நோக்க நோக்க விமர்சனம்: நோக்க நோக்க பழிபாவங்களை அழிக்க புறப்படும் வேல் | ரேட்டிங்: 2/5
ஆர் புரொடக்சன்ஸ், ஏவிபி சினிமாஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரித்து அர்ஜூன் சுந்தரம், கஞ்சா கருப்பு, ஜாக்குவார் தங்கம், பாவனா, சிந்தியா, ஜோதிராய், மணிமேகலை, சுரேஷ் அபி, பேபி அமுல்யா, பேபி ஜனன்யா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
பத்மினி கதையில் சிவசு வசனத்தில் ஆர். முத்துக்குமார் திரைக்கதை எழுதி இயக்கியுள்ள படம் நோக்க நோக்க.ஒளிப்பதிவு – விஜய் முத்துசாமி, இசை – ஆல்டிரின், படத் தொகுப்பு – அரவிந்த், சண்டை-பவர் புஷ்பராஜ், இணை தயாரிப்பு – வெங்கட்ராமன், பிஆரிஒ-கணேஷ்குமார்.
இந்தியாவில் பண மதிப்பிழப்பு திட்டத்தை அறிவித்த நேரத்தில் பணக்காரர்கள் எளிதாக பணமாற்றுதலை செய்ய, ஏழை எளிய மக்கள் வங்கிகளின் வெளியே வரிசையாக வீதியில் நின்று அவதிப்படுவதையும், அதன் பின்னணியில் நடந்த சட்ட விரோத பண மாற்றுதலை தொலைக்காட்சியில் பணியாற்றும் நேர்மையான நிருபரான ஜோதிராய் ஆவணமாக்குகிறார். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில்; இருப்பவர்கள் இந்த ஆவணப் படத்தில் இருப்பதை அறிந்து அது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முன்பேயே சில சமூக விரோதிகளால் அந்த பெண் நிரூபரையும் அவளது பெண் குழந்தையையும் படுகொலை செய்து விடுகின்றனர்.தொலைந்து போன செல்போன் வழியே அதைத் தெரிந்து கொண்ட அர்ஜுன் சுந்தரம் குற்றவாளிகளிடம் பேரம் பேசி பல கோடி லஞ்சம் பெற்று காதலியோடு ( சிந்தியா) சுகமாக வாழ்கிறான். அந்த பெண் குழந்தை எப்படி இவர்களையும், கொலை செய்த கயவர்களையும் பேயாக உருமாறி பழி வாங்குகிறாள்? கடவுள் அவளுக்கு எப்படி உதவுகிறார்? என்பதுதான் இந்தப் படத்தின் மீதிக்கதை.
அர்ஜூன் சுந்தரம், கஞ்சா கருப்பு, ஜாக்குவார் தங்கம், பாவனா, சிந்தியா, ஜோதிராய், மணிமேகலை, சுரேஷ் அபி, பேபி அமுல்யா, பேபி ஜனன்யா, மக்கள் தொடர்பாளர் கணேஷ்குமார் சிறப்பு தோற்றத்தில் மற்றும் பலர் படத்தில் முக்கிய பங்களிப்பை கொடுத்துள்ளனர்.
ஒளிப்பதிவு – விஜய் முத்துசாமி, இசை – ஆல்டிரின், படத் தொகுப்பு – அரவிந்த் ஆகிய மூவரும் சேர்ந்து படத்தின் காட்சிகளில் நம்பகத்தன்மையோடு காட்டிள்ளனர்.
பணமதிபிழப்பு, கொலை, காதல், பேய், கந்தசஷ்டி கவசத்தை தவறாக சித்தரிப்பவர்களை கடவுள் பழி வாங்கும் திகில், மர்மங்கள் நிறைந்த படத்தின் திரைக்கதையை எழுதி இயக்கியிருக்கிறார் ஆர்.முத்துகுமார். சிலர் தவிர அறிமுக நடிகர்கள், வசன உச்சரிப்புகள், நகைச்சுவை ஆகியவற்றில் கவனம் செலுத்தியிருக்கலாம்.
மொத்தத்தில் ஆர் புரொடக்சன்ஸ், ஏவிபி சினிமாஸ் நிறுவனங்கள் தயாரிப்பில் நோக்க நோக்க பழிபாவங்களை அழிக்க புறப்படும் வேல்.