பிரதர் சினிமா விமர்சனம் : பிரதர் புளிப்பு தட்டிய பழைய மாவு | ரேட்டிங்: 2/5
நடிகர்கள் :
ஜெயம் ரவி, ப்ரியங்கா மோகன், பூமிகா சாவ்லா, நட்ராஜ், ராவ் ரமேஷ், விடிவி கணேஷ், சரண்யா பொன்வண்ணன், சீதா, அச்யுத் குமார், சதீஷ் கிருஷ்ணன்
தொழில்நுட்ப வல்லுநர்கள் :
தயாரிப்பு: ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட்
தயாரிப்பு : சுந்தர் ஆறுமுகம்
எழுத்து – இயக்கம் ராஜேஷ்.எம்
ஒளிப்பதிவு : விவேகானந்த் சந்தோஷம்
படத்தொகுப்பு : ஆஷிஷ் ஜோசப்
கலை வடிவமைப்பு : கிஷோர். ஆர்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
சண்டைப்பயிற்சி : ஸ்டன்னர் சாம்
நடனம் : சாண்டி, சதிஷ் கிருஷ்ணன்
பாடல்கள் : தாமரை, பார்வதி மீரா, தரண்.கே.ஆர், பால் டப்பா (அணிஷ்)
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்
கார்த்திக் (ஜெயம் ரவி) சட்டக்கல்லூரி மாணவரைச் சுற்றி நகர்கிறது. சட்டக்கல்லூரியில் நடக்கும் முறைகேடுகளைக் சுட்டிக்காட்டி கல்லூரிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்ததால், சட்டப் படிப்பை பாதியில் நிறுத்திய கார்த்திக், சமுதாயத்தில் நடக்கும் பொறுப்பற்ற நடத்தையைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், அநீதிக்கு எதிராக நின்று அதிகாரத்தில் இருப்பவர்களைக் கேள்வி கேட்டு நடவடிக்கை எடுப்பதால் சுற்றியுள்ள அனைவரும் அவரை வெறுக்கின்றனர். அவனது நடத்தையால் அவனது குடும்பத்தினர் விரக்தியடைந்தனர். இந்நிலையில், தாங்கள் வசிக்கும் அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள அபார்ட்மெண்ட் அசோசியேஷனைக் கலந்தாலோசிக்காமல் ஆங்காங்கே சேதமடைந்த அடுக்கு மாடி இடிப்புக்கு கார்ப்பரேஷனில் உத்தரவை பெற்றதால், குடியிருப்பவர்கள் அவனிடம் சண்டை போடும் போது போலீஸ் கார்த்திக்கை காவல் நிலையத்திற்கு அழைத்து செல்கிறது. மகனின் செயலை கண்டு எரிச்சலடையும் தந்தை குமாரசாமி (அச்யுத் குமார்) மனஉளச்சல் ஏற்பட்டு மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். ஊட்டியிலிருந்து தந்தையை காண சென்னை வரும் அவனது மூத்த சகோதரி ஆனந்தி (பூமிகா சாவ்லா), தன் தம்பியை சிறந்த மனிதனாக மாற்றுவதாக பெற்றோருக்கு வாக்குறுதி அளித்து, ஊட்டியில் உள்ள தன் மாமியார் வீட்டிற்கு மாமியார் வீட்டிற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்கிறாள். கணவர் அரவிந்த் (நட்டி) குடும்பத்தினருக்கு கார்த்தியின் நடவடிக்கைகள் பிடிக்காததால் அவரை வெறுக்கின்றனர். இருப்பினும், கார்த்திக், தனது பொறுப்பற்ற அணுகுமுறையால், ஆனந்தி மற்றும் அவரது கணவர் அரவிந்த் குடும்பத்தில் பெரும் ஈகோ கொண்ட ஆனந்தியின் மாமனருடன் (ராவ் ரமேஷ்) பிரச்சனை ஏற்பட்டு சகோதரியின் குடும்பம் உடைகிறது. இம்முறை கார்த்திக்கின் தந்தை அவன் யார் என்ற உண்மையை கூறுகிறார். தான் யார் என்பதை அறிந்த கார்த்தி தன்னை முற்றிலுமாக மாற்றி தன்னால் பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்க்கும் முயற்சியில் களம் இறங்குகிறார். அதன் பின் நடப்பது படத்தின் மீதிக்கதை.
ஜெயம் ரவி மிக சுமாரான திரைக்கதையை தன் தோளில் சுமந்து தன்னால் முடிந்த அளவுக்கு சிறப்பான நடிப்பு, நடனம், சிரிப்பு, சண்டை, என பலவிதமான உணர்ச்சிகளைக் வெளிப்படுத்தி படத்தினை காப்பாற்ற முயற்சித்துள்ளார்.
இவருடன் சேர்ந்து பூமிகாவும் நேர்த்தியான நடிப்பு தந்துள்ளார்.
ப்ரியங்கா மோகன், நட்ராஜ், ராவ் ரமேஷ், சரண்யா பொன்வண்ணன், சீதா, அச்யுத் குமார், போன்ற நடிகர்களின் திறமை வீணடிக்க பட்டிருக்கின்றது.
விடிவி கணேஷ், சதீஷ் கிருஷ்ணன் திரை இருப்பு பெரிய அளவில் எடுபட வில்லை.
ஒளிப்பதிவு – விவேகானந்த் சந்தோஷம், படத்தொகுப்பு – ஆஷிஷ் ஜோசப், கலை வடிவமைப்பு – கிஷோர். ஆர், இசை – ஹாரிஸ் ஜெயராஜ், சண்டைப்பயிற்சி – ஸ்டன்னர் சாம், நடனம் – சாண்டி, சதிஷ் கிருஷ்ணன், பாடல்கள் – தாமரை, பார்வதி மீரா, தரண்.கே.ஆர், பால் டப்பா (அணிஷ்) ஆகிய சிறந்த தொழில்நுட்ப வல்லுனர்களின் உழைப்பும் மங்கிப்போன கதைகளத்தால் வீணடிக்கப்பட்ட உள்ளது.
நகைச்சுவையை நம்பி பயணிக்கும் இயக்குனர் ராஜேஷ்.எம் இம்முறை அக்கா தம்பி உறவை கையில் எடுத்து மீண்டும் பழைய பாதையில், மந்தமான திரைக்கதை அமைத்து அனைவரின் பொறுமையை சோதிக்கிறார். எப்படி ஆல் இன் ஆல் அழகு ராஜா மூலம் கார்த்திக்கு ஒரு தோல்வி படத்தை கொடுத்தது போல் பிரதர் படத்தின் மூலம் ஒரு நல்ல நடிகன் ஜெயம் ரவிக்கும் அதே நிலையை ஏற்படுத்தியுள்ளார். தமிழ் சினிமா இன்றைய காலகட்டத்தில் வேற லெவலுக்கு சென்று கொண்டிருக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சியும், மக்களின் தெளிவான புரிதல்களும் வேறு லெவலில் உள்ளதால் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் அரைத்த மாவை அரைத்து கொடுத்து ஏமாற்ற முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இனிவரும் காலங்களில் இயக்குனர் ராஜேஷ்.எம் மங்கிப் போன கதை களத்தை விட்டு மக்களை கவரும் கதையை தேர்ந்தெடுத்தால் நிச்சயம் வெற்றி காண முடியும்.
மொத்தத்தில் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரித்துள்ள பிரதர் புளிப்பு தட்டிய பழைய மாவு.