போட் சினிமா விமர்சனம் : போட் கடலில் தத்தளித்து கரை திரும்ப தள்ளாடுகிறது | ரேட்டிங்: 2.5/5
மாலி மற்றும் மான்வி மூவி மேக்கர்ஸ், சிம்புதேவன் எண்டர்டெயின்மென்ட் சார்பில் பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கும் போட் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சிம்புதேவன்.
இதில் குமரனாக யோகி பாபு, லட்சுமியாக கௌரி ஜி கிஷன், முத்தையாவாக எம்.எஸ்.பாஸ்கர், நாராயணனாக சின்னி ஜெயந்த், விஜயாவாக மதுமிதா, ராஜாவாக ஷாரா, இர்வின் டோமஸாக ஜெஸ்ஸி, முத்துமாரியாக லீலா, மகேஷ் வேடத்தில் அக்ஷத் ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- இணை தயாரிப்பாளர் – சி.கலைவாணி, இசை – ஜிப்ரான், ஒளிப்பதிவு – மாதேஷ் மாணிக்கம், தயாரிப்பு வடிவமைப்பு – டி.சந்தானம், எடிட்டர் – தினேஷ் பொன்ராஜ், கலை இயக்குனர் – எஸ்.ஐயப்பன், தயாரிப்பு மேற்பார்வை – வேல் கருப்பசாமி, ஒப்பனை -பட்டணம் ரஷீத், காஸ்ட்யூமர் – சாய் – சிவா, கலரிஸ்ட் – ஜி.பாலாஜி, விஎஃப்எக்ஸ் –டிடிஎம் லவன் குசன், ஸ்டண்ட்ஸ்- சக்தி சரவணன், ஒலி வடிவமைப்பு மற்றும் கலவை – எஸ்.அழகியகூத்தன் – சுரேன்.ஜி, பப்ளிசிட்டி டிசைனர் – பரணிதரன் நடராஜன், கோ இயக்குநர்கள் – வேல்.கருப்பசாமி – பால பாண்டியன் – யாத்ரா ஸ்ரீநிவாசன், அசோசியேட் இயக்குனர் – நவீன், பா.கிருஷ், நிஷாந்த், கங்காதரன், சித்தார்த், தயாரிப்பு நிர்வாகி – எஸ்.கிருஷ்ணராஜ், மக்கள் தொடர்பு – நிகில் முருகன்.
1943 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் மற்றும் இந்தியாவின் சுதந்திர போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போது மெட்ராஸ் மாகாணத்தின் மீது ஹிட்லரின் ஆதரவு நாடாக இருந்த ஜப்பானிய குண்டு வீச்சு பின்னணி. சென்னையில் கடற்கரையோரம் உள்ள ஆங்கிலேயர்;களின் முகாமில் கைதியாக உள்ள தனது தம்பியை காப்பாற்ற மெட்ராஸ் பூர்வீகமாகக் கொண்ட குமரன் (யோகி பாபு ) தன் பாட்டி முத்துமாரியுடன் (லீலா) செல்கிறார். அப்போது ஜப்பான் நாடு சென்னையில் கடற்கரையோரம் உள்ள ஆங்கிலேயர்களின் முகாமில் குண்டு வீச போகிறார்கள் என்ற தகவல் பரவுகிறது. மக்கள் பதற்றத்தில் கைதிகள் உட்பட அனைவரும் தப்பியோடுகின்றனர். இதில் தம்பியை மீண்டும் போலீஸ் பிடித்துக் கொள்கிறது. குமரன், அவரது பாட்டியும், தான் கொண்டு வந்த சிறிய போட்டில் ஏறிக் கடல் வழியாக தப்பிக்க முயல்கின்றனர். அப்போது அவர்களுடன் ஒரு பிராமண முதியவர் நாராயணன் (சின்னி ஜெயந்த்), அவரது மகள் லட்சுமி (கௌரி ஜி கிஷன்), ஒரு வயதான முதியவர் நூலகர் முத்தையா (எம்.எஸ்.பாஸ்கர்), ஒரு வட இந்திய வியாபாரியான சேட் (சாம்ஸ்), ஒரு இஸ்லாமிய எழுத்தாளர் ராஜா (சா ரா), ஒரு நிறைமாத கர்ப்பிணி விஜயா (மதுமிதா) மற்றும் அவரது மகன் மகேஷ் (அக்ஷத்) உள்ளிட்டோர் படகில் ஏறி கொள்கின்றனர். கடலுக்குள் சென்றால் தப்பித்து விடலாம் என்று போட்டை கடலுக்குள் கொண்டு செல்கிறார் குமரன். ஆங்கிலேயர்களால் பயங்கரவாதி என்று கருதப்பட்ட ஒரு மர்ம நபர் கூட படகில் இருந்தவர்களில் அடங்குவர். இவர்களுடன் ஒரு எலியும் பயணிக்கிறது.இவர்கள் அனைவரும் நடுக்கடலில் தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள போராடிக் கொண்டிருக்கும் போது நடுவழியில் தான் வந்த படகு விபத்தானதால் ஒரு வெள்ளைக்கார போலீஸ் அதிகாரி இர்வின் டோமஸ் (ஜெஸ்ஸி) போட்டில் ஏறுகிறார். இந்தப் பயணத்தில் அதிக எடை தாங்காத போட் மூழ்கும் அபாயம் ஏற்படுகிறது மற்றும் படகைச் சுற்றியிருக்கும் சுறாவால் சாத்தியமான தாக்குதல் போன்ற பல ஆபத்துகளை அவர்கள் வழியில் சந்திக்கின்றனர். அதிக எடை தாங்காத போட்டில் 10 பேரில் 7 பேர் மட்டுமே இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அந்த மரண சூழ்நிலையை போட்டில் இருந்தவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கிறார்கள். இந்த சூழ்நிலையில் அவர்கள் எப்படி சமாளித்து, எப்படி தப்பித்தார்கள்? போட்டில் இருந்த பயங்கரவாதி அடையாளம் காணப்பட்டாரா? குமரன் தனது தம்பியை காப்பாற்றினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
யோகி பாபு, கௌரி ஜி கிஷன், எம்.எஸ்.பாஸ்கர், சின்னி ஜெயந்த், சாம்ஸ், மதுமிதா, ஷாரா, ஜெஸ்ஸி, லீலா, அக்ஷத் ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் ஒரு சிறிய போட்டில் குறுகலான இடத்தில் அமர்ந்து நடிப்பது என்பது மிக கடினம். அதை அவர்கள் அனைவரும் சிறத்துடன் ஏற்று நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்திய விதம் கதை ஓட்டத்தைத் தொடர உதவி உள்ளது.
படம் முழுவதும் ஒரு போட் என்பதால் அதற்கான செட் அமைத்த கலை இயக்குனர் எஸ்.ஐயப்பன், மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு, எடிட்டர் தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பு, ஜிப்ரான் இசை என டெக்னிக்கல் விஷயங்களுக்கான கடின உழைப்பு நன்றாக உணர முடிகிறது.
எர்னஸ்ட் ஹெமிங்வேயின் ‘தி ஓல்ட் மேன் அண்ட் தி சீ’ திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு 1943 ஆம் ஆண்டு சென்னையை மையமாக வைத்து கடல் பின்னணியில் படகில் கடலுக்குள் நடக்கும் கதை என்பதால் படகை சுற்றியே படம் நகர்வதால் காட்சிகளை விட வசனங்கள் தான் படத்தை தாங்கிப் பிடிக்கிறது. ஆனால் அதுவே ஒரு கட்டத்தில் படம் பார்ப்பவர்களை சலிப்படைய செய்கிறது. சுவாரஸ்யமான கதைகளத்தை தேர்ந்தெடுத்த இயக்குனர் சிம்புதேவன் திரைக்கதையிலும் காட்சி அமைப்பிலும் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் போட் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று இருக்கும்.
மொத்தத்தில் மாலி மற்றும் மான்வி மூவி மேக்கர்ஸ், சிம்புதேவன் எண்டர்டெயின்மென்ட் சார்பில் பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கும் போட் கடலில் தத்தளித்து கரை திரும்ப தள்ளாடுகிறது.