பூர்வீகம் சினிமா விமர்சனம் : பூர்வீகம், இளைஞர்களிடையே விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் குடும்ப உறவுகளின் அழகையும் பெருமையையும் அழுத்தமாக விதைக்கும் ஒரு படைப்பாகும் | ரேட்டிங்: 2.5/5

0
254

பூர்வீகம் சினிமா விமர்சனம் : பூர்வீகம், இளைஞர்களிடையே விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் குடும்ப உறவுகளின் அழகையும் பெருமையையும் அழுத்தமாக விதைக்கும் ஒரு படைப்பாகும் | ரேட்டிங்: 2.5/5

நடிகர்கள் : கதிர், மியாஸ்ரீ , போஸ் வெங்கட், சங்கிலி முருகன், இளவரசு, ஒய்எஸ்டி​ சேகர், சூசன், ஸ்ரீரஞ்சனி மற்றும் பலர்.

தொழில்நுட்ப குழு விவரம்
தயாரிப்பு – பிரைன் டச் ஃபிலிம் ஃபேக்டரி
தயாரிப்பாளர் – டாக்டர். ஆர்.முருகானந்த்
எழுத்து, இயக்கம் – ஜி. கிருஷ்ணன்
ஒளிப்பதிவு – விஜய் மோகன்
இசை – சாணக்யா
படத்தொகுப்பு – சங்கர் கே
பாடலாசிரியர் – ஏகாதசி
கலை இயக்கம் – செல்லம் ஜெயசீலன்
பாடகர்கள் – சாய் விக்னேஷ், மது ஐயர், கே.பார்த்திபன், ஜி.அமிர்தவர்ஷினி, டாக்டர். ஆர்.முருகானந்த்
நிர்வாக தயாரிப்பாளர் – கே. சந்தோஷ்
பத்திரிக்கை தொடர்பு – குணா, செல்வரகு.

மதுரை மாவட்டத்தல் உள்ள ஒரு கிராமத்தில் பூர்வீகமாக இளவரசன் குடும்பம் விவசாய தொழிலை செய்து விவசாய நிலத்தை காத்து வருகிறார். அவருக்கு  ஒரே மகன் சங்கிலி முருகன். அவருக்கு போஸ் வெங்கட் மற்றும் மூன்று மகள்கள். அனைவருக்கும் திருமணம் ஆகி அதே ஊரில் விவசாய தொழில் செய்து வருகிறார்கள். போஸ் வெங்கட் தன் ஒரே மகனான கதிரை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று இருக்கும் போது தாத்தா பேரனை விவசாயத்தில் ஈடுபட வைக்கிறார். தன் மகன் நன்றாக படித்து அரசு உத்தியோகத்தில் பணியாற்ற வேண்டும் என்று தன் தந்தையிடம் கூறி மகன் சென்னையில் படிக்க வைக்க ஏற்பாடு செய்கிறார். இந்நிலையில் குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் உடன் பிறந்த சகோதரிகள் தங்கள் மகள்களில் யாராவது ஒருவரை பருவம் அடைந்த பின் அண்ணன் மகன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கேட்க, அதற்கு அண்ணன் போஸ் வெங்கட் மறுப்பு தெரிவித்ததுடன் குடும்பத்தினருடன் சண்டை ஏற்பட்டு பிரிகிறார்கள். பிறகு கிராமத்து சொந்தங்களை உதறிவிட்டு மகனை படிப்புக்காக சென்னைக்கு படிக்க அனுப்புகிறார். தந்தையின் ஆசைப்படி, அவரது மகன் நன்றாக படித்து அரசு அதிகாரியாவதோடு, வசதியான வீட்டு பெண்ணை திருமணம் செய்து கொண்டு, சென்னையில் சொந்தமாக வீடு கட்டி வாழ்ந்து வருகிறார். போஸ் வெங்கட் படிப்பு மற்றும் வீடு வாங்க ஊரில் உள்ள தனது பூர்வீக சொத்துக்களை விற்று மகனுக்கு பணம் அனுப்பி வைக்கிறார். ஆனால் மருமகள் தன் மாமனார் மற்றும் மாமியார் இருவரிடமும் பேரனை காட்டாமல் அவர்களை அவமானப் படுத்துகிறார். தனது ஆசைப்படி தன் மகன் வாழ்க்கையில் உயர்ந்து விட்டால், ஒரு தந்தையாக போஸ் வெங்கட்டினால் மகனின் மகிழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் போகிறது. பதினாறு வருடங்கள் கடந்து போகிறது. கதிர் தன் தாய் தந்தையை சரியாக பார்த்து கொள்ள முடியவில்லை என்பதை நினைத்து ஒவ்வொரு நொடியும் வேதனை படுகிறான். கதிரின் மகன் சென்னை வாழ்க்கை மற்றும் அம்மாவின் செல்லத்தால் சீர் அழிந்து போகிறான். கதிரின் மனைவி தன் பிறந்த வீட்டினரை மட்டும் நன்றாக கவனித்து வருகிறார். குறிப்பாக தன் உடன் பிறந்த சகோதரனை விழுந்து விழுந்து கவனித்து வருகிறார். இதனிடையே தாய் உடல் நலம் குன்ற அவரை பார்க்க செல்லும் கதிர் விபத்தில் சிக்குகிறார். அவரின் சிகிச்சைக்காக அல்லல்படும் மனைவி தன் பிறந்த வீட்டின் உதவியை நாடும் போது தான் தன் சகோதரன் தன்னையும் தன் தாய், தந்தையையும் ஏமாற்றி விட்டான் என்பதை அறிந்து வருந்துகிறார். சூழ்நிலை கற்று கொடுத்த பாடம் கதிரின் மனைவி மற்றும் மகன் திருந்துகிறார்கள். கதிரின் மகன் வேலை தேடி மதுரை சொல்கிறான். அங்கு வழியில் போஸ்வெங்கட்டிடம் ஒரு நிறுவனத்தின் விலாசத்தை கேட்கிறான். இருவருக்கும் தான் யார் என்று தெரியாது. வேலை கிடைக்காததால் மனம் உடைந்த அவன் மது அருந்த மது கடைக்கு செல்கிறான். தன் சொத்துக்கள் அனைத்தையும் இழந்த போஸ் வெங்கட் மதுபான கடையில் உள்ள பாரில் வேலை செய்கிறார். அங்கு வேலை கிடைக்காமல் சோகத்தில் மது அருந்த வந்த கதிரின் மகனிடம் மது அருந்த வேண்டாம் என்று அறிவுரை கூறுகிறார். மனவேதனையில் இருந்த அவன் அழுது கொண்டே டேபிள் மீது இருந்த மது டம்பளரை தள்ளிவிடும் போது அதன் அருகே இருந்த அவனுடைய மணிபர்சும் கீழே விழுகிறது. பர்சை எடுத்து பிரித்து பார்க்கும் போது அதில் தன் மகன் கதிர், மருமகள் மற்றும் பேரன் இருக்கும் குடும்ப புகைப்படத்தை கண்டு இது தன் பேரன் என்பதை புரிந்து அவனை பார்த்த படி மயங்கி விழும் போது பேரன் அவர் தான் தன் தாத்தா என்பதை அறியாமல் அவரை தாங்கி பிடிக்கிறான். அதன் பின் நடக்கும்சம்பவங்கள் மனதையும் கண்களையும் குளமாக்குகிறது என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகனின் தந்தையாக நடிக்கும் போஸ் வெங்கட்டும், அவரது மனைவியாக நடிக்கும் ஸ்ரீ ரஞ்சனியும் தாங்கள் சிறந்த குணச்சித்திர நடிகர்கள் என்பதை நிரூபித்து, தாங்கள் நடித்த கதாபாத்திரங்கள் மூலம் உணர்ச்சிபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி, கதைக்கு முதுகெலும்பாக வலு சேர்த்துள்ளனர்.

கதிர் இரண்டு வெவ்வேறு வேடங்களில் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

மூத்த நடிகர் சங்கிலி முருகன், இளவரசு, ஒய்.எஸ்.டி.சேகர், மியா ஸ்ரீ, சூசன், சிவக்குமார் உட்பட அனைத்து நடிகர்களும் சிறப்பான பங்களிப்பை வழங்கி திரைக்கதைக்கு வலு சேர்த்துள்ளனர்.

இசையமைப்பாளர் சாணக்யா, ஒளிப்பதிவாளர் விஜய் மோகன் இருவரும் கிராமத்து மண்மனத்தை அப்படியே நம்கண்முன் இசை மூலமும் மற்றும் சிறந்த ஒளிப்பதிவு கோணங்கள் மூலமும் நிறுத்தி உள்ளனர்.

நமது நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை உதறிவிட்டு, கல்வி மற்றும் வேலைக்கு தங்கள் சொந்த ஊர்களிலிருந்து இரண்டு தலைமுறை இளைஞர்கள் முற்றிலும் இடம்பெயர்ந்து, தற்போது நகரத்தில் வசிக்கின்றனர். நகரத்திற்கு குடிபெயரும் இளைஞர்கள் நமது கலாச்சாரம், வாழ்க்கை முறை மற்றும் விவசாயத்தின் சிறப்பு முற்றிலுமாக கைவிட்டுவிட்டனர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஒழுக்கம் மற்றும் குடும்ப அன்பு என்ன என்பதை கற்றுக்கொடுக்க வேண்டும், மேலும் சீர்கேடு காரணமாக வழி தவறிச் செல்லும் தங்கள் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஒழுக்கம் மற்றும் குடும்ப பாசம் என்றால் என்ன என்பதை சொல்லி கொடுப்படுதுடன் அதே போல் வாழ்ந்து பிள்ளைகளையும் அதே வழியில் வளர்க்க வேண்டும். விவசாய நிலத்தையும் பாதுகாக்க முயற்சிக்க வேண்டும், விவசாயத்தைப் பாதுகாப்பதன் மூலம் செழிப்பு பெருகும்.. வாழ்க்கையும் செழிக்கும்.. என்பதை அழுத்தமான திரைக்கதை அமைத்து இயக்கி உள்ளார் ஜி.கிருஷ்ணன்.

மொத்தத்தில், பிரைன் டச் பிலிம் ஃபேக்டரி சார்பாக டாக்டர் ஆர். முருகானந்தா தயாரித்த பூர்வீகம், இளைஞர்களிடையே விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் குடும்ப உறவுகளின் அழகையும் பெருமையையும் அழுத்தமாக விதைக்கும் ஒரு படைப்பாகும்.