பரம்பொருள் திரைப்பட விமர்சனம் : பரம்பொருள் திரையரங்குகளில் பார்க்க வேண்டிய அதிரடி திருப்பம் கொண்ட ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் ரேட்டிங்: 3.5/5

0
428

பரம்பொருள் திரைப்பட விமர்சனம் : பரம்பொருள் திரையரங்குகளில் பார்க்க வேண்டிய அதிரடி திருப்பம் கொண்ட ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் ரேட்டிங்: 3.5/5

கவி கிரியேஷன்ஸ் மனோஜ் மற்றும் கிரிஷ் தயாரிப்பில் சி.அரவிந்த் ராஜ் இயக்கி இருக்கும் படம் ‘பரம்பொருள்’.
நடிகர்கள் – கதாபாத்திரம்
ஆர்.சரத்குமார் – மைத்திரியன்
அமிதாஷ் – ஆதி
காஷ்மீர் பர்தேஷி – யாமினி
சார்லஸ் வினோத் – பாலு
ரவி வெங்கட் – சற்குணபாண்டியன்
டி.சிவா – வாசுதேவன்
பாலாஜி சக்திவேல் – சங்கரலிங்கம்
ஸ்வாதிகா – சக்தி
பாவா செல்லதுரை – முத்து குமார்
கஜராஜ் – ஐஜி கோபால்சாமி
வி.பாலகிருஷ்ணன் – வருண் ராவ்
வின்சென்ட் அசோகன் – கிஷன் சைட்
செந்தில் குமரன் – தரணி
தொழில் நுட்பகலைஞர்கள் :
இசை – யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு இயக்குனர் – எஸ்.பாண்டிகுமார்
எடிட்டர் – நாகூரன் ராமச்சந்திரன்
சண்டைக்காட்சி – தினேஷ் சுப்பராயன்
நடனம் – சதீஷ் கிருஷ்ணன்
ஆடைகள் – பூர்ணிமா ராமசாமி
கலை – குமார் கங்கப்பன்
பாடல் வரிகள் – மதன் கார்க்கி, சினேகன், விவேக்
நிர்வாக தயாரிப்பாளர் – ஜாயல் பென்னட்
மக்கள் தொடர்பு – நிகில் முருகன்
சக்தி பிலிம் பேக்டரி சார்பில் சக்திவேலன் இப்படத்தை வெளியிடுகிறார்.
பரம்பொருள் என்பது ஒரு கலைக்கூடத்தில் பணிபுரியும் ஆதி (அமிதாஷ் பிரதான்) என்ற இளைஞனின் கதையாகும். பழங்கால சிலைகள் கடத்தல் மாஃபியாவைச் சுற்றி சுழல்கிறது. தன் தங்கையின் உயிரை காப்பாற்ற பணம் தேவைப்படும் ஆதி (அமிதாஷ் பிரதான்), ஒரு திருட்டின் போது கொலை செய்யப்பட்ட ஒருவரின் கைவசம் உள்ள பழங்கால சிலையிலிருந்து பணம் சம்பாதித்து வாழ்க்கையில் செட்டில் ஆக நினைக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மைத்ரேயனிடம் (சரத் குமார்) மாட்டிக் கொள்கிறார். வழக்கமான போலீஸின் மிரட்டலான விசாரணையில் ஆதிக்கும் அதன் சிலை கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இருப்பதை அறிந்து கொள்கிறார். தன்னுடைய சூழ்ச்சி வலையில் ஆதியை விழ வைக்கிறார் இன்ஸ்பெக்டர் மைத்ரேயன். தங்கையின் சிகிச்சைக்கு பணத்தேவையில் தவிக்கும் ஆதி, பணத்துக்காக சட்டவிரோத வியாபாரத்தில் மைத்ரேயனுடன் கூட்டு சேர முடிவு செய்கிறார். பழங்கால பொக்கிஷமாக கருதப்படும் புத்தர் சிலையை விற்க உதவுகிறார். இருவரும் சிலை வியாபாரத்தில் ஈடுபடும் போது அவர்கள் நினைப்பது போல் அது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை. இவர்கள் இருவருக்கு இடையே நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களின் கோர்வையில் பல எதிர்பாராத திருப்பங்களுடன் கதை செல்கிறது.
தற்போது பொழுதுபோக்கின் காலம் மாறி வருகிறது. இனி ஹீரோ, வில்லன் என்று யாரும் இல்லை. நேரம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றத்துடன், ரசிகர்கள் இப்போது ஒரு புதிய கதையை எதிர்நோக்குகிறார்கள், குறிப்பாக இருண்ட பக்கத்துடன் எதிர்மறையான சாயலில் இருக்கும் சில தமிழ்த் திரைப்படங்களில் வரும் கதாபாத்திரத்தின் நடிப்பைப் பார்த்து மக்கள் பாராட்டுகிறார்கள். அந்த வகையில் இந்த திரைப்படத்தில் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக இல்லாமல் சற்று மாறுபட்ட கிரே ஷேட் போலீஸ் வேடத்தில் ஸ்டைலிஷ்சாக சரத்குமார் அசால்டா நடித்து தள்ளியுள்ளார்.
அமிதாஷ் கட்டுப்படுத்தப்பட்ட நடிப்பு திறனுடன் சரத்குமாரின்; மைத்ரேயன் கதாபாத்திரத்துடன் ஈடுகொடுத்து ஆதி கதாபாத்திரத்தில் கச்சிதமாக பெருந்தியுள்ளார்.மேலும் சண்டை மற்றும் காதல் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார்.
கதாநாயகியாக காஷ்மீரா பர்தேசி, நடிகரும், இயக்குநருமான‌ பாலாஜி சக்திவேல், வின்சன்ட் அசோகன், சார்லஸ் வினோத், டி.சிவா, கஜராஜ், பாலகிருஷ்ணன், பவா செல்லதுரை, ரவி வெங்கட், ஸ்வாதிகா, செந்தில் குமரன் உட்பட அனைவரும் கண்ணியமான வேலையைச் செய்து விறுவிறுப்பான திரைக்கதைக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளனர்.
மதன் கார்க்கி, சினேகன், விவேக் ஆகியோரின் பாடல் வரிகளுக்கு யுவன் சங்கர் ராஜாவின் இசை, மற்றும் பின்னணி இசை தனித்து நிற்கிறது மற்றும் ரசிக்க வைக்கிறது.
ஒளிப்பதிவாளர் எஸ்.பாண்டிகுமாரின் கேமரா கோணங்களும், வண்ணங்களும், எடிட்டர் நாகூரன் ராமச்சந்திரன் படத்தொகுப்பும் கதையோடு ஒன்ற வைக்க முக்கிய பங்கு வகிக்கிறது.
தினேஷ் சுப்பராயன் சண்டை காட்சிகள், சதீஷ் கிருஷ்ணன் நடனம், ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா ராமசாமி, மற்றும் கலை இயக்குனர் குமார் கங்கப்பன் ஆகியோரின் சிறப்பான பங்களிப்பு கவனம் பெற்று ஈர்க்க கூடியதாக அமைந்துள்ளது.
சிலைக் கடத்தல் குற்றங்கள் பின்னணியில் கடந்து செல்லும் போது பழிவாங்கும் பாதையை வெவ்வேறு ஆழங்களை அடிப்படையாகக் கொண்டு யூகிக்க முடியாத திரைக்கதை அமைத்து படைத்துள்ளார் அறிமுக இயக்குநர் சி.அரவிந்த் ராஜ்.
மொத்தத்தில் கவி கிரியேஷன்ஸ் சார்பில் மனோஜ் மற்றும் கிரிஷ் தயாரித்துள்ள பரம்பொருள் திரையரங்குகளில் பார்க்க வேண்டிய அதிரடி திருப்பம் கொண்ட ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர்.