ப்ரோக்கன் ஸ்கிரிப்ட் விமர்சனம் : ப்ரோக்கன் ஸ்கிரிப்ட் காமெடி மற்றும் க்ரைம் திரில்லர் பெயரில் பார்வையாளர்களை தலை சுற்ற வைக்கிறது | ரேட்டிங்: 1.5/5
ஜியோவானி சிங் இயக்கி நடித்திருக்கும் தமிழ்த் திரைப்படம் ப்ரோக்கன் ஸ்கிரிப்ட். ரியோ ராஜ், ஜோ ஜியோவானி சிங், ஜெய்னீஷ், குணாளன், நபிஷா ஜுல்லாலுடின், மூனிலா உள்ளிட்டோர் இதில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சிங்கப்பூரில் நாயகி ஒரு டிராவல் ஏஜென்சியில் வேலை செய்கிறார். நாயகிக்கு அந்த ஏஜென்சி வருடத்திற்கு ஒரு இலவச விமான டிக்கெட் கொடுக்கிறார்கள். அதன் மூலம் நாயகி சென்னைக்கு வந்து தன் நண்பரை மெடிக்கல் ஷாப்பில் சந்திக்கிறார். அப்படி சந்திக்கும் போது அந்த இடத்தில் கடைக்காரருக்கு தெரிந்த ஒருவர் நாயகியை பார்த்து ரசித்து, அந்த நபர் நாயகியை பற்றி கடைக்காரரிடம் விசாரிக்கிறார். கடைக்காரர் எச்சரிக்கிறார். அந்த நபர் சிரித்துக் கொண்டே நான் சிங்கப்பூரில் எப்படியும் அவளை சந்திப்பேன் என்று கூறுகிறார். பின் கடைக்காரரிடம் தனக்கு தெம்பாக இருக்க மாத்திரை கேட்டு வாங்கி சாப்பிட்டு உறங்க செல்கிறார். அடுத்து கட் செய்தால் சிங்கப்பூரில் அந்த நபர், நாயகியை நேரில் சென்று சந்திக்கிறார். அதே சமயம் உடல் உறுப்பு திருட்டு குறித்து சில விஷயங்கள் நடக்கிறது. அதை தொடர்ந்து அந்த திருட்டு கும்பலை சேர்ந்த மருத்துவர்கள் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார்கள். மறுபுறம் நாயகியும், அவரின் தம்பியும் விளையாட்டுக்காக ஆளுக்கொரு வீட்டில் சென்று திருட முயற்சிக்கின்றனர். அப்படி இவர்கள் போட்ட திட்டத்தின் படி, வீட்டில் திருடி விட்டு தப்பித்தார்களா? இல்லையா? உடல் உறுப்பு திருடும் மருத்துவர்களை கொலை செய்தது யார்? என்பதுடன் திடுக்கிடும் கிளைமாக்ஸ் திருப்பங்களே படத்தின் மீதி கதை.
இந்த கதையை அறிமுக இயக்குனர் ஜோ ஜியோவானி சர்ஜீத் சிங் சைக்கோ என்ற கதாபாத்திரத்தில் நடித்தும் இயக்கியுள்ளார்.
சிங்கப்பூர் ரஜினியாக வலம் வரும் நடிகர் தனித்துவமான நடிப்பின் வழங்கி கதாபாத்திரம் மற்றும் கதை நகர்வுக்கு ஓர் அளவு தாங்கி பிடிக்கிறார்.
படத்தில் ரியோ ராஜ், ஜோ ஜியோவானி சிங், மூனிலா, ஜெய்னீஷ், குணாளன் மற்றும் பலர் உட்பட அனைத்து நடிகர்களும், அழுத்தம் இல்லாத திரைக்கதைக்கு தங்களால் முடிந்த பங்களிப்பை தந்துள்ளனர்.
சலீம் பிலால் ஜிதேஷின் ஒளிப்பதிவு சிங்கப்பூரை ஓர் அளவுக்கு அழகாக படம் பிடித்துக் காட்டியுள்ளார். பிரவீன் விஷ்வா மாலிக்கின் இசை மற்றும் பின்னணி இசை ஒகே.
கனவை மையப்படுத்திய கதை களத்தில் மனித உறுப்புகளின் சட்டவிரோத வர்த்தகம் மற்றும் டிராவல் ஏஜென்சிகளில் பணிபுரியும் சில நேர்மையற்ற ஊழியர்களின் தில்லு முள்ளு ஆகியவையை துண்டு துண்டான குழப்பமான திரைக்கதை அமைத்து தனக்கு என்ன தோன்றியதோ அதை தைரியமாகவும் தன்னம்பிக்கையுடன் இயக்கியுள்ளார். இந்த கதை களத்துக்கு புரோக்கன் ஸ்கிரிப்ட் டைட்டில் சாலப் பொருத்தம்.
மொத்தத்தில் ஸ்ட்ரீட் லைட் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் ப்ரோக்கன் ஸ்கிரிப்ட் காமெடி மற்றும் க்ரைம் திரில்லர் பெயரில் பார்வையாளர்களை தலை சுற்ற வைக்கிறது.