புரொஜக்ட் சி – சாப்டர் 2 திரைப்பட விமர்சனம் : புரொஜக்ட் சி – சாப்டர் 2 தமிழ் சினிமாவிற்கு வித்தியாசமான திரைக்கதையால் மிரட்டும் சித்திரம் | ரேட்டிங்: 3/5

0
236

புரொஜக்ட் சி – சாப்டர் 2 திரைப்பட விமர்சனம் : புரொஜக்ட் சி – சாப்டர் 2 தமிழ் சினிமாவிற்கு வித்தியாசமான திரைக்கதையால் மிரட்டும் சித்திரம் | ரேட்டிங்: 3/5

நடிகர்கள்: ஸ்ரீ, வசுதா கிருஷ்ணமூர்த்தி, சாம்ஸ், ராம்ஜி, பாலாஜி வெங்கட்ராமன்.
இசை: சிபு சுகுமாரன்
ஒளிப்பதிவு : சதீஷ்
படத்தொகுப்பு : தினேஷ் காந்தி
டைரக்ஷன்: வினோ
தயாரிப்பு: ஷார்க் ஃபின் ஸ்டுடியோ – ஸ்ரீ
மக்கள் தொடர்பு : தர்மா மற்றும் சுரேஷ்சுகு

மொத்தம் மூன்று பாகங்களாக உருவாக உள்ள இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகமான ‘புரொஜக்ட்  சி – சாப்டர் 2’ தான் முதலில் வெளியாக உள்ளது. பொதுவாக பல பாகங்களாக வெளியாகும் படங்கள் முதல் பாகம் வெளியான பிறகு தான் அதன் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகும். ஆனால், இப்படக்குழு சற்று வித்தியாசமாக முதலில் இரண்டாம் பாகத்தை வெளியிடுகிறார்கள்.

இரண்டாம் பாகத்தை பார்க்கும் போது, முதல் பாகத்தில் என்ன நடந்திருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்படுவதோடு, அதன் தொடர்ச்சி மிக எளிமையாக புரியும்படியும்  கொடுத்துள்ளனர்.
 ஸ்ரீ படித்து பட்டம் பெற்று  தகுந்த வேலை கிடைக்காத காரணத்தால் பக்கவாத நோயால் பாதித்த விஞ்ஞானி வீட்டில் வேலைக்கு சேர்கிறார். அந்த வீட்டில் தங்கி வேலை செய்யும் அவர், உடல் நிலை சரியில்லாமல் இருப்பவர் விஞ்ஞானி என்றும், அவர் கண்டுபிடித்த மருந்தை பல லட்சம் கொடுத்து வாங்க பலர் தயாராக இருப்பதையும் அறிந்து கொள்கிறார். அதே வீட்டில் சமையல் செய்ய ஒரு பணிப்பெண்ணும் இருக்கிறார். இருவரும் நட்புடன் பழகுகிறார்கள். அவர்களுக்குள் தகாத தொடர்பு இருக்குமோ என்று கணவர் சந்தேகிக்கிறார். விஞ்ஞானிக்கு பிசியோதெரபி அளிக்க அந்த வீட்டுக்கு சாம்ஸ் வருகிறார். ஒரு கட்டத்தில் தனி ஆளாக வசிக்கும் விஞ்ஞானியின் சொத்துக்கும், உயிருக்கும் ஆபத்து வருகிறது. அந்த நேரத்தில், யாரும் எதிர்பாராத சம்பவம் ஒன்று நடக்கிறது. அது என்ன? ஆபத்தை விளைவிக்கும் அந்த நபர்கள் யார்? விஞ்ஞானி என்ன ஆனார்? என்பதை எதிர்பாராத திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக ‘புரொஜக்ட் சி – சாப்டர் 2’ நகர்கிறது.
படித்தும் வேலை கிடைக்காமல் கஷ்டப்படும் இளைஞராக ஸ்ரீ, பிஸியோதெரபிஸ்ட்டாக வரும் சாம்ஸ், விஞ்ஞானியாக வரும் ராம்ஜி, பாலாஜி வெங்கட்ராமன், ஆகியோர் கதாபாத்திரத்தை உணர்ந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி படத்தின் வெற்றிக்கு கூடுதல் பலம் சேர்க்கிறார்கள்.
வீட்டு வேலை செய்யும் பஞ்சவர்ணமாக நடித்திருக்கும் வசுதா கிருஷ்ணமூர்த்திக்கு பலமான கதாபாத்திரம். ஒரு புறம் மிரட்டலான நடிப்பின் மூலம் கவர்ந்துள்ளார். அத்துடன் கவர்ச்சி விருந்து படைத்து அனைவரையும் கிறங்கடிக்க வைக்கிறார்.
சதிஷ் ஆனந்தின் ஒளிப்பதிவு, இசையமைப்பாளர் சிபு சுகுமாரன் இசை மற்றும் பின்னணி இசை, தினேஷ் காந்தியின் படத்தொகுப்பு ஒரே வீட்டில் நடக்கும் கதைக்கு ஏற்றபடி காட்சிகளை நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார்கள்.
ரம்மி போன்ற விளையாட்டு போல் நகரும் படத்தின் கதையில் இடம் பெறும் ஐந்து முக்கிய கதாப்பாத்திரங்களில் ஒவ்வொருவரும் ஒரு குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு இடையே நடைபெறும் இந்த விளையாட்டில் யார் ஜெயிப்பார்கள் என்பதை படத்தை விறுவிறுப்பாக நகர்த்துவது, இவர்களிடம் இருக்கும் போட்டி குணம் படம் பார்ப்பவர்களை சீட் நுனியில் உட்கார வைக்கும் அளவுக்கு படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்லும்.படத்தை விறுவிறுப்பாக எளிமையான கருவை வைத்துக் கொண்டு சுவாரஸ்யமான திரைக்கதை மற்றும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டோடு இயக்குநர் மிக சிறப்பாக இயக்கியிருக்கிறார் வினோ.
மொத்தத்தில் ஷார்க் ஃபின் ஸ்டுடியோ – ஸ்ரீ தயாரித்துள்ள  ‘புரொஜக்ட் சி – சாப்டர் 2’ தமிழ் சினிமாவிற்கு வித்தியாசமான திரைக்கதையால் மிரட்டும் சித்திரம்.