நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் சினிமா விமர்சனம் : நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் இளம் வட்டாரங்களை வசீகரித்து இளமை துள்ளும் இனிமையான காதல் கதை | ரேட்டிங்: 4/5

0
1377

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் சினிமா விமர்சனம் : நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் இளம் வட்டாரங்களை வசீகரித்து இளமை துள்ளும் இனிமையான காதல் கதை | ரேட்டிங்: 4/5

நடிகர்கள்:- பவிஷ் நாராயண், அனிகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா பி.வாரியர், வெங்கடேஷ் மேனன், ரம்யா ரங்கநாதன், சித்தார்தா ஷங்கர், ராபியா கதூன், ஆர்.சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், ‘ஆடுகளம்’ நரேன், உதய் மகேஷ், ஸ்ரீதேவி​
படக்குழு:-
எழுத்து மற்றும் இயக்கம் : தனுஷ்
தயாரிப்பு : கஸ்தூரி ராஜா – விஜயலக்ஷ்மி கஸ்தூரி ராஜா
தயாரிப்பு நிறுவனம் : வுண்டர்பார் ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்
இசை : ஜி.வி பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு : லியான் பிரிட்டோ
படத்தொகுப்பு : பிரசன்னா ஜி.கே
கலை இயக்கம் : ஜாக்கி
நடன இயக்கம் : பாபா பாஸ்கர்
ஆடை வடிவமைப்பு : காவ்யா ஶ்ரீராம்
ஆடைகள் : நாகு
ஒப்பனை : பி ராஜா
ஒலி வடிவமைப்பு : ஸிங்க் சினிமா
தயாரிப்பு நிர்வாகி : டி. ரமேஷ் குச்சிராயர்
நிர்வாக தயாரிப்பாளர் : ஸ்ரேயாஸ் ஸ்ரீனிவாசன்
பத்திரிக்கை தொடர்பு : ரியாஸ் கே.அஹ்மத், பாரஸ் ரியாஸ்

காதலில் பிரேக்-அப் ஆகி துவண்டு போய் இருக்கும் சமையல் கலைஞரான பிரபுவுக்கு (பவிஷ் நாராயண்) ஆறுதல் சொல்லி அவருக்கு பக்கபலமாக இருக்கும் அவரது சிறந்த நண்பர் ராஜேஷ் (மேத்யூ தாமஸ்). பிரபுவின் பெற்றோர் (சரண்யா பொன்வண்ணன் மற்றும் ஆடுகளம் நரேன்) காதல் பிரேக்-அப் ஆன தங்கள் மகனுக்கு வேறு பெண்ணை திருமணம் செய்து வைக்க அவர்களுடன் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு வரும்படி கட்டாயப்படுத்துகிறார்கள். தயக்கத்துடன், செல்லும் பிரபு அங்கு தனது பள்ளித் தோழி பிரீத்தியை (ப்ரியா பிரகாஷ் வாரியர்) சந்திக்கிறார். திருமணம் குறித்து முடிவெடுப்பதற்கு முன்பு இருவரும் ஒருவரையொருவர் தெரிந்து கொள்ள ஒரு வாரம் டேட்டிங் செய்த பிறகு திருமணத்தை பற்றி முடிவு செய்யலாம் என்று பிரீத்தி சொல்ல, இருவரும் டேட்டிங் செல்கிறார்கள். பின்னர் அவர்கள் இருவரும்  தங்கள் இறுதி டேட்டிங்கிற்கு பிறகு திருமணம் செய்து கொள்ளும் தருவாயில், சில மாதங்கள் கழித்து நிலாவின் திருமண அழைப்பிதழ் பிரபுவுக்கு கிடைக்கிறது. அதை பிரீத்தியிடம் காட்டும் போது பிரீத்தி பிரபுவிடம் அவரது பிரேக்-அப் காதல் பற்றி கேட்க, பிரபு தனது பிரேக்-அப் காதலை சொல்ல தொடங்கும்போது ஃப்ளாஷ்பேக் விரிவடைகிறது. தங்கள் நெருங்கிய நண்பன் மற்றும் தோழியின் பார்ட்டியில் பிரபு, நிலாவை (அனிகா சுரேந்திரன்) சந்திக்கிறார். நிலா ஒரு சாப்பாட்டு விரும்பி. நுpலாவை பார்த்த முதல் பார்வையிலேயே பிரபு காதல் வயப்படுகிறார். பிரபுவின் சமையல் திறன் மற்றும் அரவனைப்பு நிவாவும் காதலில் விழுகிறார். பிரபுவை தனது பணக்கார தந்தையிடம் (சரத்குமார்) அறிமுகம் செய்து வைக்கிறார் நிலா. நிலாவின் தந்தைக்கு பிரபுவை சுத்தமாக பிடிக்கவில்லை என்பதால் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். நிலாவின் வர்ப்புத்தல் பேரில் சரத்குமார் பிரபுவிடம் பழகுவதற்கு கால அவகாசம் கேட்கிறார். இந்த சூழலில், நிலாவின் தந்தைக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பதாகவும், அவர் இறுதி கட்டத்தில் இருப்பதாகவும் தெரியவந்தபோது, பிரபு அமைதியாக நிலாவுடன் பிரிந்து தனது பிரிவின் கதையைச் சொல்கிறார். இந்த திருமணத்திற்கு செல்லுமாறு ப்ரீத்தி பிரபுவை கோவா அனுப்பி வைக்கிறார். அங்கு பவிஷ், மேத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன், ரபியா கட்டூன், ரம்யா ரங்கநாதன், வெங்கடேஷ் மேனன், பிரியா பிரகாஷ் வாரியர் மற்றும் சித்தார்த்த சங்கர் போன்றவர்கள் கொண்ட மிகவும் சுவாரஸ்யமான மற்றும் இளம் குழுவால் உணர்ச்சிகளும் நிச்சயமற்ற தன்மைகளும், தீர்க்கப்படாத உணர்வுகளை எதிர்கொள்ளும் போது கணிக்க முடியாத பிரேக்-அப் காதல் என்ன ஆகிறது என்பதே படத்தின் மீதிக்கதை.

காதல் பிரேக்-அப் பிரபு கதாபாத்திரத்தில் தனுஷின் சகோதரி மகனான பவிஷ் திரையில் பார்க்கும் போது தனுஷின் நகல் போலவே இருக்கிறார். நடிப்பில் அவரது உடல் மொழி, டயலாக் டெலிவரி, நடனம் என அனைத்திலும் இளம் வயது தனுஷை போலவே அசத்தி உள்ளார். நடிப்பில் இன்னும் சற்று வித்தியாசம் காட்டி தனக்கு உரிய தனி ஸ்டைல் பின்பற்றினால் நிச்சயம் தாய்மாமன் தனுஷை போலவே இத்திரையுலவில் நிலைத்து நிற்பார்.

ராஜேஷ் என்ற விசுவாசமான நண்பராக மேத்யூ தாமஸ், நகைச்சுவை சரவெடியாக பார்வையாளர்களை பரவச மூட்டுகிறார். பிரபு மற்றும் அவரது நண்பர் ராஜேஷ் (மேத்யூ தாமஸ்) இடையேயான காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார்.

அழுத்தமான கதாபாத்திரத்தில் சரத்குமாரின் அசத்தலான அனுபவ நடிப்பு, சரண்யா பொன்வண்ணன் மற்றும் ‘ஆடுகளம்’ நரேன் ஆகியோரின் அற்புதமான நடிப்புத்திறன் திரைக்கதைக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.

அனிகா சுரேந்திரன், பிரியா பி.வாரியர், வெங்கடேஷ் மேனன், ரம்யா ரங்கநாதன், சித்தார்தா ஷங்கர், ராபியா கதூன், உதய் மகேஷ், ஸ்ரீதேவி உட்பட அனைவரும் சிறப்பான நடிப்பால் தங்கள் பாத்திரங்களுக்கு உடனடி கண்ணியத்தைக் கொண்டு வருகிறார்கள், படத்தை ஒரு தென்றலான மற்றும் இதயப்பூர்வமான உணர்வோடு நகர்த்துகிறார்கள்.

ஒளிப்பதிவாளர் லியோன் பிரிட்டோவின் ஒளிப்பதிவு காட்சிகள் பிரமிக்க வைக்கின்றன, அவரது காட்சி கோணங்கள் அழகையும் கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளையும் நேர்த்தியாக படம்பிடித்துளள்து.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாரின் மெல்லிய இசை ஒட்டுமொத்த இளமை துள்ளலான பார்வை அனுபவத்தை மேம்படுத்துகின்றன. ஸிங்க் சினிமா ஒலிப்பதிவு கதைக்கு ஆழத்தையும் உணர்ச்சியையும் சேர்க்கிறது.

பன்முகத்தன்மை கொண்ட கதைசொல்லலுக்கு பெயர் பெற்ற தனுஷ், கடந்த காலத்தின் தீவிரமான, ஒற்றை எண்ணம் கொண்ட காதல் கதைகளிலிருந்து விலகி 2கே கிட்ஸ் வாழ்க்கையை ஒரு உணர்ச்சிபூர்வமான பின்னணியுடன் கூடிய புத்துணர்ச்சியூட்டும் நவீன காதலாக மாற்றியுள்ளார், ஒரு இயக்குநராக நகைச்சுவை மற்றும் யதார்த்தத்துடன் ஒரு வித்தியாசமான கதையை இளமை துளள்ளலுடன் கையாண்டு நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் 2-ம் பாகத்துக்கான லீடுடன் முடித்துள்ளார்.

மொத்தத்தில் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் கஸ்தூரி ராஜா – விஜயலக்ஷ்மி கஸ்தூரி ராஜா இணைந்து தயாரித்திருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் இளம் வட்டாரங்களை வசீகரித்து இளமை துள்ளும் இனிமையான காதல் கதை.