பிச்சைக்காரன் 2 திரைவிமர்சனம் : பிச்சைக்காரன் 2 சுயநலமின்மை, சமூகம் மற்றும் குடும்பம் பற்றிய வலுவான செய்தியை உணர்வுபூர்வமாக பணக்கார பின்பலத்தோடு பிரதிபலிக்கும் படம் | ரேட்டிங்: 4/5

0
690

பிச்சைக்காரன் 2 திரைவிமர்சனம் : பிச்சைக்காரன் 2 சுயநலமின்மை, சமூகம் மற்றும் குடும்பம் பற்றிய வலுவான செய்தியை உணர்வுபூர்வமாக பணக்கார பின்பலத்தோடு பிரதிபலிக்கும் படம் | ரேட்டிங்: 4/5

விஜய் ஆண்டனி நடிப்பில் சசி இயக்கத்தில் 2016-ம் ஆண்டு வெளியாகி வெற்றியடைந்த படம் பிச்சைக்காரன். படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் பெரும் வசூல் சாதனைப்படைத்தது.  படத்தின் வெற்றியானது அதன் தொடர்புடைய கதையாகும், இது பார்வையாளர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது. இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய விஜய் ஆண்டனியின் கேரியரில் இந்தப்படம் ஒரு மைல்கலாக அமைந்தது. இந்த நிலையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு அந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை நடிகர் விஜய் (இரட்டை வேடம்), ஆண்டனியே இயக்கி நடித்துள்ளார்.

இதில் அவருடன் காவ்யா தாப்பர், ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், தேவ் கில், ஜான் விஜய், மன்சூர் அலிகான், ஹரீஷ் பெராடி மற்றும் யோகி பாபு ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

ஓம் நாராயணன் ஒளிப்பதிவு கவனிக்க, பிச்சைக்காரன் 2 படத்தின் இயக்கம், இசை, கதை, முக்கிய கதாபாத்திரம் என அனைத்தையும் விஜய் ஆண்டனியே செய்துள்ளார்.

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் பேனரில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார். மக்கள் தொடர்பு D ONE, சுரேஷ்சந்திரா, ரேகா.

இந்தியாவின் முதல் 10 பணக்காரர்களில் விஜய் குருமூர்த்தி (விஜய் ஆண்டனி) மற்றும் அவரது தந்தை குருமூர்த்தி ஆகியோர் உள்ளனர். இந்தியாவிலேயே 7வது பெரும் பணக்காரர் விஜய் ஆண்டனி. அவர் தன்னுடைய நண்பர் தேவ் கில், ஆடிட்டர் ஜான் விஜய், குடும்ப மருத்துவர் ஹரிஷ் பெரேடி ஆகியோரை மட்டும் நம்புகிறார். ஆனால் அவர்கள் விஜய் ஆண்டனியின் சொத்தை அபகரிக்க திட்டமிடுகின்றனர். குருமூர்த்தியின் மறைவுக்குப் பிறகு விஜய்க்கு மூளை மாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்டம் தீட்டுகிறார்கள அவர்கள் ஒரு ஏழையின் மூளையைப் பயன்படுத்தி விஜய்க்கு இடமாற்றம் செய்ய முடிவு செய்கிறார்கள், அதற்காக மூளை மாற்று அறுவை சிகிச்சை முறையை தேர்வு செய்கின்றனர். அவர்கள் சத்யாவை (விஜய் ஆண்டனி) பொருத்தமான ஜோடியாகக் காண்கிறார்கள். சத்யாவுக்கு ஒரு அதிர்ச்சிகரமான கடந்தகாலம் உள்ளது, அந்த ஏழை சத்யா (விஜய் ஆண்டனி), மற்றும் அவரது சகோதரி ராணி ஆகியோர் தங்கள் பெற்றோரின் மரணத்திற்குப் பிறகு பிச்சைக்காரர்களாக மாறுவதைப் பின்கதை காட்டுகிறது. ஆள் கடத்தல் கும்பலிடம் சிக்கிக் கொள்கிறார்கள், சத்யாவும் ராணியும் பிரிகிறார்கள். அவர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை சிறார் கைதியாக கழிக்கிறார். சத்யா சிறார் கைதியாகப் பணியாற்றியதால், தன் சகோதரியைப் பிரிந்ததற்குக் காரணமான மனிதனைக் கொல்ல வெளியே வருகிறான். சிறு வயதிலிருந்தே தொலைந்து போன தன் தங்கையை தேடி அலைகிறார் சத்யா. சத்யா  விருப்பத்திற்கு மாறாக சதி திட்டம் தீட்டீயவர்களின் கண் பார்வையில் பட்டு விஜய் குருமூர்த்தியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.  இந்த சதி திட்டம் தீட்டீயவர்கள் வெற்றியடைந்தார்களா? அவர்களது எண்ணம் நிறைவேறியதா? குருமூர்த்தியின் வாழ்க்கையை சத்யா எப்படி வாழ்கிறார்? மேலும் அவர் காணாமல் போன தங்கையை கண்டுபிடித்தாரா? என்பதே பிச்சைக்காரன்-2 மீதிக்கதை.

விஜய் ஆண்டனி தனது வழக்கமான நடிப்பு திறனுடன் சுயரூபத்தை தொடர்கிறார். இப்படத்தில் ஆண்டனி, சத்யா என இரண்டு கதாபாத்திரங்களில் விஜய் ஆண்டனி  திரைக்கதையின் மனநிலையை மனதில் தக்கவைத்துக்கொண்டு இந்த படத்திற்கு தேவையானதை தனது உணர்வுப்பூர்வமான வெளிப்பாடுகள் மற்றும் அணுகுமுறையால் சற்று மேம்பட்ட நடிப்பால் கச்சிதமாக செய்துள்ளார்.

ஹீரோயின் காவ்யா தாப்பர் திரை நேரம் கணிசமாகக் குறைவு என்றாலும் பாத்திரத்திற்கு நியாயம் செய்ததுடன் பாடல் காட்சிகளில் ரசிகர்களை  கவர்ச்சியால் கவர்ந்துள்ளார்.

சிறுவன், சிறுமியாக நடித்த இருவரின் நடிப்பு தரைக்கதைக்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட்.

ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், தேவ் கில், ஜான் விஜய்,  மன்சூர் அலிகான், ஹரீஷ் பெராடி, யோகி பாபு ஆகியோர் கச்சிதமான தேர்வு.

விஜய் ஆண்டனி இசை மற்றும் பின்னணி ஸ்கோர் சிறப்பாக அமைந்து உணர்ச்சியை பெருக்கவும் உதவுகிறது. மேலும், விஜய் ஆண்டனியின் எடிட்டிங், தேவையான வெட்டுகளுடன் இறுக்கமாகவும் நேர்த்தியாகவும் இருக்கிறது.

ஓம் நாராயணின் பிரமாதமான ஒளிப்பதிவு படத்தின் முன்னேற்றத்திற்கு பலம் தருகிறது.

தயாரிப்பு வடிவமைப்பு செழுமையாக உள்ளது, இவை அனைத்தும் ஒவ்வொரு காட்சியிலும் பிரதிபலிக்கிறது. என்றாலும் VFX மட்டும் மிக சுமாராக உள்ளது.

விஜய் ஆண்டனி இப்படத்திற்கு கதை எழுதி, இயக்கி, எடிட்டிங் செய்து, இசையமைத்திருக்கிறார். பிச்சைக்காரன் 2 முந்தைய படமான பிச்சைக்காரனின்  கடைசி பகுதியுடன் எந்த தொடர்பும் இல்லை. மூளை மாற்று அறுவை சிகிச்சையுடன் தொடர்புடைய அறிவியல் புனைகதையுடன் ஒரு சுவாரஸ்யமான ஆரம்பம் உள்ளது. இயக்குனராக அறிமுகமாகியுள்ள விஜய் ஆண்டனி எடுத்துக்கொண்ட கதைக்களம் அருமை. சட்டவிரோத மூளை மாற்று அறுவை சிகிச்சைக்கு பலியாகி, பணக்கார பில்லியனரின் காலணியில் போராடும் இளைஞனின் கதை. இதில்  ஏழை ஏன் ஏழையாகி கொண்டே போகிறான், அதற்கு என்ன காரணம், பணக்காரன் ஏன் இன்னும் மென்மேலும் பணக்காரன் ஆகிக்கொண்டே போகிறான் என்பதை அழகாக காட்டியுள்ளார்.அதே போல் தங்கச்சி சென்டிமென்ட் ஒர்கவுட் ஆகியுள்ளது. விஜய் ஆண்டனி வலுவான வசனங்களையும், ஆக்‌ஷன் காட்சிகளையும் விறுவிறுப்பாக திரைக்கதையில் சேர்த்து கறுப்புப் பணத்தை மறைத்து வைக்காதீர்கள், தயவு செய்து அனைவருக்கும் நல்லது செய்யுங்கள், என்ற சிறந்த கருத்தை பதிவு செய்துள்ள விஜய் ஆண்டனியை பாராட்டியே ஆகவேண்டும்.

மொத்தத்தில் விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் பேனரில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள பிச்சைக்காரன் 2 சுயநலமின்மை, சமூகம் மற்றும் குடும்பம் பற்றிய வலுவான செய்தியை உணர்வுபூர்வமாக பணக்கார பின்பலத்தோடு பிரதிபலிக்கும் படம்.