பேச்சி சினிமா விமர்சனம் : பேச்சி பார்வையாளர் அனைவரையும் மிரட்டும் | ரேட்டிங்: 3/5
வெயிலோன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கோகுல் பினாய் மற்றும் வெரூஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஷேக் முஜீப் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ராமச்சந்திரன்.பி எழுதி இயக்கியிருக்கும் படம் ‘பேச்சி’.
பால சரவணன், காயத்ரி சங்கர், தேவ், ப்ரீத்தி நெடுமாறன், ஜனா, முரளி, சீனியம்மாள் (பேச்சி பட்டி), மகேஸ்வரன் கே, நாட்டுராஜா, சாந்திமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இசை : ராஜேஷ் முருகேசன்
ஒளிப்பதிவு : பார்த்திபன் செய்திருக்கிறார்
படத்தொகுப்பு : இக்னேசியஸ் அஸ்வின்
கலை இயக்குனர் : குமார் கங்கப்பன்
ஆடை வடிவமைப்பாளர் – ப்ரீத்தி நெடுமாறன்
இணை தயாரிப்பு : விக்னேஷ் செல்வராஜன், தனிஷ்டன் ஃபெர்னாண்டோ, ராஜராஜன் ஞானசம்பந்தம், சஞ்சய் சங்கர்
மக்கள் தொடர்பு : சுரேஷ், தர்மா
அரண்மனை காடு என்கிற மலை கிராமத்தில் சுற்றுலாவுக்கு வரும் ஐந்து இளம் மலையேற்ற நண்பர்களான மீனா (காயத்ரி சங்கர்), சரண் (தேவ்), சாரு (ப்ரீத்தி), ஜெர்ரி (மகேஸ்வரன்), மற்றும் சேது (ஜனா) வார இறுதி சாகசத்தை மேற்கொள்கின்றனர். அவர்களை ட்ரெக்கிங் அழைத்துச் செல்ல, உள்ளூர் வன ஊழியர் மாரி (பால சரவணன்) ‘சைடு பிசினஸாக’ பணியை ஏற்கிறார். தடை செய்யப்பட்ட பகுதிக்கான மறைக்கப்பட்ட எச்சரிக்கை அடையாளத்தை குழு காண்கிறது. எச்சரிக்கை பதாகைகள் இருந்தபோதிலும், அவர்கள் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் செல்ல முற்படும் போது வன ஊழியர், சுற்றிப் பார்க்க வந்திருக்கும் அந்த குழுவினரிடம் பல முறை எச்சரிக்கிறார். காடுகளின் ஆபத்துகள் பற்றிய அவரது தொடர்ச்சியான எச்சரிக்கைகள் காரணமாக குழுவிற்கும் மாரிக்கும் இடையே பதற்றம், மோதல் ஏற்படுகிறது. மாரியின் எச்சரிக்கையை மீறி, சாருவும் சேதுவும் உள்ளே நுழைந்து. ஒரு பழைய வீட்டை காண்கிறார்கள். அவர்கள் அந்த வீட்டை ஆராயும் போது , ஒரு வயதான பெண்ணின் பில்லி சூனியம் பொம்மையைக் கண்டுபிடிக்கின்றனர். இது பேச்சியை (சீனியம்மாள்) எழுப்புகிறது, அவர்களில் ஒருவர் கடுமையாக பாதிக்கப்படுகிறார். யார் இந்த பேச்சி? பேச்சியிடம் சிக்கும் ஐந்து நண்பர்கள் மற்றும் மாரி நிலைமை என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
வன ஊழியர் மாரி கதாபாத்திரத்தில் பால சரவணன் குணச்சித்திர வேடத்தில் அளவான நடிப்பை வெளிப்படுத்தி ஈர்க்கிறார்.
மீனா (காயத்ரி சங்கர்), சரண் (தேவ்), சாரு (ப்ரீத்தி), ஜெர்ரி (மகேஸ்வரன்), மற்றும் சேது (ஜனா), சீனியம்மாள் (பேச்சி பட்டி), அனைவரும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். குறிப்பாக காயத்ரி ஷங்கர் க்ளைமாக்ஸில் தரும் மர்ம ட்விஸ்ட் தான் பேச்சி 2-க்கு வழிவகுக்கிறது.
அடர்ந்த வனப்பகுதியில் புதிய லொகேஷன்களில் அருமையான காட்சி கோணங்கள் மூலம் ஒளிப்பதிவாளர் பார்த்திபன் அசத்தி உள்ளார். குமார் கங்கப்பன் கலை இயக்கம் படத்திற்கு நம்பகத்தன்மையை சேர்க்கிறது. எடிட்டர் இக்னேசியஸ் அஸ்வின் படத்தொகுப்புக்கு இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் இசை கூடுதல் விறுவிறுப்பை கூட்டி உள்ளது.
ஒரு அடர்ந்த மலைப்பாங்கான காட்டுப்பகுதியில் கட்டுப்படுத்தப்பட்ட ஒரு சூனியக்காரியின் தீய ஆவியை மீண்டும் விடுவிக்கப்படும் போது அமானுஷ்ய சதியால் ஏற்படும் விளைவுகளை படம் பார்க்கும் பார்வையாளர்களை கண்ணுக்கு தெரியாத சக்திகள் மற்றும் விசித்திரமான சத்தங்கள் போன்ற அசாதாரண திகில் அனுபவத்துடன் திரைக்கதையோடு பயணிக்க வைத்து க்ளைமாக்ஸில் மர்மமான ட்விஸ்ட் கொடுத்து பேச்சி இரண்டாம் பாகத்திற்கான லீட்டுடன் இயக்குனர் ராமச்சந்திரன்.பி திகிலூட்டி உள்ளார்.
மொத்தத்தில் வெயிலோன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கோகுல் பினாய் மற்றும் வெரூஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஷேக் முஜீப் தயாரித்துள்ள பேச்சி பார்வையாளர் அனைவரையும் மிரட்டும்.