நேற்று இந்த நேரம் சினிமா விமர்சனம் : நேற்று இந்த நேரம் அழுத்தம் குறைவான மர்மத் திரில்லர் | ரேட்டிங்: 2.5/5

0
161

நேற்று இந்த நேரம் சினிமா விமர்சனம் : நேற்று இந்த நேரம் அழுத்தம் குறைவான மர்மத் திரில்லர் | ரேட்டிங்: 2.5/5

நடிகர்கள்: ஷாரிக் ஹாசன், ஹரிதா, மோனிகா ரமேஷ், காவ்யா அமைரா, திவாகர் குமார், நிதின் ஆதித்யா, ஆனந்த், அரவிந்த், செல்வா, பாலா மற்றும் பலர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:
எழுதி இயக்கியவர் : சாய் ரோஷன்
இசை : கெவின்
பின்னணி ஸ்கோர் : கெவின்
ஒளிப்பதிவு : விஷால்
எடிட்டர் : கோவிந்த்
சண்டை : ஓம் பிரகாஷ்
பாடகர்கள் : ஜிவி பிரகாஷ் குமார், அறிவு, ஆதித்யா ஆர்கே, ரவி ஜி, பால் பி சைலஸ், கெவின், ரேஷ்மா ஷியாம், பிருத்வி
பாடல் வரிகள் : பிரபாகரன் அமுதன், பால் பி சைலஸ், பிருத்வீ, கெவின், நவீன் குமார், சாய் ரோஷன், ஆனந்த்
நிர்வாகத் தயாரிப்பாளர்: லால்குடி ஹரிஹரன்
ஒலி வடிவமைப்பு: லால்குடி எம் ஹரிஹரன்
தயாரிப்பு நிறுவனம்: கிளாபின் ஃபிலிமோடெயின்மென்ட்
தயாரிப்பாளர்: கே.ஆர். நவீன் குமார்
மக்கள் தொடர்பு : சதீஸ்வரன்
ஷாரிக் ஹாசன், ஹரிதாவும் காதலர்கள். அவர்கள் காதல் மூன்று ஆண்டுகள் ஆனதையொட்டி ஏழு நண்பர்கள் கொண்ட குழுவுடன் ஊட்டிக்கு சென்று விடுமுறையை கொண்டாட திட்டமிடுகின்றனர். அவர்கள் ஊட்டியில் சுற்றுலா மகிழ்ச்சியாக கொண்டாடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென அவர்களில் ஷாரிக் ஹாசன் காணாமல் போகிறார். இணையாக, ஒரு தொடர் கொலைகாரன் நகரத்தை வேட்டையாடுகிறான். தொடர்ந்து அவருடைய நண்பரும் காணாமல் போகிறார். தொடர் கொலை வழக்கை கையாளும் போலீசார், காணாமல் போனவர் குறித்து விசாரிக்க தொடங்குகின்றனர். அடுத்து என்ன நடக்கும்? காணாமல் போனவர்கள் திரும்ப கிடைத்தார்களா? அதன் மர்மம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
ஷாரிக் ஹாசன், ஹரிதா, மோனிகா ரமேஷ், காவ்யா அமைரா, திவாகர் குமார், நிதின் ஆதித்யா, ஆனந்த், அரவிந்த், செல்வா, பாலா உட்பட அனைத்து கதாபாத்திரங்களும் தங்கள் கதாபாத்திரத்தை சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த முயன்றுள்ளனர்;.
நான்- லீனியர் பாணியில் கதை சொல்லப்பட்டிருக்கும் விதம், அதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பை உருவாக்க உதவுகிறது எடிட்டர் கோவிந்தின் படத்தொகுப்பு.
ஊட்டியின் பசுமையான இயற்கை காட்சிகளை கதைக்கு தேவையான காட்சி கோணங்களில் திறம்பட படம்பிடித்துள்ளார்  ஒளிப்பதிவாளர் விஷால்.
கெவின் இசையில் பாடல்கள் ஓகே. பின்னணி ஸ்கோர் திரைக்கதை நகர்வுக்கு உதவுகிறது.
இயக்குனர் சாய் ரோஷன் கே.ஆர் போதை மற்றும் நண்பர்கள் பிரச்சனையை ஒரு விழிப்புணர்வு பாடமாக கதை சொல்வதில் எடுத்த முயற்சி மற்றும் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் ட்விஸ்ட் பாராட்டத்தக்கது. என்றாலும் நான்- லீனியரில் பயணிக்கும் திரைக்கதை சற்று அழுத்தமாக இருந்திருக்கலாம்.
மொத்தத்தில் கிளாபின் ஃபிலிமோடெயின்மென்ட் சார்பில் கே.ஆர். நவீன் குமார் தயாரிக்கும் நேற்று இந்த நேரம் அழுத்தம் குறைவான மர்மத் திரில்லர்.