பரோல் விமர்சனம்: பரோல் சில ஆச்சர்யங்கள்,  உணர்ச்சிகள், அதிர்ச்சிகள், அதிர்வுகள் நிறைந்த க்ரைம் கலந்த ஆடுபுலி ஆட்டம் | ரேட்டிங்: 3/5

0
450

பரோல் விமர்சனம்: பரோல் சில ஆச்சர்யங்கள்,  உணர்ச்சிகள், அதிர்ச்சிகள், அதிர்வுகள் நிறைந்த க்ரைம் கலந்த ஆடுபுலி ஆட்டம் | ரேட்டிங்: 3/5

ட்ரிப்பர் எண்டர்டைன்மென்ட் சார்பில் மதுசூதனன் தயாரிப்பில், ஆர்.எஸ். கார்த்திக், லிங்கா, கல்பிகா, மோனிஷா முரளி, வினோதினி வைத்தியநாதன், ஜானகி சுரேஷ், மேக் மணி, சிவம், டென்னிஸ் இம்மானுவேல் ஆகியோர் நடித்துள்ளனர்.
இயக்குனர் துவாரக் ராஜா இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் பரோல். இசையமைப்பாளர் – ராஜ்குமார் அமல், ஒளிப்பதிவாளர் – மகேஷ் திருநாவுக்கரசு, எடிட்டர் – முனிஸ், கலை இயக்குனர் – அருண்குமார், ஆடை வடிவமைப்பாளர் – அகிலன் ராம்,  விஷ{வல் எஃபெக்ட்ஸ் – ஜெகன், ஒலி வடிவமைப்பு – ராஜ்சேகர்,மக்கள் தொடர்பு – ஏய்ம் சதீஷ் டீம்.

வடசென்னைவாசிகள் கரிகாலன், கோவலன் சகோதரர்கள். தாயின் அரவணைப்பில் வளர்கின்றனர். கரிகாலனுக்கே தாய் முக்கியத்துவம் கொடுப்பதாக கோவலன் மனதில் பதிந்து விட, தன் அண்ணன் கரிகாலனை எதிரியாகவே பாவிக்கிறான். இளம் வயதில் கொலைக்காக சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்கப்படுகிறான் கரிகாலன். அதன் பின் சிறையில் மூன்று பேரை கொலை செய்ய தண்டனை அதிகமாகிறது. தாய் போராடி வெளியே கொண்டு வந்தாலும் மீண்டும் கொலை செய்து விட்டு கரிகாலன் சிறைக்கு செல்வதே வாடிக்கையாகிவிடுகிறது. கோவலனோ அண்ணன் கரிகாலன் சிறையில் இருப்பதே மேல் என்ற நினைப்புடன் வாழ்கிறான். சில ஆண்டுகள் கழித்து தாய் கரிகாலனை கருணை மனு கொடுத்து மீட்க முடிவெடுக்கிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறான் கோவலன். இந்த சமயத்தில் தாய் எதிர்பாராத விதமாக திடீரென்று இறந்து விட பரோலில் அண்ணனை அழைத்து வர வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுகிறான் கோவலன். இறுதியில் கரிகாலன் பரோலில் வந்தானா? கோவலன் இதற்கான எற்பாட்டை செய்தானா? என்ன காரணம்? பரோலில் வெளியே வரும் கரிகாலனுக்கு ஏற்படும் ஆபத்துக்கள் என்ன? தாய்க்கு இறுதி சடங்கு செய்தானா கரிகாலன்? என்பதே க்ளைமேக்ஸ்.

சகோதரர்களாக, லிங்கா மற்றும் ஆர்.எஸ்.கார்த்திக் மிகவும் சிறப்பாக நடித்துள்ளனர். அவர்களின் கதாபாத்திரங்கள் படம் முழுவதும் எதிர்மறையாக வந்து படத்தின் கதையோட்டத்தை தாங்கி பிடித்துள்ளனர்.

கல்பிகா மற்றும் மோனிஷா முரளி இருவரின் காதலிகளாக நடித்துள்ளனர்.

ராஜ்குமார் அமலின் பின்னணி இசையும், ஆக்ஷன் காட்சிகள், நீதிமன்ற காட்சிகள், வடசென்னை வாழ்க்கை, துரத்தல் கொலை என்று காட்சிக்கோணங்கள் பிரமிக்க வைக்கிறது.

எடிட்டர் – முனிஸ், கலை இயக்குனர் – அருண்குமார் ஆகியோரின் பணி சிறப்பு.
சகோதார்களின் பாசப்போராட்டத்தை மையமாக வைத்து வடசென்னை கதைக்களத்தில் சிறுவர்கள் பலாத்காரம்,  கொலை, காதல், பலாத்காரம், பழி, பகை, அன்பு, மனவேதனை, வெறுப்பு, கோபம், க்ரோதம், நீதிமன்ற விசாரணை என்று அனைத்தையும் ஒருசேர கொடுத்து க்ரைம் திரைக்கதையாக இயக்கியுள்ளர் துவாரக் ராஜா.

ஆபாச வசனங்கள், அதீத வன்முறைகள், காட்டப்படும் கொலைகள் படத்தில் அதிகமாக காணப்படுகிறது. இவற்றை குறைத்து சகோரதர்களின் பகையை மறந்து இணையும் பாச போராட்டத்தை மிகையாக காட்டியிருந்தால் இன்னும் பேசப்பட்டிருக்கும்.

மொத்தத்தில் ட்ரிப்பர் எண்டர்டைன்மென்ட் சார்பில் மதுசூதனன் தயாரிப்பில் பரோல் சில ஆச்சர்யங்கள்,  உணர்ச்சிகள், அதிர்ச்சிகள், அதிர்வுகள் நிறைந்த க்ரைம் கலந்த ஆடுபுலி ஆட்டம்.