‘பொய்க்கால் குதிரை’ விமர்சனம் : ஓற்றை காலில் புயல் என சுழற்றும் பிரபு தேவாவின் ஆட்டத்தை ரசிக்கலாம் | ரேட்டிங்: 3/5

0
256

‘பொய்க்கால் குதிரை’ விமர்சனம் : ஓற்றை காலில் புயல் என சுழற்றும் பிரபு தேவாவின் ஆட்டத்தை ரசிக்கலாம் | ரேட்டிங்: 3/5

‘டார்க் ரூம் பிக்சர்ஸ்’ மற்றும் ‘மினி ஸ்டுடியோஸ்’ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் எஸ்.வினோத் குமார் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘பொய்க்கால் குதிரை’.

நடிகர்கள் : பிரபுதேவா , வரலட்சுமி சரத்குமார், ஜான் கொக்கேன், ஜெகன், பிரகாஷ்ராஜ், ஷ்யாம், ரைசா வில்சன், பரத், குழந்தை நட்சத்திரம் பேபி ஆழியா, குழந்தை ருத்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு : பல்லு

இசை:  டி.இமான்

பாடல்கள்: கார்க்கி

ஸ்டண்ட்: தினேஷ் காசி

கலை: பாபாநாடு உதயகுமார்

நடனம்: சதீஷ் மற்றும் பூபதி

வசனம்: மகேஷ்

உடை: ஜெயலட்சுமி

படத்தொகுப்பு-ப்ரீத்தி மோகன்

இயக்கம்:  சந்;தோஷ் பி ஜெயக்குமார்

மக்கள் தொடர்பு : யுவராஜ்

விபத்தில் தனது மனைவி மற்றும் ஒரு காலை இழந்துவிட்ட கதிரவன்  (பிரபுதேவா) தனது 8 வயது மகள்தான் உலகம் என்று வாழ்ந்து வருகிறார். சாதாரண வேலை செய்தாலும் மகளுடன் மிகிழ்ச்சியாக நாட்களை கடத்தும் இவரின் மகிழ்ச்சியான வாழ்க்கையில் ஒரு திருப்பமாக தனது மகளுக்கு இருதய நோய் இருப்பது தெரிந்ததும் நிலைகுலைந்து போகிறார். அறுவை சிகிச்சை மூலம் மகளின் உயிரைக் காப்பாற்ற ரூ.70 லட்சம் தேவைப்படுகிறது. அவ்வளவு பெரிய தொகையை திரட்ட வழி தெரியாமல் தவிக்கிறார். இருதய நோயால் பாதிக்கப்பட்ட தன் குழந்தையை காப்பாற்ற இன்னொரு குழந்தையை கடத்த திட்டமிடுகிறார் பிரபுதேவா. தொழிலதிபரான ருத்ராவின் (வரலட்சுமி சரத்குமார்) மகளை கடத்தி, அந்த தொகையை பிணையமாகப் பெறத் திட்டமிடுகிறார். தன் நண்பனுடன் சேர்ந்து திட்டத்தை செயல்படுத்தும் நாளில் கையும் மெய்யுமாக பிடிபடுகிறார். கதிரவனுக்கு முன்பே பள்ளியில் ருத்ராவின் மகள் கடத்தப்பட்டிருக்க, இப்போது தன் மகளையும் காப்பாற்ற முடியாமல், ருத்ராவின் மகளை கடத்தியது யாரென்றும் தெரியாமல் ருத்ராவின் பிடியில் சிக்கி தவிக்கும் கதிரவனின் நிலை என்ன? ருத்ராவின் மகளை கடத்தியது யார்? அவள் என்ன ஆனால்? தன் மகளை காப்பாற்றினாரா என்பதே மீதி 

ஒற்றைக் கால் கொண்ட நாயகன் கதாபாத்திரத்துக்குள் புற மாற்றங்களுக்கேற்ப தன்னை நன்றாகவே மாற்றியமைத்துக் கொண்டுள்ளார் பிரபுதேவா. ஒற்றைக் காலில் ஆடும் நடனம் சண்டை காட்சிகள் என அனைத்திலும் அசத்தியுள்ளார்.

ருத்ரா கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் கச்சிதமாக பொருந்தியுள்ளார்.

நண்பனாக வரும் ஜெகன் வழக்கமான ‘ட்விஸ்ட்’ ஏற்படுத்தும் கதாபாத்திரத்தில் எல்லா படத்திலும் வரும் அதே ரியேக்ஷன் தான்.

ஜான் கொக்கன் குணச்சித்திர வேடத்திலும் வரலட்சுமி சரத்குமார் கணவராக தேவா முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்திலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார்கள்.

பிரபுதேவாவின் அப்பாவாக வரும் பிரகாஷ்ராஜ் இருக்கிறார் அவ்வளவுதான். ரைசா வில்சன், பிரபு தேவாவின் மகளாக வரும் சிறுமி, ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளனர்.

டி.இமான் இசை மற்றும் கார்க்கியின் பாடல் வரிகள் திரைக்கதை ஓட்டத்திற்கு பக்க பலம்.

பல்லுவின் ஒளிப்பதிவு கச்சிதம்.

அப்பா – மகள் சென்டிமெட்டில், பாசமான அப்பா, அதிரடி நாயகன் என இரண்டு பரிமாணங்களுடன் ஆபத்தான சமயத்தில் சில மருத்துவமனைகள் எப்படி நடந்துகொள்கின்றன மற்றும் சில என்.ஜி.ஓக்கள் உதவி செய்வதாக கூறி பணத்தை வசூலித்து எப்படி மக்களை ஏமாற்றி மோசடிசெய்கிறார்கள் என்ற கருவை வைத்து திரைக்கதை அமைத்து சிறப்பாக இயக்கியுள்ளார் சந்தோஷ் பி ஜெயக்குமார்.

மொத்தத்தில் ‘டார்க் ரூம் பிக்சர்ஸ்’ மற்றும் ‘மினி ஸ்டுடியோஸ்’ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் எஸ்.வினோத் குமார் இணைந்து தயாரித்திருக்கும் ‘பொய்க்கால் குதிரை’, ஓற்றை காலில் புயல் என சுழற்றும் பிரபு தேவாவின் ஆட்டத்தை ரசிக்கலாம்.