ப்ளடி பெக்கர் சினிமா விமர்சனம் : ப்ளடி பெக்கர் – ஏமாற்றம் | ரேட்டிங்: 1.5/5

0
783

ப்ளடி பெக்கர் சினிமா விமர்சனம் : ப்ளடி பெக்கர் – ஏமாற்றம் | ரேட்டிங்: 1.5/5

ஃபிலாமெண்ட் பிக்சர்ஸ், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கி இருக்கும் படம் ‘ப்ளடி பெக்கர்’.
நடிகர்கள் :
கவின், ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகதா, டி.எம்.கார்த்திக், பதம் வேணுகுமார், அர்ஷத், மிஸ் சலீமா, பிரியதர்ஷினி ராஜ்குமார், அக்ஷயா ஹரிஹரன், அனார்கலி நசர், திவ்யா விக்ரம், தனுஜா மதுரபாந்துலா, ரோஹித் டெனிஸ், வித்யுத் ரவி, முகமது பிலால், யு.ஸ்ரீ சரவணன்.
தொழில்நுட்ப கலைஞர்கள் :
கலை இயக்குநர் – மணிமொழியன் ராமதுரை
ஒளிப்பதிவு – சுஜித் சரங்
எடிட்டிங் – நிர்மல் கூட்டணி,
இசை – ஜென் மார்ட்டினின்
ஆடை வடிவமைப்பு – ஜெய் சக்தி
தயாரிப்பு –  நெல்சன் திலீப்குமார்
நிர்வாக தயாரிப்பு – ராஜா ஸ்ரீதர்
இயக்கம் – சிவபாலன் முத்துக்குமார்
மக்கள் தொடர்பு – டி ஒன், சுரேஷ்சந்திரா, அப்துல் நாசர்

ஒவ்வொரு முறையும் விதவிமான தோற்றத்தில் மக்களிடம் பொய்யைச் சொல்லி பிச்சை எடுக்கும் பிச்சைக்காரன் கவின். அவன் ஜாக் (ரோஹித் டென்னிஸ்) என்ற சிறுவனுடன் வசிக்கிறார். ஜாக் போக்குவரத்து சிக்னல்களில் எழுதுபொருட்களை விற்று நேர்மையாக பணம் சம்பாதிக்க முயல்கிறான். இப்படிபட்ட சூழலில், ஒரு நாள் பிச்சைக்காரனிடம் இறந்த திரைப்பட நடிகர் சந்திரபோஸின் (ராதா ரவி) அரண்மனையில் அன்னதானம் வழங்கப்படுவதாக கூறி, அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார் கவின். சாப்பிட்டு முடித்த கையுடன் யாருக்கும் தெரியாமல் அந்த அரண்மனைக்குள் நுழைந்து விடுகிறார். அந்த கட்டிடத்தின் பிரம்மாண்டம் கவினை கவர்ந்திழுக்க, மறுபுறம் அதிலிருக்கும் ஆபத்தும் அவரைச் சூழ்ந்து கொள்ள கவின் மாளிகைக்குள் சிக்கிக் கொள்கிறார். அது என்ன ஆபத்து? அந்த ஆபத்திலிருந்து அவர் எப்படி மீண்டார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

கவின் வித்தியாசமான பிச்சைக்காரன் கதாபாத்திரத்தில் பொருத்தமானவராக இருந்தபோதும், அவரது நடிப்பு மிகைப் படுத்துவதாக இருக்கிறது.

ரெடின் கிங்ஸ்லி மட்டும் பேயாக முக்கிய வேடத்தில் அப்பாவித்தனம் மற்றும் அடக்கமான நகைச்சுவையுடன் ஜாலி தருணங்களில் ஈர்க்கிறார்.

மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகதா, டி.எம்.கார்த்திக், பதம் வேணுகுமார், அர்ஷத், மிஸ் சலீமா, பிரியதர்ஷினி ராஜ்குமார், அக்ஷயா ஹரிஹரன், அனார்கலி நசர், திவ்யா விக்ரம், தனுஜா மதுரபாந்துலா, ரோஹித் டெனிஸ், வித்யுத் ரவி, முகமது பிலால், யு.ஸ்ரீ சரவணன் என அனைத்து நடிகர்களும் ரொம்ப சுமாரான திரைக்கதைககு எரிச்சலூட்டும் நடிப்பை வழங்குகிறார்கள்.

கலை இயக்குநர் மணிமொழியன் ராமதுரை, ஒளிப்பதிவாளர் சுஜித் சரங், எடிட்டர் நிர்மல் கூட்டணி, ஜென் மார்ட்டினின் இசை மற்றும் பின்னணி இசை, ஆடை வடிவமைப்பாளர் ஜெய் சக்தி ஆகிய தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பு வீணடிக்கப்பட்டுள்ளது.

நடைபாதையில் தங்கி வாழும் மக்களின் உயிர்கள் துச்சமென நினைக்கும் அதிகார வர்க்க மக்களின் அலட்சிய போக்கை ஒரு பிச்சைக்காரனின் வாழ்க்கையைச் சுற்றி நடக்கும் சம்பங்களை மையப்படுத்தி ‘டார்க் காமெடி’ பெயரில் எரிச்சலூட்டும் திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் சிவபாலன்.

மொத்தத்தில் ஃபிலாமெண்ட் பிக்சர்ஸ் ப்ளடி பெக்கர் – ஏமாற்றம்.