படை தலைவன் சினிமா விமர்சனம் : படை தலைவன் கம்பீரம் துளிகூட இல்லை | ரேட்டிங்: 2.5/5
நடிகர்கள் : சண்முக பாண்டியன் விஜயகாந்த், கஸ்தூரி ராஜா, யாமினி சந்தர், முனிஷ்காந்த், கருடன் ராம், ரிஷி, ஏ.வெங்கடேஷ், யுகி சேது, ஸ்ரீஜித் ரவி, அருள் தாஸ், லோகு என்பிகேஎஸ்
தொழில்நுட்ப கலைஞர்கள் :
எழுத்து மற்றும் இயக்கம் : யு.அன்பு
தயாரிப்பு : ஜெகநாதன் பரமசிவம்
திரையரங்கம் வெளியீடு : கேப்டன் சினி கிரியேஷன்ஸ்;
இசை : இளையராஜா
வசனம் மற்றும் திரைக்கதை : பார்த்திபன் தேசிங்கு
ஒளிப்பதிவு : எஸ்.ஆர்.சதீஷ் குமார்
எடிட்டிங் : எஸ்.பி.அஹமது
கலை இயக்குனர் : பி. ராஜு, சண்முகம்
சண்டைக்காட்சி : மகேஷ் மேத்யூ
தயாரிப்பு நிர்வாகி : வி.முத்துகுமார்
விஷுவல் எஃபெக்ட்ஸ் : சுனில்
ஒலி வடிவமைப்பு : ஏ.சதீஷ் குமார்
மிக்சிங் : ஆனந்த் ராமச்சந்திரன், கே.ஜெகன்
ஆடை வடிவமைப்பு : என்.லோகநாதன்
ஸ்டில்ஸ் : சக்தி பிரியன்
மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)
பொள்ளாச்சி அருகே உள்ள சேத்துமடை கிராமத்தில் குயவன் தந்தை (கஸ்தூரி ராஜா), மகன் வேலு (சண்முக பாண்டியன்), மகளுடன் வசித்து வருகிறார். கூடவே 25 வருடமாக வளர்ந்து வரும் மணியன் என்ற யானையை தங்கள் வீட்டில் ஒருவராகப் பார்க்கிறார்கள். அந்த யானை, சண்முக பாண்டியனிடம் மிகுந்த பாசமாய் உள்ளது. இந்த நிலையில் அதே ஊரை சேர்ந்த லோகு, கஸ்தூரிராஜா வாங்கிய கடனுக்காக அவமானப்படுத்துகிறார். இதனால் அவரது கடனை அடைப்பதற்காக சண்முக பாண்டியன் நண்பர்கள் உதவியுடன் மணியனை வைத்து பணம் சம்பாதிக்க நினைக்கிறார். லோகுவின் சூழ்ச்சியால் ஒரு பெரிய சிக்கலில் அந்த மணியன் மாட்டிக் கொண்டு, வனத்துறையிடம் ஒப்படைக்கப்படுகிறது. வனத்துறையினரால் அங்கு மணியன் துன்புதுத்தப்படுகிறான். ஒரு கட்டத்தில் மணியனை ஒரு கும்பல் கடத்திச் சென்று விடுகிறது. அதைக் கண்டுபிடிக்க வேலு அவர் நண்பர்களுடன் செல்கிறான். அதன் பிறகு என்ன நடந்தது? அந்த யானை மணியனை ஏன் கடத்தினார்கள்? அதைக் கண்டு பிடிக்கச் செல்லும் வழியில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன, யானை மணியனை வேலு மீட்டாரா? என்பதே மீதிக்கதை.
படத்தின் நாயகன் சண்முக பாண்டியன் விஜயகாந்த், உயரமும் கட்டுமஸ்தான உடல் அமைப்பும் ஆக்ஷன் காட்சிகளில் உயர்ந்து நிற்கிறார். நடிப்பில் அவரது முகபாவனைகள், இன்னும் நடிப்பு பயிற்சி தேவை.
வேலுவின் தந்தையாகவும் தனது செல்ல பிள்ளை போல பாவித்து வளர்த்து வந்த யானைக்காக உருகுபவராகவும், அதை பறிகொடுத்து விட்டு கதறும் காட்சிகளிலும் கஸ்தூரி ராஜா நேர்த்தியாக நடித்திருக்கிறார்.
அழகிய நாயகி யாமினி சந்தரின் கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் மெருகேற்றி அவரை சரியாக பயன்படுத்தி இருக்கலாம்.
வில்லனாக வரும் கருடன் ராம், வழக்கம் போல மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
முனிஷ்காந்த், கருடன் ராம், ரிஷி, ஏ.வெங்கடேஷ், யுகி சேது, ஸ்ரீஜித் ரவி, அருள் தாஸ், லோகு என்பிகேஎஸ் ஆகியோர் கொடுத்த வேலையை குறை இல்லாமல் செய்திருக்கிறார்கள்.
விஜயகாந்த் ரெபரன்ஸ் அருமை. ஆனால் ஏ ஐ தொழில்நுட்பத்தில் இடம்பெறும் அவரது காட்சிகள் ஏமாற்றமளிக்கிறது. திரைக்கதைக்கு எந்த விதத்திலும் உதவ வில்லை.
இளையராஜாவின் இசை மற்றும் பின்னணி இசை ஏமாற்றம் அளிக்கிறது. படத்தை உண்மையில் இளையராஜா தான் இசையமைத்தாரா என்கிற சந்தேகம் ஏற்படுகிறது.
ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.சதீஷ் குமார் பொள்ளாச்சியும் அடர்ந்த ஒடிசா மலைக்காடும் அழகாகப் காட்சிப்படுத்தியதுடன் க்ளைமேக்க்ஸில் அடர்ந்த காடுகளில் நடக்கும் சண்டைக் காட்சிகளில் அவரது உழைப்பு வெளிப்படையாக தெரிகிறது.
படத்தொகுப்பாளர் எஸ்.பி.அஹமது எடிட்டிங்கில் விறுவிறுப்பை கூட்டி இருக்கலாம்.
கலை இயக்குனர் பி. ராஜு, சண்முகம் மற்றும் அசத்தலான சண்டைக்காட்சி அமைத்த மகேஷ் மேத்யூ இருவரின் கடின உழைப்பு திரையில் நன்றாக பிரதிபலிக்கிறது.
நாயகனுக்கும் யானைக்கும் இடையிலான பிணைப்பை மையமாகக் கொண்டு வெளிவந்த பல தமிழ் படங்களில், படை தலைவனும் ஒன்று. புதுமையான கூறுகளை அறிமுகப்படுத்தினாலும், யானைக்கும் ஹீரோவுக்கும் இடையிலான ஆத்மார்த்த உறவை திரைக்கதை சரியாக விளக்க வில்லை, இதனால் அது சுவாரஸ்யமற்றதாக இருக்கிறது. படம் இரண்டு தனித்தனி பகுதிகளாக பிரிந்து, இரண்டாம் பாதி கதையை ஒடிஷாவில் உள்ள மலைக் காட்டுக்குச் நகர்த்தி, இங்கு காட்டில் அராஜகம் செய்யும் வில்லன்களோடு மல்லுக்கட்டுவது என்று திரைக்கதை அமைத்து இயக்கி உள்ளார் யு.அன்பு. இயக்குனர் யானைக்கும், சண்முக பாண்டியனுக்கும் உள்ள பிணைப்பை திரைக்கதையில் வலியுறுத்தும் வகையில் அழுத்தமாக எழுதி காட்சி படுத்தியிருக்கலாம்.
மொத்தத்தில் ஜெகநாதன் பரமசிவம் தயாரித்து கேப்டன் சினி கிரியேஷன்ஸ்; வெளியிட்டிருக்கும் படை தலைவன் கம்பீரம் துளிகூட இல்லை.