மழை பிடிக்காத மனிதன் சினிமா விமர்சனம் : மழை பிடிக்காத மனிதன் – ஈர்ப்பு குறைவு | ரேட்டிங்: 2/5
இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ், ஏ.எல்.அழகப்பன், மேகா ஆகாஷ், சரண்யா பொன்வண்ணன், முரளி சர்மா, தனஞ்செயன் , சுரேந்தர் தாக்கூர், தலைவாசல் விஜய், இயக்குனர் ரமணா, ப்ருத்வி அம்பர் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘மழை பிடிக்காத மனிதன்’.
தயாரிப்பாளர்கள் : கமல் போஹ்ரா, பங்கஜ் போஹ்ரா, லலிதா தனஞ்சயன், பி.பிரதீப், விக்ரம் குமார் எஸ்.
இசை : விஜய் ஆண்டனி, ராய்
எடிட்டிங் : பிரவீன் கே.எல்.
ஆக்ஷன் : சுப்ரீம் சிவா, மகேஷ் மாத்யூ, கெவின் குமார்
ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் : விஜய் மில்டன்
மக்கள் தொடர்பு : டிஒன் சுரேஷ்சந்திரா, அப்துல் நாசர்.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட அமைச்சரின் (ஏ.எல்.அழகப்பன்) மகனை சலீம் (விஜய் ஆண்டனி) கொலை செய்துவிட்டு தப்பித்து விடுவார். சீக்ரெட் ஏஜெண்ட்டாக நிழல் உலகில் வலம் வருகிறார். விஜய் ஆண்டனி உயர் அதிகாரியான சரத்குமாரின் தங்கை தியாவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். சென்னையில் இருக்கும் அமைச்சர் ஒருவர் விஜய் ஆண்டனி உயிரோடு இருப்பதை தெரிந்து கொண்டு அவரைக் கொல்லும் முயற்சியில் அவருடைய மனைவியை கொலை செய்து விடுகிறார்கள். அதோடு தன்னுடைய மனைவி இறந்தபோது மழை பெய்து கொண்டு இருந்ததால் விஜய் ஆண்டனி மழையை வெறுத்து ‘மழை பிடிக்காத மனிதனாகி’ விடுகிறார். அமைச்சர் நடத்திய அந்த தாக்குதலில் விஜய் ஆண்டனியும் அவருடைய மனைவியும் இறந்துவிட்டார் என்று சரத்குமார் அனைவரையும் நம்ப வைக்கிறார். இந்த மூலக்கதை ஒரு நிமிட விளக்கும் தரமற்ற படக்கதையுடன் படம் தொடங்குகிறது. அதனை தொடர்ந்து பின் விஜய் ஆண்டனியை அந்தமானுக்கு அழைத்து வருகிறார் சரத்குமார். அந்தமானில் தனது அடையாளத்தை மறைத்து தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். ஆனால் அவர் அங்கு சந்தித்தவர்களின் உணர்ச்சிபூர்வமான பிணைப்பை வளர்த்துக் கொள்ளும் போது என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகனாக எப்போதும் போல இறுக்கமான முகத்தோடு விஜய் ஆண்டனி உணர்ச்சிகரமான நடிப்பை வெளிப்படுத்த முயற்சி செய்கிறார். நடிப்பில் பெரிய அளவில் மிளிர வில்லை என்றாலும் சண்டை காட்சிகளில் சிறப்பாக செய்துள்ளார்.
சரண்யா பொன்வண்ணன் வழக்கம்போல் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளார்.
சரத்குமார் கேமியோ ரோலில் ஜொலிக்கிறார். இன்னும் அவரது பாத்திரத்தை விரிவு படுத்தி இருக்கலாம்.
கௌரவத் தோற்றத்தில் சத்யராஜ் திறமை வீணடிக்கப்பட்ட உள்ளது.
விஜய் ஆண்டனியை பழிவாங்க துடிக்கும் அமைச்சர் கதாபாத்திரத்தில் ஏ.எல்.அழகப்பனுக்கு காட்சி அமைப்பு மிகமிக குறைவு.
மேகா ஆகாஷ், இயக்குனர் ரமணா, முரளி சர்மா, தனஞ்செயன், சுரேந்தர் தாக்கூர், தலைவாசல் விஜய், ப்ருத்வி அம்பர் உட்பட அனைத்து நடிகர்கள் தங்களது கதாபாத்திரத்தில் நேர்த்தியான நடிப்பு வெளிப்படுத்தியுள்ளனர்.
ஏரியல் ஷாட்டில் கடலுக்கு நடுவே இருக்கும் அந்தமான் கோட்டை, கப்பல் வந்து சேரும் காட்சி, அந்தமானின் அழகு காட்சிக்கு காட்சி அற்புதமான கோணங்களில் ஒளிப்பதிவில் மிரட்டி இருக்கிறார் விஜய் மில்டன்.
விஜய் ஆண்டனி மற்றும் ராய் ஆகியோர் இசையில் பாடல்கள் ஒகே. பின்னணி இசை குறிப்பிட்டு சொல்லும் படி இல்லை.
சுப்ரீம் சிவா, மகேஷ் மாத்யூ, கெவின் குமார் ஆகியோரின் ஆக்ஷன் காட்சிகள் படத்தின் ஹைலைட்.
எளிதில் கதையை யூகிக்கும் வகையில் அமைத்து பெரிய அளவில் விறுவிறுப்பை ஏற்படுத்த தவறிவிட்டார் எடிட்டர் பிரவீன் கே.எல்.
எதிர்பார்த்த வழக்கமான கதைகளம். சுமாரான திரைக்கதை, பார்வையாளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்த தவறிவிட்டார் இயக்குனர் விஜய் மில்டன்.
மொத்தத்தில் இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர் தயாரித்திருக்கும் மழை பிடிக்காத மனிதன் – ஈர்ப்பு குறைவு.
ALSO READ:
இயக்குனரை கதறவிட்ட தயாரிப்பாளர்: பஞ்சாயத்தில் ‘மழை பிடிக்காத மனிதன்’