போர்தொழில் சினிமா விமர்சனம் : போர் தொழில் ஒரு அழுத்தமான சைக்கோ க்ரைம் த்ரில்லர் | ரேட்டிங்: 3.5/5

0
473

போர்தொழில் சினிமா விமர்சனம் : போர் தொழில் ஒரு அழுத்தமான சைக்கோ க்ரைம் த்ரில்லர் | ரேட்டிங்: 3.5/5

நடிகர்கள் :
அசோக் செல்வன் – பிரகாஷ்
சரத் குமார் – லோகநாதன்
நிகிலா விமல் – வீணா
பி.எல்.தேனப்பன் – மாரிமுத்து
‘நிழல்கள்” ரவி – மகேந்திரன் ADGP
O.A.K சுந்தர் – ராம் குமார்
சந்தோஷ் கீழட்டூர் – ஜான் சபாஸ்டியன்
சுனில் சுகடா – முத்துச்செல்வன்
ஹரிஷ் குமார் – கென்னடி
எழுத்தாளர் – ஆல்ப்ரெட் பிரகாஷ் ரூ விக்னேஷ் ராஜா
ஒளிப்பதிவு – கலைசெல்வன் சிவாஜி
இசை – ஜேக்ஸ் பிஜாய்
படத்தொகுப்பு – ஸ்ரீஜித் சாரங்
இயக்கம்; – விக்னேஷ் ராஜா
தயாரிப்பு – APPLAUSE ENTERTAINMENT, E4 EXPERIMENTS & EPRIUS STUDIOS
தயாரிப்பாளர்கள் – சமீர் நாயர், தீபக் சேகல், முகேஷ் R மேத்தா, C.V.சாரதி, பூனம் மெஹ்ரா, சந்தீப் மெஹ்ரா.
மக்கள் தொடர்பு – யுவராஜ்.

திருச்சி வனப்பகுதியில் இரண்டு பெண்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருப்பதை போலீஸ் பேட்ரோலின் போது காண்கிறார்கள். பிரகாஷ் (அசோக் செல்வன்), ஒரு புத்திசாலி ஆனால் பயந்த சுபாவம் கொண்ட இளைஞன். திருச்சி வனப்பகுதியில் கொடூரமான முறையில் கொலை செய்த குற்றவாளிகளை கண்டுபிடிக்க முரட்டுத்தனத்திற்கு பேர்போன அனுபவம் வாய்ந்த மூத்த அதிகாரி லோகநாதன் (சரத்குமார்), அவரிடம்  இந்த வழக்கு ஒப்படைக்கப்படுகிறது. குற்றப் பிரிவில் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட முதல் நாளே உயர் அதிகாரியான மூத்த அதிகாரி லோகநாதனுடன் இணைந்து குற்றவாளியை பிரகாஷ் கண்டுபிடிக்க வேண்டும். பிரகாஷ் -க்கு (அசோக் செல்வன்) பயிற்சி அளிக்க மறுக்கும் லோகநாதன் பிறகு தயக்கத்துடன் ஒரு மர்மமான கொலை வழக்கை விசாரிக்க பிரகாஷ்  உடன் பயணிக்க ஒப்புக்கொள்கிறார். அவர்களுக்கு உதவியாக வீணாவை (நிகிலா விமல்) உடன் அனுப்பி வைக்கின்றனர். விசாரணையின் போது அவர்களுக்குள் நெருக்கமான பிணைப்பை உருவாக்குகிறது. ஆனால் இந்தப் புலனாய்வுக் கூட்டணி ஆதாரங்களை அலசும் போதும் கொலைக் குற்றங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. பல இளம் பெண்கள் கழுத்தை நெரித்துக் கொல்லப்படுகிறார்கள், மேலும் சந்தேக நபரைக் கண்டுபிடிக்க முழு காவல் துறையும் போராடுகிறது. இடைவெளி கட்டத்தில் ஒரு சாத்தியமான சந்தேக நபர் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஆனால் இன்னும் சில திருப்பங்கள் தொடர்கிறது..! உறைய வைக்கும் சீரியல் கில்லரின் கொலைவெறி செயல்களைத் இருவரும் தடுத்தார்களா? இடைவெளி கட்டத்தில் அறிமுகமாகும் நபர் யார்? அவருக்கும் இந்த தொடர் கொலைக்கும் என்ன சம்மந்தம்? ஏன் இளம் பெண்களை குறிவைக்கும் கொலையாளி? கொடூரக் கொலைகள் அரங்கேற்றும் உண்மையான சீரியல் கில்லர் யார்? ஏன் இந்தக் சீரியல் கொலைகள் நடக்கின்றன என்பதை அறிய இந்த சஸ்பென்ஸ் த்ரில்லரை திரையரங்கத்தில் காண்க.
மூத்த உயர் அதிகாரியாக கரடுமுரடான கதாபாத்திரத்துக்கு ஏற்ற முக பாவனையை தனது யதார்த்தமான நடிப்பால் அட்டகாசமாக ஸ்கோர் செய்திருக்கிறார் சரத்குமார்.
அவருக்கு ஈடான பிரகாஷ் கதாபாத்திரத்தில் இளம் காவல்துறை அதிகாரியாக அசோக் செல்வன் தூள் கிளப்பியுள்ளார். ஸ்கிரிப்டுக்கு என்ன தேவையோ அதை இருவரும் ஒன்றாக கை கோர்த்து திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளார்கள்.
இவர்களுக்கு உதவியாக வரும் நிகிலா விமல், ஜீப் டிரைவராக நடித்துள்ள தயாரிப்பாளர் தேனப்பன், கதையின் ஓட்டத்தில் கவனம் பெறும் மறைந்த நடிகர் சரத்பாபுவும் மற்றும் லிஷாவும் குறிப்பிடத் தக்கவர்கள்.

 ஜேக்ஸ் பிஜோயின் பின்னணி இசை மற்றும் காளிசெல்வன் சிவாஜியின் ஒளிப்பதிவும் ஒவ்வொருவரையும் இருக்கையின் நுனியில் உட்கார வைத்த அற்புதமான த்ரில்லர் களில் ஒன்றாக மாற்றி படத்தின் தரத்தை உயர்த்தி இருக்கிறது அவர்களது பங்களிப்பு.

ஒரு புலனாய்வு த்ரில்லர் ஸ்கிரிப்ட் எழுதுவது மிகவும் கடினம். அதை புத்திசாலித்தனமாக கையாண்டு திரைக்கதையில் அனைவரும் திகைக்கும் வகையில் அருமையான ட்விஸ்ட் புகுத்தி கிளைமேக்ஸை நெருங்கும் போது எதிர்பாராத திருப்பத்தையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தி தனித்து நிற்கிறார் இயக்குனர். பாராட்டுக்கள் விக்னேஷ் ராஜா.

மொத்தத்தில் APPLAUSE ENTERTAINMENT, E4 EXPERIMENTS & EPRIUS STUDIOS  இணைந்து தயாரித்துள்ள போர் தொழில் ஒரு அழுத்தமான சைக்கோ க்ரைம் த்ரில்லர்.