புஜ்ஜி அட் அனுப்பட்டி சினிமா விமர்சனம் : புஜ்ஜி அட் அனுப்பட்டி குழந்தைகளையும் கவர்ந்து மேலும் பல விருதுகளை வெல்லும் | ரேட்டிங்: 2.5/5

0
277

புஜ்ஜி அட் அனுப்பட்டி சினிமா விமர்சனம் : புஜ்ஜி அட் அனுப்பட்டி குழந்தைகளையும் கவர்ந்து மேலும் பல விருதுகளை வெல்லும் | ரேட்டிங்: 2.5/5

குழந்தைகளின் உணர்வுகளை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் ‘புஜ்ஜி அட் அனுப்பட்டி’. ராம் கந்தசாமி எழுதி, இயக்கி, தன் கலாலயா நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார்.
9 வி ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடும் இப்படத்தில் கமல்குமார், நக்கலைட்ஸ் வைத்தீஸ்வரி, கார்த்திக் விஜய், குழந்தை நட்சத்திரம் பிரணிதி சிவ சங்கரன், லாவண்யா கண்மணி, நக்கலைட்ஸ் ராம்குமார், நக்கலைட்ஸ் மீனா, வரதராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழிலநுட்ப கலைஞர்கள் :
கதை தயாரிப்பு, இயக்கம் : ராம் கந்தசாமி
இசை : கார்த்திக் ராஜா
ஒளிப்பதிவு : அருண் மொழி சோழன்
எடிட்டிங் : சரவணன் மாதேஸ்வரன்
மக்கள் தொடர்பு சக்திசரவணன்.​
அனுபட்டி என்ற கிராமத்தில், துர்கா (பிரணிதி சிவசங்கரன்) மற்றும் அவரது மூத்த சகோதரர் சரவணன் (கார்த்திக் விஜய்) ஆகியோர் தங்கள் பெற்றோருடன் வீட்டு உரிமையாளர் சிவாவுக்கு (கமல்குமார்) சொந்தமான பண்ணை வீட்டில் வேலை செய்து வசித்து வருகிறார்கள். பண்ணையின் உரிமையாளர் சிவா குழந்தைகள் மேல் பிரியம் கொண்டவர். சரவணன் ஓர் அசைவப் பிரியன். ஒரு நாள் பள்ளியிலிருந்து திரும்பும் பொழுது இருவருக்கும் வழியில் ஓர் ஆட்டுக்குட்டி கிடைக்கிறது. இருவரும் தங்களுடன் அதை அழைத்துச் செல்ல முடிவு செய்து வீட்டுக்கு எடுத்து வருகிறார்கள். துர்கா ஆட்டுக்குட்டியுடன் ஆழமான பிணைப்பை உருவாக்குகிறாள், அவள் புஜ்ஜி என்று பெயரிடுகிறாள். துர்கா (பிரணிதி சிவசங்கரன்) மற்றும் சரவணன் (கார்த்திக் விஜய்) புஜ்ஜியுடனான அன்பால் இறைச்சி சாப்பிடும் பழக்கமுடைய சரவணன், புஜ்ஜியின் அப்பாவித்தனத்தைக் கண்டு மனம் மாறி, இனி ஆட்டு இறைச்சி சாப்பிட மாட்டேன் என்று உறுதியளிக்கிறார். இருப்பினும், குடிகாரரான இவர்களது தந்தை, தனது போதைக்கு பணமில்லாமல் புஜ்ஜியை விற்கிறார். குழந்தைகள் தங்கள் அப்பாவின் செயலால் மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள். தங்கை துர்காவை எவ்வளவோ சமாதானம் செய்தும் ஆட்டுக்குட்டி வேண்டும் என கூறும் தங்கைக்காக ஆட்டுக்குட்டியை தேடி புறப்படுகிறார் சரவணன். அவர்கள் பள்ளியைத் தவிர்த்துவிட்டு தேடுதல் பயணத்திற்குச் செல்கிறார்கள். வழியில் ஒரு குடும்பத்திற்கு பணிப்பெண்ணாக பணிபுரியும் அனாதை பெண் தர்ஷினியை (லாவண்யா கண்மணி)  சந்திக்கிறார்கள். அவர்களது தேடலில் தர்ஷினியும் சேர்ந்து, உடன்பிறப்புகளுடன் ஒரு பிணைப்பு உருவாக மூவரும் புஜ்ஜியின் இருப்பிடத்தைத் தேடும் போது, புஜ்ஜியை மீட்க பணம் தேவை என்பதை உணர்ந்தனர். மேலும் பணத்தை திரட்டி புஜ்ஜியை மீட்க முடிவு செய்கிறார்கள். இதற்கிடையில், குழந்தைகள் காணாமல் போனதை சிவா அறிந்துகொள்கிறார், இது அவரது சொந்த தேடல் முயற்சிகளுக்கு வழிவகுக்கிறது. இரு தரப்பினரும் தங்கள் தனித்தனி பயணங்களைத் தொடரும்போது, நகரத்தில் வெவ்வேறு கதாபாத்திரங்களைச் சந்திக்கும் பல திருப்பங்களுடன் மீதிக்கதை விரிவடைகிறது.
குழந்தை நட்சத்திரங்கள் பிரணிதி சிவசங்கரன், கார்த்திக் விஜய் மற்றும் லாவண்யா கண்மணி குழந்தைப் பருவத்தின் அப்பாவித்தனம் மற்றும் விலங்குகளின் இரக்கத்தின் உன்னதமான பிணைப்புடன் யதார்த்தமான நடிப்பால் கதையுடன் நம்மை ஒன்ற வைத்துள்ளனர்.
கமல்குமார், நக்கலைட்ஸ் வைத்தீஸ்வரி, கார்த்திக் விஜய், நக்கலைட்ஸ் ராம்குமார், நக்கலைட்ஸ் மீனா, வரதராஜன் ஆகியோர் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் : இசை – கார்த்திக் ராஜா, ஒளிப்பதிவு – அருண் மொழி சோழன், எடிட்டிங் – சரவணன் மாதேஸ்வரன் ஆகியோரின் பங்களிப்பு கதைக்களத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
குழந்தைகள் உலகம் அன்பானது. அந்த உலகத்துக்கு நாம் நுழைந்து விட்டால் இந்த உலகமே நமக்கு அழகாக மாறிவிடும் என்ற அடிப்படையில் குழந்தைகள் பாசத்துடன் வளர்க்கும் ஆடு தொலைந்த பின் அந்த உயிரைத் தேடிப் பயணம் செய்யும் இரு உயிர்களின் கதையாக திரைக்கதை அமைத்து விறுவிறுப்பாக நகர்த்த முயற்சித்துள்ளார் இயக்குனர் ராம் கந்தசாமி. அந்த முயற்சிக்கு கண்டிப்பாக இயக்குனரை பாராட்டலாம். பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பலரது பாராட்டுக்களைப் பெற்றுள்ள இந்தப் படத்தை இயக்குனர் திரைக்கதையிலும், காட்சிப்படுத்தலும் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் புஜ்ஜி அட் அனுப்பட்டி பார்வையாளர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு  பெற்று இருக்கும்.
மொத்தத்தில் கலாலயா நிறுவனம் புஜ்ஜி அட் அனுப்பட்டி குழந்தைகளையும் கவர்ந்து மேலும் பல விருதுகளை வெல்லும்.