பணி சினிமா விமர்சனம் : பணி அனைத்து வகை பார்வையாளர்களை சீட் நுனியில் அமர வைக்கும் அதிரடி ஆக்ஷன் த்ரில்லர் | ரேட்டிங்: 3.5/5
நடிகர்கள் :
கிரி – ஜோஜு ஜார்ஜ்
கௌரி – அபிநயா ஆனந்த்
டான் செபாஸ்டியன் – சாகர் சூர்யா
சிஜு கே. டி. – ஜுனாயஸ் வி.பி.
மங்கலாத் தேவகி அம்மா – சீமா ஐ வி சசி
குருவில்லா – பிரசாந்த் அலெக்சாண்டர்
சஜி – சுஜித் சங்கர்
தேவி அந்தோணி – பாபி குரியன்
ரஞ்சித் வேலாயுதன் – ரஞ்சித் வேலாயுதன்
கல்யாணி பிரகாஷ் – சாந்தினி ஸ்ரீதரன்
லயா – அபாயா ஹிரண்மயி
கார்த்திகா – சோனா மரியா ஆபிரகாம்
லட்சுமி – லங்கா லக்ஷ்மி
சுலோச்சனன் – பிரிட்டோ டேவிஸ்
செபாஸ்டியன் – ஜெயசங்கர்
பலேட்டன் – அஷ்ரப் மல்லிசேரி
சினேகா – டாக்டர் மெர்லட் ஆன் தாமஸ்
தொழில்நுட்ப கலைஞர்கள் :
தயாரிப்பு நிறுவனம் – அப்பு பது பப்பு, ஸ்ரீ கோகுலம் மூவிஸ், அட்ஸ் ஸ்டுடியோஸ்
எழுத்து – இயக்கம் – ஜோஜு ஜார்ஜ்
தயாரிப்பாளர்கள் – எம் ரியாஸ் ஆடம் ரூ சிஜோ வடக்கன்
ஒளிப்பதிவு – வேணு – ஜின்டோ ஜார்ஜ்
இசை – விஷ்ணு விஜய் – சாம் சி எஸ்
ஒலி வடிவமைப்பு – அஜயன் அடாட்
தயாரிப்பு வடிவமைப்பு – சந்தோஷ் ராமன்
படத்தொகுப்பு – மனு ஆண்டனி
மக்கள் தொடர்பு – யுவராஜ்
கிரி (ஜோஜு ஜார்ஜ்) மற்றும் அவரது உதவியாளர்கள் (பிரசாந்த் அலெக்சாண்டர், பாபி குரியன், சுஜித் சங்கர்) கிரிமினல் ட்ராக் ரெக்கார்டுகளை கொண்ட இரண்டு இளைஞர்கள் (சாகர் சூர்யா, ஜூனைஸ் வி.பி) நான்கு தாதாக்களை சீண்ட , அவர்கள் இந்த இருவரையும் எப்படி பழிவாங்குகிறார்கள் என்பதும் கதையின் மையக் கருவை சுற்றியே கதை சுழல்கிறது.
மங்கலத் கிரி, திருச்சூர் நகரத்துடன் நிறைய தொடர்பு கொண்ட தொழிலதிபர். திருச்சூரை கிரி மற்றும் அவரது குடும்பத்தின் மங்களத் குழு ஆட்சி செய்கிறது. கிரிக்கு குருவிலா, டேவி மற்றும் கிரியின் உறவினர் சஜி கேரள வர்மா கல்லூரியைச் சேர்ந்த மூன்று நண்பர்கள். கிரி தன் காதல் மனைவி கௌரியுடன் (அபிநயா) மகிழ்ச்சியாக வாழ்கிறார். இந்நிலையில், திருச்சூரில் உள்ள அனைவரும் அன்புடனும், மரியாதையுடனும், பயத்துடனும் கருதிய கிரியின் ராஜ்ஜியத்திற்கு எதிர்பாராத இரண்டு இளைஞர்கள் (சாகர் சூர்யா, ஜூனைஸ் வி.பி) வருகின்றனர். பட்டறையில் மெக்கானிக்குகளாக இருக்கும் டான் செபாஸ்டியன் (சாகர் சூர்யா) மற்றும் சிஜு (ஜூனைஸ் வி.பி) நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையால் முதல்முறை கூலிப்படையாக மாறி பட்டப்பகலில் ஜன நடமாட்டம் உள்ள திருச்சூர் நகரின் மையப்பகுதியில் ஒருவரைத் திட்டமிட்டு கொலை செய்கிறார்கள். திருச்சூர் நகரை பட்டப்பகலில் உலுக்கிய இந்த கொலை சம்பவத்தை தொடர்ந்து ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோரில் கிரியின் மனைவி கௌரியிடம் சீண்டலில் ஈடுபட கிரியிடம் அடி வாங்குகிறார்கள். அந்த அவமானத்தால் கிரியையும் அவனது குடும்பத்தையும் பழிவாங்க ஆரம்பிக்கிறார்கள். அதில் கிரியின் மனைவியை அவரது வீட்டில் மானபங்கம் செய்கின்றனர். ஆத்திரம் அடைந்த கிரி மன்னிக்க முடியாத குற்றத்தை செய்த இவர்களை கொல்ல முயற்சிக்கும் போது கொலையாளிகள் கிரிக்கு மேலும் பல இழப்புகளை ஏற்படுத்துகிறார்கள். அந்த இரண்டு இளைஞர்களை கிரி எப்படி பழிவாங்கினார் என்பதே படத்தின் மீதிக்கதை.
கிரியாக ஜோஜு ஜார்ஜ், கௌரியாக அபிநயா ஆனந்த் அழுத்தமான நடிப்பை வழங்கியுள்ளனர்.
டான் செபாஸ்டியன் – சாகர் சூர்யா மற்றும் சிஜு கே. டி. யாக ஜுனாயஸ் வி.பி. மெக்கானிக்குகளாக வலம் வந்து கொலை வெறி பிடித்த வில்லன்களாக படம் முழுக்க இருவரும் அசத்தியுள்ளனர்.
மற்றும் சீமா ஐ வி சசி, பிரசாந்த் அலெக்சாண்டர், சுஜித் சங்கர், பாபி குரியன், ரஞ்சித் வேலாயுதன், சாந்தினி ஸ்ரீதரன், அபாயா ஹிரண்மயி, சோனா மரியா ஆபிரகாம், லங்கா லக்ஷ்மி, பிரிட்டோ டேவிஸ், ஜெயசங்கர், அஷ்ரப் மல்லிசேரி, டாக்டர் மெர்லட் ஆன் தாமஸ் உட்பட அனைவரும் நேர்த்தியான நடிப்பை வழங்கி உள்ளனர்.
வேணு மற்றும் ஜின்டோ ஜார்ஜ் ஆகியோரின் ஒளிப்பதிவு திருச்சூர் நகரத்தின் நுணுக்கங்களும் நகர வாழ்க்கையும், ஆக்ஷன் காட்சிகளையும் சிறப்பாக படம் பிடித்துள்ளனர்.
மனு ஆண்டனியின் படத்தொகுப்பும் இந்தப் படத்தில் தனித்து நிற்கிறது. விஷ்ணு விஜய் மற்றும் சாம் சி எஸ் ஆகியோரின் பிஜிஎம், ஆக்ஷன் காட்சிகள் மற்றும் படத்தில் வரும் கார் சேஸிங் காட்சிகள் படம் முழுமையடைய உதவியுள்ளன.
ஜோஜு ஜார்ஜ் ஒரு ஈர்க்கக்கூடிய கதைக்கு தேவையான ஆக்ஷன், காதல், வன்முறை, நகைச்சுவை, குடும்ப நாடகம், உணர்ச்சிகள், நட்பு ஆகிய அனைத்து கூறுகளையும் வலுவான திரைக்கதை அமைத்து மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்புடன் பார்வையாளர்களை கவரும் விதத்தில் இயக்கியுள்ளார்.
மொத்தத்தில் அப்பு பது பப்பு, ஸ்ரீ கோகுலம் மூவிஸ், அட்ஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள பணி அனைத்து வகை பார்வையாளர்களை சீட் நுனியில் அமர வைக்கும் அதிரடி ஆக்ஷன் த்ரில்லர்.