மழையில் நனைகிறேன் சினிமா விமர்சனம் : மழையில் நனைகிறேன் – கனவோடு கரைந்த காதல் கதை | ரேட்டிங்: 2.5/5
நடிகர்கள்:
ஜீவா சபாஸ்டியன் – அன்சன் பால்
ஐஸ்வர்யா – ரெபா ஜான்
ஜோசப் சபாஸ்டியன் – மேத்யூ வர்கீஸ்
ரெஜினா – அனுபமா குமார்
சிவா (ஜீவா சபாஸ்டியன் நண்பன்)- கிஷோர் ராஜ்குமார்
சேஷாதாரி – ஷங்கர் குரு ராஜா
அண்ணாமலை – வெற்றிவேல் ராஜா
சுஜாதா – ஐஸ்வர்யா அம்மா
தொழில்நுட்ப கலைஞர்கள் :
கதை, திரைக்கதை, இயக்குனர ;: டி.சுரேஷ் குமார்
வசனம் : விஜி, கவின் பாண்டியன்
இசை : விஷ்ணு பிரசாத்
ஓளிப்பதிவு : ஜே. கல்யாண்
படத்தொகுப்பு : ஜி.பி. வெங்கடேஷ்
ஆடை வடிவமைப்பாளர் : ஸ்ரீவித்யா ராஜேஷ்
பாடல்கள் : லலிதானந்த், முத்தம்சில்
கலை இயக்குனர் : என்.என்.மகேந்திரன்
சண்டைக்காட்சிகள் : டி.ரமேஷ்
கலரிஸ்ட் : ரங்கா
ஒப்பனை : ரவி
ஸ்டில்ஸ் : பி.எம். கார்த்திக்
தயாரிப்பு : ஸ்ரீவித்யா ராஜேஷ், பி.ராஜேஷ் குமார்
பேனர்: ராஜ்ஸ்ரீ வென்ச்சர்ஸ்
பத்திரிக்கை தொடர்பு : சுரேஷ் சந்திரா, அப்துல்.ஏ.நாசர்
தொழிலதிபர் ஜோசப் செபாஸ்டியன் (மேத்யூ வர்கீஸ்) மற்றும் அவரது மனைவி ரெஜினா (அனுபமா குமார்) ஆகியோரின் ஒரே மகன் ஜீவா செபாஸ்டியன் (அன்சன் பால்). கண்டிப்பான அப்பா, அம்மாவின் அன்பால் சுகபோக வாழ்க்கை வாழும் ஜீவா, படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, நண்பர்களுடன் ஜாலியா ஊர்சுற்றியும், குடிப்பழக்கமாக, எந்த வேலைக்கும் செல்லாமல், தான் விரும்பிய வாழ்க்கையை கழிக்கிறார். பாரம்பரியத்துடன் வாழ்ந்து வரும் சேஷாதாரி (சங்கர் குருராஜா) மற்றும் சுஜாதாவின் மூத்த மகள் ஐஸ்வர்யா (ரெபா ஜான்) முதுகலை பட்டப்படிப்புக்காக அமெரிக்கா செல்ல வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார். இரண்டாவது மகள் கல்லூரிக்கும், மகன் பள்ளியில் படிக்கிறான். நண்பர்களுடன் உல்லாசமாக இருக்கும் போது, ஜீவா தற்செயலாக ஐஸ்வர்யாவைக் கண்டதும் காதல் வயப்படுகிறார். தனது காதலை சொல்ல தயங்கிய அவர், ஐஸ்வர்யாவை பல நாட்களாக பின்தொடர்கிறார். இதை பார்த்த ஐஸ்வர்யா ஜீவாவை எச்சரிக்கிறார். ஒரு நாள், ஜீவா தனது காதலை ஐஸ்வர்யாவிடம் தனது காதலை சொல்கிறார். ஐஸ்வர்யாவுக்கு வாழ்க்கையில் சில கனவுகள் மற்றும் லட்சியங்கள் இருப்பதால் ஜீவாவின் காதலை ஏற்க மறுக்கிறார். ஜீவாவின் ஒரே குறிக்கோள் அவளது அன்பையும் பாசத்தையும் சம்பாதிப்பதே. அதனால், மனம் தளராத ஜீவா, இன்று நீ என்னைக் காதலிக்காமல் இருக்கலாம், ஆனால் ஒரு நாள் நீ விரும்புவாய் என்று நான் நம்புகிறேன். அதுவரை உனக்காக நான் காத்திருப்பேன். என்று கூறுகிறார்;. ஐஸ்வர்யாவை பின் தொடராமல்; தனித்தே இருக்கிறார். இந்த நிலையில், நாட்கள் செல்ல செல்ல, ஜீவாவின் நல்ல குணங்களையும், ஐஸ்வர்யாவிற்குள் காதல் மலர்கிறது. ஐஸ்வர்யா ஜீவா மீது ஈர்ப்பு கொள்கிறார். தன் காதலை ஜீவாவிடம் எப்படி சொல்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார். எப்படியாவது ஜீவாவிடம் தன் காதலை சொல்ல நினைக்கும் போது, ஜீவாவிடம் தன்னை ஒரு இடத்தில் விடும்படி கேட்கிறாள். ஜீவா ஐஸ்வர்யாவை தன் நண்பனின் பைக்கில் ஏற்றிச் செல்லும்போது இருவரும் சாலை விபத்தில் சிக்குகிறார்கள். அவர்கள் இருவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன்பிறகு, யாரும் எதிர்பார்க்காத க்ளைமேஸுடன் மீதமுள்ள கதை செல்கிறது.
அன்சன் பால் ஜீவா சபாஸ்டியன் கதாபாத்திரத்திலும், அழகிய நாயகி ரெபா ஜான் ஐஸ்வர்யா கதாபாத்திரத்திலும், ஒரு காதல் படத்தில் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் விதமாக அவர்களின் திரை இருப்பு உணர்ச்சி சாரத்தை கணிசமாக வெளிப்படுத்தி தாங்கள் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரத்தை உயிர்ப்பித்திருக்கிறார்கள்.
பெற்றோர்களாக நடித்த மேத்யூ வர்கீஸ், அனுபமா குமார், ஷங்கர் குரு ராஜா, சுஜாதா, ஜீவா சபாஸ்டியனின் நண்பன் சிவாவாக கிஷோர் ராஜ்குமார் மற்றும் வெற்றிவேல் ராஜா ஆகியோர் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
விஷ்ணு பிரசாத்தின் இசையும் பின்னணி இசையும் ஓகே. காதலர்களின் உறவின் சாராம்சத்தை அழகாக சித்தரித்திருக்கிறார் ஓளிப்பதிவாளர் ஜே.கல்யாண்.
படத்தொகுப்பாளர் ஜி.பி.வெங்கடேஷ் கண்டிப்பாக கூடுதல் கவனம் செலுத்தி திரை நேரத்தைக் குறைத்திருந்தால், காதலுக்கான தனித்துவமான அணுகுமுறை சிறப்பாக வெளிப்பட்டிருக்கும்.
காதலியிடம் காதலன் தன் காதலை பலமுறை வெளிப்படுத்தும் ஒரு அழகான ஆத்மார்த்தமான காதல் கதையை எந்த ஒரு விரசமான காட்சிகள் இல்லாமல் யாரும் எதிர்பார்க்காத க்ளைமேஸுடன்; சொல்ல நினைத்த இயக்குனர் டி.சுரேஷ் குமார் நீண்ட திரைக்கதையை கொஞ்சம் சுருக்கியிருந்தால், மழையில் நனைகிறேன் சற்று தொய்வு இல்லாமல் விறுவிறுப்பாக நகர்ந்திருக்கும்.
மொத்தத்தில் ராஜ்ஸ்ரீ வென்ச்சர்ஸ் சார்பில் ஸ்ரீவித்யா ராஜேஷ், பி.ராஜேஷ் குமார் மழையில் நனைகிறேன் – கனவோடு கரைந்த காதல் கதை.