பேட்டரி விமர்சனம் : சி.மாத்தையன் தயாரித்திருக்கும் பேட்டரி பவர் குறைவு | ரேட்டிங்: 2.25/5

0
358

பேட்டரி விமர்சனம் : சி.மாத்தையன் தயாரித்திருக்கும் பேட்டரி பவர் குறைவு | ரேட்டிங்: 2.25/5

நடிகர்கள்: செங்குட்டுவன், அம்மு அபிராமி, தீபக் ஷெட்டி, நாகேந்திர பிரசாத், அபிஷேக், எம்.எஸ்.பாஸ்கர், ராஜ்குமார், ஜார்ஜ் மரியான், மோனிகா, யோக் ஜேபி
இசை: சித்தார்த் விபின்
ஒளிப்பதிவு : வெங்கடேஷ்
ஸ்டண்ட் இயக்குனர் – ஹரி தினேஷ்
தயாரிப்பு: சி.மாத்தையன்
இயக்கம்: மணிபாரதி
பிஆர்ஒ : ஜான்சன்

சென்னை நகரில் மர்மக் கொலைகள் நடக்கிறது. அந்த கொலைகள் அனைத்தும் பேட்டரியை விழுங்க செய்து நெஞ்சில் ஐஸ் புல்லட்டால் சுட்டு ஒரே விதமாக செய்யப்படுகின்றன. ஆனால் அதற்கு தடயங்கள் கிடைக்கவில்;லை. கொலையாளியை கண்டுபிடிக்கும் பொறுப்பு காவல்துறை அதிகாரியான யோக்ஜேபியிடம் ஒப்படைக்கப்படுகிறது. இந்நிலையில் காவல்துறை உதவி ஆய்வாளர் பணியில் சேருகிறார் நாயகன் புகழ் (செங்குட்டுவன்). மர்மக் கொலைகளை புகழ் போலீஸ் உதவி கமிஷனருடன் சேர்ந்து விசாரிக்கிறார். இந்த கொலையைச் செய்தது யார்? என்கிற விசாரணை நடைபெறுகிறது. அது நடக்கும்போதே மேலும் சில கொலைகள். அவை எப்படி நடக்கின்றன? அவற்றைச் செய்வது யார்? எதற்காகச் செய்கிறார்கள்? என்பதே படத்தின் மீதி கதை.

ஒரு சவாலான போலீஸ் கதாபாத்திரத்தில் நாயகன் செங்குட்டுவன் அதில் ஓரளவு தேறியிருக்கிறார். அவரது உயரமும், உடல்மொழியும் போலீஸ் கதாபாத்திரத்திற்கு ‘பிட்’டாகவே இருக்கிறது. காதல் காட்சிகள் சண்டைக்காட்சிகள் என அனைத்திலும் மிளிருகிறார்.

அம்மு அபிராமிக்கு வழக்கம் போல தனது நடிப்பால் கவனம் ஈர்க்கிறார்.
தீபக், எம்.எஸ்.பாஸ்கர், அபிஷேக், நாகேந்திர பிரசாத் ஆகியோர் தங்களுடைய கதாபாத்திரத்திற்கு சிறப்பாக உழைத்திருக்கிறார்கள்.

வெங்கடேஷின் ஒளிப்பதிவு, சித்தார்த்விபின் இசை, எடிட்டிங் என அனைத்துமே திரைக்கதை ஓட்டத்திற்கு நன்கு கைகொடுத்துள்ளது.

பேஸ் மேக்கர் பற்றிய கதைக்களம் தான் பேட்டரி.மறு சுழற்சியில் மூன்று ஆண்டுகள் இருக்கும் ‘பேஸ் மேக்கர்’ கருவியை ஐந்து ஆண்டுகள் உத்திரவாதம் இருப்பதாக கூறி ஏமாற்றும் மெடிக்கல் மாஃபியாக்களின் கையில் சிக்கி பணத்தாசையால் பெருமளவில் குற்றங்களும் நடக்கிறது என்ற கருவை வைத்தும், மனசாட்சியில்லாமல் உயிர்காக்கும் மருத்துவக் கருவியில் ஊழல் செய்யும் செல்வந்தர் மாஃபியாக்கள், அதனால், சாமானிய குடும்பங்கள் எவ்வளவு பாதிப்புக்கு ஆளாகின்றன என்பதை உணர்வுப்பூர்வமாக அமைத்து மக்களுக்கு தெரியாத ஒரு விஷயத்தை சமூக அக்கறையுடனும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் மணிபாரதி.

மொத்தத்தில் சி.மாத்தையன் தயாரித்திருக்கும் பேட்டரி பவர் குறைவு.