நெடுநீர் திரைவிமர்சனம் : நெடுநீர் ஒரு முறை பார்க்கலாம் | ரேட்டிங்: 2/5

0
185

நெடுநீர் திரைவிமர்சனம் : நெடுநீர் ஒரு முறை பார்க்கலாம் | ரேட்டிங்: 2/5

வி.எஸ்.பாளையம், எஸ்.கிருஷ்ணமூர்த்தி தயாரிக்கும் படம் நெடுநீர். ராஜ்கிருஷ்ணன், இந்துஜா, மாகிரா சத்யா முருகன், மதுரை மோகன், எஸ்.கே.மின்னல் ராஜா, டி.கல்லேரி கே.கனகராஜ், கவுஷிக், மாணிக் சுப்ரமணியம் உள்ளிட்ட புதுமுகங்கள் நடித்துள்ளனர்
இசை: ஹிதேஷ் முருகவேல்
ஒளிப்பதிவாளர் : லெனின் சந்திரசேகரன்
ஸ்டண்ட் மாஸ்டர்: எஸ்.ஆர்.ஹரிமுருகன்
இயக்குனர்: கே கே பத்மநாபன்
மக்கள் தொடர்பு : வெங்கட்கடலின் அழகு, கடலின் ஆழம், கடலின் ஆர்ப்பரிப்பு, கடலின் மர்மம், கடலின் அமைதி, கடலின் பிரம்மாண்டம் இதுவே நெடுநீர்.
பதின் பருவ சிறுவனும், சிறுமியும் சூழலால் துரத்தப்பட்டு தமது சொந்த கிராமத்தை விட்டு வெளியேறுகின்றனர். எங்கு செல்வது எப்படி செல்வது என எந்த இலக்கின்றி பயணிக்கின்றனர். இந்த சூழலில் நள்ளிரவில் நடுவழியில் இருவரும் பிரிய நேர்கிறது. கடலூர் கடலோர கிராமம் ஒன்றில் அடிதடி, வெட்டுக்குத்து என கம்பீரமாக வலம் வருபவர் தாத்தா வயதில் இருக்கும் அந்த தாதா. பலராலும் அண்ணாச்சி என்று அழைக்கப்படும் அவர், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் கருப்பு என்ற இளைஞனுக்கு அடைக்கலம் தந்து அரவணைக்கிறார். இதற்கு நன்றிக்கடனாக ஏன் செய்கிறோம், எதற்கு செய்கிறோம் என்றெல்லாம் யோசிக்காமல், அண்ணாச்சிக்கு அத்தனை குற்றச் செயல்களில் ஈடுபடுகிறான் கருப்பு. 8 வருடங்கள் கழித்து கடலூரில் இருவரும் சந்திக்க நேர்கிறது. ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளராக உயிரைக் காப்பாற்றும் இடத்தில் அவள், உள்ளூர் தாதாவின் அடியாளாக உயிரைக் கொல்லும் இடத்தில் அவன். இனி என்ன ஆகும் என்பதுதான் படத்தின் கதை.
கதையின் நாயகனாக ராஜ்கிருஷ்ணா அப்பாவியாக வரும் அவர், அருவா தூக்கியதும், நடிப்பில் அப்படியோரு மாற்றத்தை காட்டி கைதட்டல் பெறுகிறார்.
கிராமத்துப் பெண்ணாக இந்துஜா, மாகிரா சத்யா முருகன், அண்ணாச்சியாக மதுரை மோகன், எஸ்.கே.மின்னல் ராஜா, டி.கல்லேரி கே.கனகராஜ், கவுஷிக், மாணிக் சுப்ரமணியம் என அனைவரும கிராமத்து முகங்களை ஞாபகப்படுத்தும் விதமாக அந்த பாத்திரத்திற்கு கலைஞர்களாக இயல்பான நடிப்பால் வலு சேர்த்திருக்கிறார்கள்.
இசை: ஹிதேஷ் முருகவேல் – ஓகே.
ஒளிப்பதிவாளர் : லெனின் சந்திரசேகர் – மைனஸ்.
ஸ்டண்ட் மாஸ்டர்: எஸ்.ஆர்.ஹரி முருகன் – விறுவிறுப்பு.
ஒட்டு மொத்தத்தில் தொழில்நுட்பம் சுமார் என்று தான் சொல்ல முடியும்.
“நம் கண் முன்னே கொட்டிக் கிடக்கிற மனித வாழ்க்கையில் ஒரு காதல், ஒரு சம்பவம், ஒரு பிரச்சனை, என அனைத்தையும் முன்னிலைப்படுத்தி, கடலும் கடல் சார்ந்த பகுதியில்  நடக்கும் கதையாக, இந்தக் கதையில் உயிரை காப்பாற்றும் இடத்தில் அவளும் உயிரை எடுக்கிற இடத்தில் அவனும் இருக்க தொடர்ந்து நிகழும் பரபரப்பு மிகுந்த சம்பவங்களை புகுத்தி திரைக்கதை அமைத்து விறுவிறுப்பான படமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் கே.கே.பத்மநாபன்.
மொத்தத்தில் வி.எஸ்.பாளையம், எஸ்.கிருஷ்ணமூர்த்தி தயாரிக்கும் நெடுநீர் ஒரு முறை பார்க்கலாம்.