பானி பூரி சினிமா விமர்சனம் : பானி பூரி அனைவரையும் கவரும், வித்தியாசமாக சொல்லப்பட்ட அழுத்தமான காதல் கதை | ரேட்டிங்: 3/5
பாலாஜி வேணுகோபால் ‘லிவ்-இன்’ ரிலேஷன்ஷிப் கான்செப்ட்டில் இயக்கியுள்ள ஒரு புதிய இணையத் தொடர் ‘பானி பூரி’. இந்தத் தொடரை ஃபுல் ஹவுஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. இந்த ‘பானி பூரி’ தொடரில் லிங்கா, ஜம்பிகா, இளங்கோ குமரவேல், கனிகா மற்றும் வினோத் சாகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
எழுத்து, இயக்கம் – பாலாஜி வேணுகோபால், இசை – நவ்நீத் சுந்தர், ஒளிப்பதிவு – பிரவீன் பாலு, படத் தொகுப்பு – பி.கே., ஒலி வடிவமைப்பு & கலவை – ராஜேஷ் முக்கத், தயாரிப்பு வடிவமைப்பு – சரவணன் வசந்த், உடைகள் – தீபிகாஷி, நிர்வாக தயாரிப்பு – செல்லதுரை, கிரியேட்டிவ் தயாரிப்பு – கருப்பையா சி.ராம், தயாரிப்பு – ஃபுல் ஹவுஸ் எண்டர்டெய்ன்மெண்ட், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, டி ஒன்.
எழுத்து, இயக்கம் – பாலாஜி வேணுகோபால், இசை – நவ்நீத் சுந்தர், ஒளிப்பதிவு – பிரவீன் பாலு, படத் தொகுப்பு – பி.கே., ஒலி வடிவமைப்பு & கலவை – ராஜேஷ் முக்கத், தயாரிப்பு வடிவமைப்பு – சரவணன் வசந்த், உடைகள் – தீபிகாஷி, நிர்வாக தயாரிப்பு – செல்லதுரை, கிரியேட்டிவ் தயாரிப்பு – கருப்பையா சி.ராம், தயாரிப்பு – ஃபுல் ஹவுஸ் எண்டர்டெய்ன்மெண்ட், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, டி ஒன்.
8 எபிசோடுகள் கொண்ட இந்தத் தொடர், தமிழ் ஓடிடியான ஷார்ட்ஃபிலிக்ஸில் (Shortflix) ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது.
காதலன் தாண்டாயுதபாணி (லிங்கா) பெயரில் இருக்கும் பாணியையும், காதலி பூர்ணிமா (ஜம்பிகா)வின் பெயரில் இருந்து பூரியையும் ஒன்று சேர்த்து பானி பூரி என்ற இந்த இணைய தொடருக்கு பெயரிடப்பட்டுள்ளது. பிடிவாத குணம் கொண்ட பூர்ணிமா என்கிற பூரி (ஜம்பிகா) சென்னையில் இருக்கும் ஒரு மென்பொருள் கம்பெனியில் ரோபோட்டிக்ஸ் துறையில் விஞ்ஞானியாக இருக்கிறார். கோவையில் இருக்கும் பானி என்கிற தாண்டாயுதபாணி (லிங்கா) விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை குணம் கொண்டவர். பாணியும் பூரியும் காதலர்கள். திருமணம் செய்து கொள்ள முடிவு எடுக்கும் போது பூரி ஏதோ குழப்பத்தில் இருவரும் பிரிந்து விடலாம் என்று கூறுகிறாள். சரியான காரணம் கூற முடியாமல் இருக்கும் தன் மகளுக்கு பானி நல்லவன் அவனை மிஸ் பண்ண வேண்டாம் என்று எடுத்துச் சொல்கிறார் தந்தை இளங்கோ குமரவேல். குழப்பத்தில் இருக்கும் தன் மகளுக்கு ஒரு யோசனை சொல்கிறார், அதாவது திருமணத்திற்கு முன்பு ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள ஒரு வீட்டில் இருவரும் ஏழு நாட்கள் தங்கிய பின் முடிவெடுக்கும் படி கூறுகிறார். இருவரும் ஒரு சர்வீஸ் அப்பார்ட்மெண்ட்டில் தங்குகிறார்கள். அந்த அப்பார்ட்மெண்ட்டில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அதெல்லாம் சமாளித்த பிறகு திருமணத்திற்கு பிறகு பூரியின் அப்பாவை (இளங்கோ குமரவேல்) யார் பார்த்துக்கொள்வது என்ற பிரச்சனை வருகிறது. இப்படியாக தொடர் நகர்கிறது. பிரச்சனைக்கு தீர்வு கிடைத்ததா? பூரியின் அந்த குழப்பத்திற்கு யார் காரணம்? என்பதை முழுமையாக அறிந்து கொள்ள 8 எபிசோடுகள் கொண்ட இந்தத் தொடரை, தமிழ் ஓடிடியான ஷார்ட்ஃபிலிக்ஸில் ( Shortflix) கண்டு களிக்கலாம்.
ஜாலியான இளைஞராக கவனம் ஈர்த்து வரும் லிங்கா, தண்டாயுதபாணி என்ற பானி கதாபாத்திரத்தில் அப்பாவியாகவும், இயல்பாகவும் சம கால காதலர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை தத்ரூபமாக நடித்து காட்டியுள்ளார்.
காதலி பூர்ணிமா ரோபோக்களை உருவாக்கும் விஞ்ஞானி பூரி கதாபாத்திரத்தில் வரும் ஜம்பிகா, லிங்காவுக்கு ஈடுகொடுத்து அருமையான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
இவர்கள் இருவரும் சுற்றி நகரும் திரைக்கதைக்கு ஈகோ, அன்பு, கோபம் என அனைத்தையும் கலந்து அட்டகாசமான நடிப்பின் மூலம் இருவரும் பார்வையாளர்களை கவர்ந்துள்ளனர்.
சாம்பிகாவின் அப்பாவாக வரும் இளங்கோ குமரவேல், மிகச் சரியான தேர்வு. யதார்த்தமான குணச்சித்திர நடிகன் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.
சாம்பிகாவின் அப்பாவாக வரும் இளங்கோ குமரவேல், மிகச் சரியான தேர்வு. யதார்த்தமான குணச்சித்திர நடிகன் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.
நாயகனின் அண்ணனாக ஸ்ரீகிருஷ்ண தயாள், அண்ணியாக கனிகா, அடுக்குமாடி குடியிருப்புவாசி கோபால் மற்றும் அனைத்து துணை கதாபாத்திரங்களும் தத்ரூபமான நடிப்பை வழங்கி கவனம் பெறுகிறார்கள்.
குறிப்பாக பானியின் நண்பனாக வினோத் சாகர் காமெடியையும், குணசித்திர நடிப்பையும் தன்னால் வழங்க முடியும் என்பதை நிரூபித்துள்ளார்.
ஒளிப்பதிவாளர் பிரவீன் பாலு, நவ்னீத் சுந்தரின் பின்னணி இசை கட்டிடங்களுக்கு உள்ளே நகரும் கதைக்கு இருவரும் சேர்ந்து தந்துள்ள சிறப்பான பங்களிப்பு இணைத் தொடருக்கு பலம் சேர்த்திருக்கிறது.
இன்றைய காலகட்டத்தில் நவீன கார்ப்பரேட் கலாச்சாரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மிடில் கிளாஸ் சேர்ந்தவர்களிடம் அதிகரித்து வரும் அர்த்தமில்லா விவாகரத்தின் காரணங்கள் வெளிப்படுத்த, ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் சேர்ந்து வாழும் இருவர் இடையில் இருக்கும் லிவ் – இன் உறவு குறித்து ஒரு காதல் ஜோடியை சுற்றி சுழலும் கதை. ஒரே வீட்டில் இருந்தாலும் ஒழுக்கமாக இருக்க முடியும் என்பதை எந்த வித விரசம் இல்லாமல் பார்வையாளர்களை வசீகரிக்கும் வகையில் திரைக்கதை அமைத்து மிகுந்த எச்சரிக்கையுடன், மிக அழுத்தமாக பதிவு செய்து காட்சி படுத்திய இயக்குனர் பாலாஜி வேணுகோபாலை பாராட்டியே ஆக வேண்டும்.
மொத்தத்தில் ஃபுல் ஹவுஸ் எண்டர்டெய்ன்மெண்ட் தயாரித்துள்ள பானி பூரி அனைவரையும் கவரும், வித்தியாசமாக சொல்லப்பட்ட அழுத்தமான காதல் கதை.