மறக்குமா நெஞ்சம் சினிமா விமர்சனம் : மறக்குமா நெஞ்சம் ஓகே ரகமாக, பள்ளி நண்பர்களுடன் தியேட்டரில் ரீயூனியன் ஆகி உங்கள் நினைவுகளை பகிர்ந்து கொள்ளலாம் | ரேட்டிங்: 2.5/5

0
207

மறக்குமா நெஞ்சம் சினிமா விமர்சனம் : மறக்குமா நெஞ்சம் ஓகே ரகமாக, பள்ளி நண்பர்களுடன் தியேட்டரில் ரீயூனியன் ஆகி உங்கள் நினைவுகளை பகிர்ந்து கொள்ளலாம் | ரேட்டிங்: 2.5/5

நடிகர்கள்:
ரக்ஷன் (கார்த்திக்)
மலினா (பிரியதர்ஷினியாக)
தீனா (சலீமாக)
ராகுல் (கௌதமாக)
ஸ்வேதா வேணுகோபால் (சரண்யா)
ராகவ் (முத்தழகன்)
டென்னிஸ் (ஜோசப்பாக மெல்வின்)
முனிஷ்காந்த் கார்த்திகேயனாக (PT master)
அர்ஜுனாக அருண் குரியன்
ஜெனிபராக அகிலா (கணித ஆசிரியர்)
லிண்டோஷாவாக ஆஷிகா காதர்
நடாலி லூர்ட்ஸ் ஷில்பாவாக
யோகியாக விஷ்வத்

தொழில்நுட்ப கலைஞர்கள் :
எழுத்தாளர் மற்றும் இயக்குனர் – ராகோ.யோகேந்திரன்
ஒளிப்பதிவாளர் – கோபி துரைசாமி
இசை – சச்சின் வாரியர்
தொகுப்பாளர்கள் – பாலமுரளி, ஷஷாங்க் மாலி
கலை இயக்குனர் – பிரேம் கருந்தமலை
பாடல் வரிகள் – தாமரை
ஆடை வடிவமைப்பாளர் – ரம்யா சேகர்
கூடுதல் திரைக்கதை – அக்ஷய் பூல்லா
கூடுதல் உரையாடல் – பிரசாந்த் எஸ், தீனா
ஒலி வடிவமைப்பாளர்கள் – சுகுமார் நல்லகொண்டா, ஸ்ரீகாந்த் சுந்தர் (தி சவுண்டஹாலிக்ஸ்)
ஒலி கலவை – ஜெய்சன் ஜோஸ் (நான்கு பிரேம்கள்)
வண்ணம் – வீரராகவன்
ஆடைகள் – நரேஷ்
ஒப்பனை – ரவி
பிஆர்ஓ – சதீஷ்குமார்
விளம்பர வடிவமைப்பு – ஹீட்ஸ் விளம்பர தொழில்நுட்ப தீர்வுகள்
வடிவமைப்பாளர்கள் – பிரிதிவி ராஜ், சுமன், முருகவேல், ஸ்ரீ ஹரி சங்கர்,
டப்பிங் ஸ்டுடியோ – கிராண்டா சவுண்ட் நிறுவனம்
டப்பிங் பொறியாளர் – காஷ்யப் ராம்மோகன், சாந்தோம் ஜோஸ்
ஸ்டில்ஸ் – புகழ்
VFX – Monolith Technologies Pvt Ltd, Tinge of Hues Post Factory, Chennai
தயாரிப்பு நிர்வாகி – செல்வா சண்முகம்
கிரியேட்டிவ் தயாரிப்பாளர் – ஸ்ரீராம் ஆனந்தசங்கர்
நிர்வாக தயாரிப்பாளர் – அனிருத் வல்லப்
தயாரிப்பு நிறுவனங்கள் – ஃபிலியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் மற்றும் குவியம் மீடியாவொர்க்ஸ்
தயாரிப்பாளர்கள் – ரகு எள்ளுரு – ரமேஷ் பஞ்சகுனுலா – ஜனார்தன் சௌத்ரி – ராகோ.யோகேந்திரன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் எதிர்காலத்தைப் பற்றி கவலையின்றி நண்பர்களுடன் சந்தோஷமாக சுற்றித்திரிந்த பள்ளிப்பருவத்தில் 2008ம் ஆண்டு பிளஸ் 2 தேர்வு எழுதிய கார்த்திக் (ரக்ஷன்), பிரியதர்ஷினி (மலினா), தீனா (சலீம்), ராகுல் (கௌதம்) மற்றும் அவர்களுடன் படித்த பள்ளி மாணவர்கள் அனைவரும் நல்ல வேலைக்கு சென்றுவிடுகிறார்கள். ஒரு சிலர் மட்டும் ஒருவருக்கொருவர் தொடர்பில் இருக்கிறார்கள். 2008ம் ஆண்டு எழுதிய தேர்வில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் 10 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு அளிக்கப்படுகிறது. அதாவது அந்த தேர்வு செல்லாது அதனால் அந்த மாணவ, மாணவியர் மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என 2018-ல் நீதிமன்றம் உத்தரவிடுகிறது. இந்த தீர்ப்பு மற்றவர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும் போது கார்த்திக்  மட்டும் சந்தோஷமாக இருக்கிறான். அதற்கு காரணம் பள்ளியில் படித்தபோது கார்த்திக்கிற்கு பிரியதர்ஷினி மீது காதல் மலர்கிறது, ஆனால் காதலை சொல்லாமல் விடுகிறான். இருப்பினும் இன்று வரை பிரியதர்ஷினியையே நினைத்துக் கொண்டிருக்கிறான். மூன்று மாதத்தில் மறுதேர்வு நடத்த முடிவு செய்யப்படுகிறது. இதையடுத்து அந்த மாணவ, மாணவியர் மீண்டும் தேர்வு எழுத வேலை, வீடு எல்லாத்தையும் விட்டு விட்டு பள்ளிக்கு திரும்புகிறார்கள். இந்த அரிய சந்தர்ப்பத்தில் கண்டிப்பாக தன்னுடைய காதலை பிரியதர்ஷினியிடம் சொல்லிவிட வேண்டும் என முடிவு செய்கிறான் கார்த்திக். இந்த மூன்று மாத காலத்தில் நடக்கும் விஷயங்கள் நடுவில் பிரியதர்ஷினியிடம் கார்த்திக் காதலை சொன்னாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

கார்த்தியாக ரக்ஷன், பிரியதர்ஷினியாக மலினா அதுல், சரணாவாக ஸ்வேதா வேணுகோபால், கௌதமாக ராகுல் சின்ஹா, மூர்த்தி அனைவரும் பள்ளிப் பருவத்தில் ஏற்படும் இளமை துடிப்புகள் முடிந்தவரை சிறப்பான நடிப்பின் மூலம் கொண்டு வர முயற்சித்துள்ளனர்.

மேலும் ராகவ் (முத்தழகன்), டென்னிஸ் (ஜோசப்பாக மெல்வின்), முனிஷ்காந்த் கார்த்திகேயனாக (PT மாஸ்டர்), அர்ஜுனாக அருண் குரியன், ஜெனிபராக அகிலா (கணித ஆசிரியர்), லிண்டோஷாவாக ஆஷிகா காதர், நடாலி லூர்ட்ஸ் ஷில்பாவாக, யோகியாக விஷ்வத் உட்பட பலவீனமான திரைக்கதையை தொய்வில்லாமல் நகர தங்களால் முடிந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர். இவர்கள் மத்தியில் சலீமாக வரும் தீனா மட்டும் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பள்ளி வாழ்க்கை எப்போதும் தனித்துவமானதாக இருக்கும். அந்த வாழ்க்கையை நினைவு கூர்ந்து பார்த்தால், உள்ளத்தில் ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும். அந்த புத்துணர்ச்சியை தொழில்நுட்ப கலைஞர்கள் ஒளிப்பதிவாளர் – கோபி துரைசாமி, இசை – சச்சின் வாரியர், படத்தொகுப்பாளர்கள் – பாலமுரளி, ஷஷாங்க் மாலி, கலை இயக்குனர் – பிரேம் கருந்தமலை ஆகியோர் முடிந்த வரை கிடைக்க நேர்த்தியான பங்களிப்பை வழங்கி உள்ளனர்.

நம் வாழ்வில் பள்ளிப் பருவம் என்பது என்றுமே மறக்க முடியாத ஒன்று. அந்த பள்ளி பருவ வாழ்க்கை நினைவுகளை கதை களமாக தேர்வு செய்த இயக்குனர் ராகோ.யோகேந்திரன் திரைக்கதையை இன்னும் சுவாரஸ்யமாக வைத்து, சிறப்பாக காட்சி படுத்தி இருக்கலாம். இருந்தாலும் 90ஸ் கிட்ஸ்கள் அவர்கள் தங்கள் பள்ளி பருவ நினைவுகளுக்குள் மீண்டும் ஒரு முறை அழைத்துச் செல்ல இயக்குனர் ராகோ.யோகேந்திரன் எடுத்த முயற்சியை பாராட்டலாம்.

மொத்தத்தில் ஃபிலியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் மற்றும் குவியம் மீடியாவொர்க்ஸ் இணைந்து தயாரித்துள்ள மறக்குமா நெஞ்சம் ஓகே ரகமாக, பள்ளி நண்பர்களுடன் தியேட்டரில் ரீயூனியன் ஆகி உங்கள் நினைவுகளை பகிர்ந்து கொள்ளலாம்.