பார்க் சினிமா விமர்சனம் : பார்க் ஹாரர் காமெடி திரில்லர் | ரேட்டிங்: 2.5/5

0
284

பார்க் சினிமா விமர்சனம் : பார்க் ஹாரர் காமெடி திரில்லர் | ரேட்டிங்: 2.5/5

அக்ஷயா மூவி மேக்கர்ஸ் சார்பாக லயன் ஈ.நடராஜ் பார்க் படத்தைத் தயாரிக்க ஈ.கே.முருகன் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் கதாநாயகனாக தமன் குமார், கதாநாயகியாக ஸ்வேதா டோரதி, வில்லனாக யோகிராம், லயன் ஈ.நடராஜ், பிளாக் பாண்டி, கிரேன் மனோகர், ரஞ்சனா நாச்சியார், நீமாரே, சுரேந்தர், விஜித் சரவணன், ஜெயந்திமாலா, கராத்தே ராஜா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவு பாண்டியன் குப்பன், இசை ஹமரா சி.வி, படத்தொகுப்பு குரு சூர்யா, நடனம் ராபர்ட் மாஸ்டர் மற்றும் சுரேஷ் சித், கலை இயக்கம் ஆர் வெங்கடேஷ், பாடல்கள் நா. ராசா, ஸ்டண்ட் எஸ் .ஆர் .ஹரி முருகன், தயாரிப்பு நிர்வாகி கே. எஸ் சங்கர், ஆடைகள் ஜி. வீரபாபு, ஒப்பனை ஷேக் பாட்ஷா, நிர்வாகத் தயாரிப்பாளர் எம். அருள், இணைத் தயாரிப்பாளர் நா.ராசா, மக்கள் தொடர்பு சக்தி சரவணன்.

திருவண்ணாமலையில் மித்ரன் (தமன் குமார்) படித்து வேலைக்கு போகாமல் நண்பன் டிஷ் (பிளாக் பாண்டி) உடன் ஜாலியா பொழுதை போக்கி வருகிறார்கள். ஒரு நாள் சீட்டு கம்பெனியில் அம்மாவிற்கு அதிர்ஷ்ட பரிசு ஸ்கூட்டி கிடைக்க அதை வாங்க நண்பன் டிஷ் உடன் செல்கிறார் மித்ரன். அங்கு யாழினிக்கும் (ஸ்வேதா டோரதி) பைக் பரிசாக கிடைக்கிறது. அப்போது யாழினியின் அழகில் மயங்கி விடுகிறான். இருவரும் பேசி பரிசுப் போட்டியில் விழுந்த பைக்கையும் ஸ்கூட்டரையும் புரிந்துணர்வோடு மாற்றிக் கொள்கிறார்கள். அத்துடன் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்ளும் நிகழ்வு நடைபெறுகிறது.   உறவினர் சிபாரிசில் டிடிஎச் கனெக்சன் கொடுக்கும் கம்பெனியில் வேலையில் சேர்கிறான் மித்ரன். அங்கே யாழினியும் பணிபுரிவதை பார்த்து சந்தோஷத்தில் மிதக்கிறார். மித்ரன் யாழினியை ஒருதலையாக காதலிக்கும் வேளையில், தனக்குப் பொருத்தமான ஒருவரை கண்டுபிடிக்க வேண்டும் என்று யாழினி விரும்புகிறாள். தனது பெற்றோர்கள் பார்த்த மாப்பிள்ளை பற்றி விசாரித்து சொல்லும் படி யாழினி மித்ரனிடம் கூறுகிறாள். அதிர்ச்சி அடைந்த மித்ரன் அரைமனதுடன் யாழினி தரும் விவரங்களை விசாரிக்கிறார்.ஒரு கட்டத்தில் மித்ரனின் நற்குணத்தை கண்டு அவள் அவன் மீது காதல் கொள்கிறாள். இருவீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது. அதே நேரத்தில் திருவண்ணாமலையில் ஒரு பூங்காவில் கர்நாடகாவைச் சேர்ந்த காதல் ஜோடி நீமாரே, சுரேந்தர், இருவரும் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டதால் அங்கு அமானுஷ்ய விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், நிச்சயதார்த்தத்திற்கு பிறகு, அவர்கள் கும்பல்களால் கடத்தப்படுகிறார்கள். அவர்கள் தப்பித்து ஓடும் போது அவர்கள் அறியாமல் அந்த பூங்காவிற்குள் நுழைகிறார்கள். அங்கு அந்த ஆவிகள் அவர்களின் உடலில் நுழைந்து விடுகிறார்கள். ஆவிகளால் அவர்கள் இருவரும் எதற்காக ஆட்கொள்ளப்பட்டார் கள்? ஆவிகளிடமிருந்து அவர்கள் தப்பிக்க முடிந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

மித்ரன் தமன் குமார், மற்றும் யாழினியாக ஸ்வேதா டோரதி, இருவரும் முதல் பாதி ஜாலியா வந்து இரண்டாம் பாதியில் ஆவிகள் அவர்களின் உடலில் நுழைந்ததும் பார்வையாளர்கள் திகில் பயத்தில் அதிரும் வகையில் அழுத்தமான, பாராட்டப்பட்ட அதிரடியான நடிப்பில் ஜொலிக்கிறார்கள்.

படம் முழுக்க நண்பனுடன் பயணிக்கும் டிஷ் கதாபாத்திரத்தில் பிளாக் பாண்டி காமெடியில் கலக்கி உள்ளார்.

யாழினியின் தந்தையாக தயாரிப்பாளர் லயன் ஈ.நடராஜ், ஆவியாக இருந்த காதல் ஜோடி நீமாரே மற்றும் சுரேந்தர், வில்லத்தனத்தில் கலக்கி இருக்கும் யோகிராம், கிரேன் மனோகர், ரஞ்சனா நாச்சியார், விஜித் சரவணன், ஜெயந்திமாலா, கராத்தே ராஜா ஆகியோர் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

ஒளிப்பதிவு பாண்டியன் குப்பன், இசை ஹமரா சி.வி, படத்தொகுப்பு குரு சூர்யா, பாடல்கள் நா. ராசா, கலை இயக்கம் ஆர்.வெங்கடேஷ், ஸ்டண்ட் எஸ்.ஆர்.ஹரி முருகன், நடனம் ராபர்ட் மாஸ்டர் மற்றும் சுரேஷ் சித், ஆடைகள் ஜி. வீரபாபு, ஒப்பனை ஷேக் பாட்ஷா ஆகிய தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு முதல் பாதி சிம்பிளாகவும், இரண்டாம் பாதியில் திகிலுடன் படத்தை கொண்டு செல்ல உதவியுள்ளது.

பொதுவாக திகில் படங்கள் என்றால் இயற்கைக்கு அப்பாற்பட்ட வில்லன்கள் பழிவாங்குவதுதான். பார்க் கதையும் அதே ஜானரில் மனிதாபிமானத்தை தழுவி பயணிக்கிறது. இயக்குனர் ஈ.கே.முருகன் முதல் பாதி ஜாலியாகவும், இரண்டாம் பாதி திகிலாகவும் படைத்துள்ளார்.

மொத்தத்தில் அக்ஷயா மூவி மேக்கர்ஸ் சார்பாக லயன் ஈ.நடராஜ் தயாரித்துள்ள பார்க் ஹாரர் காமெடி திரில்லர்.