பத்து தல திரைப்பட விமர்சனம் : பத்து தல சிம்பு ரசிகர்களுக்கு மாஸான ஆக்ஷன் விருந்து | ரேட்டிங்: 3.75/5

0
1087

பத்து தல திரைப்பட விமர்சனம் : பத்து தல சிம்பு ரசிகர்களுக்கு மாஸான ஆக்ஷன் விருந்து | ரேட்டிங்: 3.75/5

ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா மற்றும் பென் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள பத்து தல படத்தில் சிலம்பரசன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், டீஜே அருணாசலம், கலையரசன், சௌந்தர், ரெடின் கிங்ஸ்லி, அனு சிதாரா, சந்தோஷ் பிரதாப், மனுஷ்யபுத்திரன், சென்ராயன், மது குருசாமி ஆகியோர் நடித்துள்ளனர்.
சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை போன்ற படங்களை இயக்கிய இயக்குனர்  கிருஷ்ணா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மக்கள் தொடர்பு டி.ஒன்

தமிழகத்தை ஆளும் கட்சிக்குள் பரபரப்பான அரசியல் சண்டைக்கு மத்தியில்  தடுப்பூசி நலத்திட்டத்தை அறிவிப்பு நிகழ்ச்சியில் முதல்வர் அருண்மொழிக்கும் (சந்தோஷ் பிரதாப்), ஆட்சியை கவிழ்க்கும் அளவுக்கு செல்வாக்கு பெற்ற துணை முதல்வர் நாஞ்சிலார் குணசேகரனுக்கும் (கௌதம் வாசுதேவ் மேனன்) பனிப்போர் நடந்து வருகிறது.  துணை முதல்வர் நாஞ்சிலார் நிகழ்வுக்கு தாமதமாக வந்தாலும் அருண்மொழியை ஆதரிக்கிறார். பின்னர் தடுப்பூசி நலத்திட்டத்தை தொடங்கி விட்டு செல்கிறார். அன்றிரவு துணை முதல்வர்இ முதல்வர் அருண்மொழி தனக்கு முதல்வர் சொன்ன படி சேர வேண்டிய பங்கு கிடைக்காததால் முதல்வரை துணை முதல்வர் நாஞ்சிலார் மிரட்டுகிறார். அவருடைய பங்கு விடிவதற்குள் துணை முதல்வருக்கு வந்து சேரும் என்று கூறி விட்டு பாதுகாப்பின்றி இரவில் வெளியே செல்கிறார். அப்போது முதல்வர் அருண்மொழி கடத்தப்படுகிறார்.

இதற்கிடையில், கன்னியாகுமரியில் உள்ள ஏ.ஜி.ஆர்.(சிலம்பரசன்) என்கிற ஏ.ஜி ராவணன் ஒரு சக்திவாய்ந்த பிரபல சுரங்க மாஃபியா தலைவன் காவல்துறை மற்றும் அரசாங்கத்தை தனது கைகளில் வைத்திருக்கிறார். மேலும் அனைவரும் ஏஜிஆர் தான் இந்த கடத்தலுக்கு காரணம் என்று ஒரு புறம் சந்தேகிக்கும் நிலையில் இந்த சம்பவம் அப்படியே ஒரு வருடத்தில் இந்த வழக்கு பற்றிய பேச்சு காணாமல் போகிறது. ஆனால் உண்மையைக் கண்டுபிடிப்பதில் சிபிஐ பிடிவாதமாக இருக்கிறது. முதல்வரை தேடும் எல்லா முயற்சிகளும் வீணாக முடிவதால், ஹைதராபாத்தில் ஏஜிஆரின் கும்பல் ஒன்றில் பணிபுரியும் அண்டர்கவர் போலீஸ்காரரான சக்திவேல் (கவுதம் கார்த்திக்) தமிழக முதல்வர் (சந்தோஷ் பிரதாப்) மாயமானது குறித்து கண்டுபிடிக்க கும்பல் தலைவரின் நம்பிக்கையை வென்று கன்னியாகுமரியில் உள்ள ஏஜிஆரின் உள் வட்டங்களில் பணிபுரிய அனுப்பப்படுகிறார். அதே நேரத்தில் முதல்வர் காணாமல் போனதில் நாஞ்சிலாரின் கை இருப்பதாக கட்சிக்குள் பெரும்பாலானோர் சந்தேகிக்கின்றனர், இது நாஞ்சிலாருக்கு ஏஜிஆர் மீதான அவரது கோபத்தை மேலும் கூட்டுகிறது.

ஆனால், முதல்வர் மாயமானதற்கு கேங்ஸ்டர் ஏ.ஜி.ஆர்.(சிலம்பரசன்) தான் காரணம் என நினைக்கிறார் சக்திவேல். அதேபோல் தன்னுடைய அரசியல் வளர்ச்சியில்  குருக்கிடும் ஏ.ஜி.ஆர். மீது நாஞ்சிலாருக்கு கோபமும் வெறுப்பும் இருந்து வருகிறது. ஏஜிஆரை எந்த வகையிலும் அழிக்க வேண்டும் என்பதில் உறுதியாகவும் இருக்கிறார். மணல் பிசினஸில் பெரிய ஆளாக இருக்கும் ஏ.ஜி.ஆருக்கு எதிராக ஆதாரம் சேகரிக்க கஷ்டப்படுகிறார் சக்திவேல். ஏ.ஜி.ஆரின் நம்பிக்கைக்கு பாத்திரமான ஆளாக மாற சக்திவேல் உழைத்துக் கொண்டிருக்கும் போது தான் சக்திவேலுக்கு ஏ.ஜி.ஆர் பற்றிய சில அதிர்ச்சிகரமான உண்மைகள் எல்லாம் தெரிய வந்து உறைந்து போகிறார். அதன் பின் என்ன நடக்கிறது? சக்திவேல் தனது பணியில் வெற்றி பெற்றாரா? நாஞ்சிலார் எண்ணம் நிறைவேறியதா? ஏ.ஜி.ஆர். கைது செய்யப்பட்டாரா? என்பதை அறிய விரிவான கதையை திரையில் காண்க.

முதல் பாதியின் கடைசி ஐந்து நிமிடங்களில் சிலம்பரசன் டி.ஆர். பிரமாண்டமாக நுழைகிறார். சிலம்பரசன் டி.ஆர்.இ மாஃபியா தலைவன் ஏ.ஜி.ஆராக, திரைப்படத்தின் இரண்டாம் பாதியிலேயே பெரும் பிரவேசம் செய்கிறார். சால்ட் அண்ட் பெப்பர் தாடி வைத்த தோற்றத்தில், முழுக்க முழுக்க கறுப்பு கலர் வேட்டி சட்டை உடையில், ஒரு மாநிலத்தின் முதல்வர் யார் அமர முடியும் என்கிற சக்தி வாய்ந்த கதாபாத்திரமாக கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். அவர் தாடி தோற்றம், ஸ்டைலான பாத்திரத்திரத்தில் மிகவும் இயல்பாகவும், கம்பீரமாகவும் அதே நேரத்தில் சண்டை காட்சிகளில் தூள் கிளப்பி சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனது ரசிகர்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்துள்ளார். ஹாட்ஸ் அப் சிம்பு.

கவுதம் கார்த்திக்குக்கு கேரியரில் பேசப்படும் சிறந்த கதாபாத்திரம் கிடைத்திருப்பது நிஜம். இந்தப் படத்தில் நடிப்புக்கான ஸ்கோப் கௌதம் கார்த்திக்கிற்கு அதிகமாகவே இருக்கிறது. சிம்பு போன்ற சீனியர் நடிகருடன் கைகோர்த்து அதை அற்புதமாக வெளிப்படுத்தி அனைவரையும் ஈர்க்கிறார். மேலும் ஸ்டண்ட் காட்சிகளில் கௌதம் கார்த்தியின் சிறப்பான மற்றும் கடின உழைப்பு வேறலெவல். இவர் இன்னும் பல உயரங்களைத் தொடுவார் என்பது நிஜம்.

முக்கிய எதிரியாக, கௌதம் வாசுதேவ் மேனன் கதாபாத்திரம். ஆனால் அந்த கதாபாத்திரத்தை சரியாக பதிவு செய்யத் தவறி விட்டார்.

லீலா தாம்சனாக பிரியா பவானி சங்கர் மையக் கதைக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறார்.

சயீஷா டான்ஸ் ஆடுவதில் வல்லவர். குத்துப் பாடல் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார் சயீஷா. அவர் ஆடிய பார் டான்ஸ், ரசிகர்கள் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருப்பார்கள்.

ஏஜிஆரின் உதவியாளராக டீஜே அருணாசலம், அனு சிதாரா, கலையரசன், சந்தோஷ் பிரதாப், ரெடின் கிங்ஸ்லி, மனுஷ்யபுத்திரன், சென்ராயன், சௌந்தர், மது குருசாமி ஆகியோருக்கு தேவைக்கேற்ற நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் ஈர்க்கும் நல்ல பாத்திரம் கிடைத்துள்ளது.

ஃபாருக் பாஷா ஒளிப்பதிவும்இ ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மற்றும் பின்னணி இசையும் இணைந்து ஒரு சுவாரஸ்யமான கேங்ஸ்டர் படத்தை மேலும் மேம்படுத்துகிறது.

ஆக்ஷன் காட்சி, படத்தின் சிறப்பம்சமான தருணங்களில் ஒன்றாகும்.

பிரபலமான கன்னடத் திரைப்படமான முஃப்தியின் தமிழ்ப் பதிப்பு ஒபேலி என் கிருஷ்ணாவின் பத்து தல ஆகும். அசல் திரைப்படத்தைப் போலவே, பத்து தலவின் இரண்டாம் பாதியில் திருப்பங்கள் முதன்மையாகக் காணப்படுகிறது. அன்டர் கவர் ஆஃபீசரின் வழியாக கேங்க்ஸ்டர் ஒருவரின் வாழ்க்கையை ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்து எதிர்பாராத திருப்பங்களுடன் கதை இறுக்கமடைய தொடங்குகிறது. படத்தின் திரைக்கதையில் பல்வேறு மாற்றங்களை அரங்கேற்றி கதையை முன்னோக்கி எடுத்துச் சென்று சுவாரஸ்யமாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஒபிலி.என்.கிருஷ்ணா.

மொத்தத்தில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா மற்றும் பென் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள பத்து தல சிம்பு ரசிகர்களுக்கு மாஸான ஆக்ஷன் விருந்து.