சிகாவை மையமாக வைத்து உருவாகியுள்ள மஹா படத்தில் சிறப்பு வேடத்தில் சிம்பு கேமியோ தோற்றத்தில் தோன்றி சண்டை மற்றும் பாடல் காட்சியோடு மறைகிறார்.இது பெண்களை மையப்படுத்திய த்ரில்லர் படம். பெண்குழந்தைகளைக் குறிவைக்கும் சைக்கோ கொலையாளியைப் கண்டுபிடிக்கும் கதாபாத்திரத்தில் இளம் தாயாக நடித்துள்ள ஹன்சிகாவின் நடிப்பு வேறலெவலில் உள்ளது. குறிப்பாக குழந்தையை தொலைத்துவிட்டு தவிக்கும் உணர்வுபூர்வமான காட்சிகளில் அப்ளாஸ் பெறுகிறார். ஹன்சிகாவுக்கு சிறப்பான ஐம்பதாவது படமாக மஹா அமைந்துள்ளது
சுஜித் ஷங்கர் கொடூர கதாபாத்திரத்தில் செமையாக தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

ஸ்ரீகாந்தும் தன் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார், என்றாலும் காக்கி உடை அவருக்கு பொருந்த வில்லை.

தம்பி ராமையா தனது சிறந்ததை கொடுத்துள்ளார். கருணாகரன் நடிப்பதற்கு அதிக ஸ்கோப் இல்லாவிட்டாலும் கண்ணியமான வேலையைச் செய்திருக்கிறார். குழந்தை மானஸ்வி உட்பட மற்ற நடிகர்கள் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

ஜிப்ரானின் இசை த்ரில்லர் படம் பார்க்கிறோம் என்பதை அவரது இசை உணர்த்துகிறது.

சைக்கோ கொலையாளியை ஹீரோயின் கண்டுபிடிக்கும் த்ரில்லர் படமாக உருவாகி இடைவெளி பிளாக் ட்விஸ்ட்டுடன் கதை அமைத்தாலும் திரைக்கதையில் கோட்டை விட்டார் இயக்குனர் ஜமீல். இது போன்ற சைக்கோ த்ரில்லர்களுக்கு ஒவ்வொரு காட்சியும் படத்தின் மனநிலையை உயர்த்தி பார்வையாளர்களை முழுவதுமாக ஈடுபடுத்த வேண்டும்.

மொத்தத்தில் எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் மதியழகன் மற்றும மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள மஹா சிறந்த கிரைம் திரில்லர் திரைப்படம்.