பாசக்கார பய திரைப்பட விமர்சனம் : பாசக்கார பய குடும்ப சென்டிமென்ட், நகைச்சுவை, ஆக்ஷன் என முழுக்க குடும்ப உறவுகளை மையப்படுத்திய படம் | ரேட்டிங்: 2.5/5
நடிகர்கள் : விக்னேஷ் (குணா), காயத்ரி (தேன்மொழி), பிரதாப் (சுப்ரமணி), கஞ்சா கருப்பு (மதுரபாண்டி), தேனி முருகன் (மந்திரவாதி), விவேக பாரதி (பெருமாள்), ராஜசேதி.
தொழில்நுட்ப கலைஞர்கள்:
ஒளிப்பதிவு – கே.வி.மணி
இசை – சௌந்தர்யன்
எடிட்டிங் – எஸ்.பி.அகமது
நடனம் – சாய் சரவணன்
ஸ்டண்ட் – சாய் சாரா
மக்கள் தொடர்பு – வெங்கட்
தயாரிப்பு – காயன் மிக்சர்ஸ் நற்கவி டாக்கீஸ்
வசனம்- பி.சேதுபதி
கதை திரைக்கதை இயக்கம் – விவேகபாரதி
கதை:
சுப்ரமணி (பிரதாப்) தேன்மொழியை (காயத்ரி) நேசிக்கிறான். தேன்மொழியிடம் சுப்ரமணி காதலை சொல்லும் போது அவள் சிறையில் இருக்கும் தாய்மாமன் குணாவை (விக்னேஷ்) விரும்புவதாக கூறுகிறாள். சிறையில் இருந்து வெளியே வரும் தேன்மொழியின் மாமன் குணா, அவளிடம் பாசமாக இருக்கும் போது மாமனை திருமணம் செய்ய விரும்புவதாக தேன்மொழி கூறுகிறாள். குணா தேன்மொழியை திருமணம் செய்ய மறுக்கிறார். குணா எதற்காக சிறை சென்றான்? குணா எதற்காக தேன்மொழியை திருமணம் செய்ய மறுக்கிறார்? சுப்ரமணி காதல் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதி கதை.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் விக்னேஷ், பாசம், வீரம் என அனைத்திலும் தடுமாற்றம் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி மனதில் நிற்கிறார்.
கிராமத்து அழகி காயத்ரி தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.
நாயகன் சுப்ரமணி (பிரதாப்), மதுரபாண்டியாக கஞ்சா கருப்பு, மந்திரவாதியாக தேனி முருகன், தேன்மொழியின் அப்பா பெருமாளாக நடித்திருக்கும் இயக்குனர் விவேக பாரதி, வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் ராஜசேதி ஆகியோர் கதாபாத்திரம் பொருத்தமான தேர்வு. அவர்கள் நடிப்பிலும் குறையில்லா கச்சிதமான நடிப்பு கதைக்கு ஏற்றவாறு வாழ்கிறார்கள்.
இசையமைப்பாளர் சௌந்தர்யன் இசையில் பாடல்கள் இனிமை.
கே.வி.மணியின் ஒளிப்பதிவில் அழகான கிராமத்து உறவுகள் படமாக்கிய விதம், மற்றும் எஸ்.பி.அகமதுவின் எடிட்டிங் இரண்டும் அசத்தல்.
நாம் அனைவரும் குடும்ப மற்றும் உறவு பிரச்சனைகளை நம் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கிறோம். இந்த கருத்தை மையமாக வைத்து அழகான கிராமத்து உறவுகள் பின்னணியில் கதை எழுதி, குடும்ப உறவுகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் விவேக பாரதி.
மொத்தத்தில், காயன் மிக்சர்ஸ் நற்கவி டாக்கீஸ் தயாரித்திருக்கும் பாசக்கார பய குடும்ப சென்டிமென்ட், நகைச்சுவை, ஆக்ஷன் என முழுக்க குடும்ப உறவுகளை மையப்படுத்திய படம்.