நிறம் மாறும் உலகில் சினிமா விமர்சனம் : நிறம் மாறும் உலகில் உறவுகளின் அவசியத்தை சொல்லும் உணர்ச்சிகரமான படம் | ரேட்டிங்: 3/5
எல் கேத்தரின் ஷோபா மற்றும் லெனின் தயாரிப்பில் சிக்னே ச்சர் புரொடக்சன்ஸ் மற்றும் ஜி.எஸ். சினிமா இன்டர்நேஷனல் இணைந்து வழங்க பெர்ஃபெக்ட் பிக்சர் ஸ்டுடியோஸ் வெளியீடும் நிறம் மாறும் உலகில்.
நடிகர்கள் :
பாரதிராஜா – ராயப்பன்
துளசி – அன்னக்கிளி
நட்டி – அப்துல் மாலிக்
ரியோ ராஜ் – அதியன்
சாண்டி – அன்பு
யோகி பாபு – நா முத்துக்குமார்
வடிவுக்கரசி – குழந்தை
ஆதிரை – பரிமளம்
கனிகா – பாத்திமா
லவ்லின் சந்திரசேகர் – அபி
ரிஷிகாந்த் – கண்ணன்
ஏகன் – ராயப்பன்
விக்னேஷ்காந்த் – பாலா
காவியா அறிவுமணி – மலர்
அய்ரா கிருஷ்ணன் – மஹி
முல்லை அரசி – குழந்தை
மைம் கோபி – மகிமை
விஜி சந்திரசேகர் – விஜி
ஆடுகளம் நரேன் – தாஸ்
சுரேஷ் மேனன் – லால் பாய்
சுரேஷ் சக்ரவர்த்தி – கண்ணபிரான்
துளசி -அம்மா
நமோ நாராயணா – மஹி அப்பா
தொழில்நுட்ப கலைஞர்கள் :
இயக்குனர் – பிரிட்டோ ஜே.பி
ஒளிப்பதிவு – மல்லிகா அர்ஜுன், மணிகண்ட ராஜா
இசை – தேவ் பிரகாஷ் ரீகன்
படத்தொகுப்பு – தமிழ் அரசன்
தயாரிப்பு – சிக்னேச்சர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜிஎஸ் சினிமா இன்டர்நேஷனல்
தயாரிப்பாளர்கள் – எல் கேத்தரின் ஷோபா மற்றும் லெனின்
வெளியீடு – பெர்ஃபெக்ட் பிக்சர் ஸ்டுடியோஸ்
மக்கள் தொடர்பு- யுவராஜ்
தன் பிறந்தநாளன்று தன் மீது கோபப்பட்டு கன்னத்தில் அறைந்த தாய் விஜியை (விஜி சந்திரசேகர்) வெறுத்து வீட்டை விட்டு வெளியேறுகிறாள் மகள் அபி (லவ்லின் சந்திரசேகர்). வெளியூரில் உள்ள தன் தோழியை சந்திக்க ரயிலில் பயணிக்கும் போது டிக்கெட் பரிசோதகர் முத்துக்குமாரை (யோகி பாபு) சந்திக்கிறார். அபியின் மனநிலையை புரிந்து அம்மா என்பவர் நம் வாழ்வில் எவ்வளவு முக்கியம் என்பதை அவருக்கு உணர்த்தும் வகையில் முத்துக்குமார் அபிக்கு தன்னை பற்றியும், தாயின் உறவை பற்றி 4 கதைகள் சொல்கிறார். நான்கு கதைகளும் நான்கு விதமான வாழ்க்கையை பற்றியும், நம் வாழ்வில், பல சாயல்களைக் கொண்ட உறவுகளின் அவசியத்தை உணர்வுப்பூர்வமாக விவரிக்கும் நான்கு தனித்துவமான கதைகள் ஒவ்வொன்றும் தனிப்பட்ட போராட்டங்கள் மற்றும் வளர்ச்சியைச் சுற்றி வரும் இந்த நான்கு கதைகளும் ‘அம்மா’ என்ற அற்புதமான உறவை மட்டுமே குறிப்பிடுகிறது. இது அபி மற்றும் முத்துக்குமார் இடையிலான ஒரு முக்கிய உரையாடலால் பின்னிப் பிணைந்துள்ளன.
முதல் கதை:
ஒரு கதை மும்பையில் நிழல் உலக தாதாக்களான நட்டி மற்றும் சுரேஷ் மேனனைப் பின்தொடர்கிறது, அம்மா பாசத்திற்காக ஏங்கும் தாதா அப்துல் மாலிக் (நட்டி) ஒரு பாலியல் தொழிலாளியான தனது தாய் பாத்திமாவின் (கனிகா) கடந்த காலத்துடன் போராடுகிறார். இதில் நட்டி – அப்துல் மாலிக், கனிகா – பாத்திமா, ஆடுகளம் நரேன் – தாஸ், சுரேஷ் மேனன் – லால் பாய், காவியா அறிவுமணி – மலர், ரிஷிகாந்த் – கண்ணன் நடித்துள்ளனர்.
இரண்டாவது கதை :
துவரங்குறிச்சி கிராமத்தில் வசிக்கும் வயதான தம்பதி ராயப்பன் (பாரதிராஜா), அவரது மனைவி குழந்தை (வடிவுக்கரசி). தங்களது குழந்தைகளை கஷ்டப்பட்டு உழைத்து நல்லபடியாக வளர்த்து ஆளாக்கினாலும் வயதான காலத்தில் பெற்றோரை கவனிக்காமல் அலைக்கழித்து, திட்டித் தீர்த்து, பசியோடு இறக்கும் தாய், இந்த நிலையை ஏற்படுத்தும் மகன்கள். இதில், பாரதிராஜா – ராயப்பன், வடிவுக்கரசி – குழந்தை, ஏகன் – (இளம் வயது ராயப்பன்), முல்லை அரசி – (இளம் வயது குழந்தை) நடித்துள்ளனர்.
மூன்றாவது கதை:
நாகப்பட்டினம், வேளாங்கண்ணியில் நடப்பதாகவும் இருக்கும். இந்தப் பகுதியின் மையத்தில் அதியன் (ரியோ ராஜ்) இருக்கிறார், இது அந்தப் பகுதியில் உள்ள மீனவர்களின் வாழ்க்கையை பற்றியது. கணவனை இழந்து கைக்குழந்தையுடன் பல போராட்டங்களையும் பிரச்சனைகளையும் சந்திக்கும் ஒரு விதவை தாய் பரிமளம் (ஆதிரை) பாசத்தை பற்றியது. புற்றுநோயால் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அம்மாவை காப்பாற்ற நிதி திரட்ட முடியாமல் போகும் போது, அந்த தாயின் உயிரை காப்பாற்ற கொலை செய்யும் அளவுக்கு செல்லும் ஒரு பாசமிகு தாய் மகன் உறவை பற்றியது.இதில், ஆதிரை – பரிமளம், ரியோ ராஜ் – அதியன், மைம் கோபி – மகிமை, சுரேஷ் சக்ரவர்த்தி – கண்ணபிரான், விக்னேஷ்காந்த் – பாலா நடித்துள்ளனர்.
நான்காவது கதை:
சென்னையில் உள்ள ஒரு வீட்டுவசதி வாரியத்தில் ஆட்டோ ஓட்டுனர் அன்பு (சாண்டி) நாயகனாகக் கொண்டு நடக்கிறது. அன்புக்கும் மஹிக்கும் (அய்ரா கிருஷ்ணன்) காதல் மலர்கிறது. அதே நேரத்தில் வெளிநாட்டில் வேலை கிடைத்ததால் மகன், மருமகள் இருவரும், கணவனின் அம்மாவை (துளசி) சென்னையில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டுப் போகிறார்கள்.மகன், மருமகளால் கைவிடப்பட்ட துளசி அன்புவின் ஆட்டோவில் பயணிக்கும் போது இருவருக்கும் எதிர்பாராத தாய் – மகன் பிணைப்பு உருவாகியது. காதலி மஹி வீட்டில் புதிதாக உறவால் கிடைத்த அம்மாவை அறிமுகம் செய்யும் போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த காதலி மஹியை, அம்மா என்ற உறவுக்காக தன் காதலை தூக்கி எறிய தயாராக இருக்கும் ஆதரவற்ற இளைஞனின் கதை. இதில், துளசி, சாண்டி – அன்பு, அய்ரா கிருஷ்ணன் – மஹி, நமோ நாராயணா நடித்துள்ளனர்.
இந்த நான்கு கதைகளும் அபியின் வாழ்க்கையில் மாற்றத்தை தூண்டுகிறது. அபி தன் தாயின் மீது இருந்த வெறுப்பை மாற்றி தாய் மீது பாசமாக மாற உதவுகிறது என்பதே படத்தின் மீதிக்கதை.
நிறம் மரம் உலகில் என்பது உறவுகளை பற்றி நான்கு ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட கதைகளைச் சொல்லும் படம். இந்தப் படத்தின் மூலம், பெற்றோர்கள் அனுபவிக்கும் பல்வேறு போராட்டங்கள் பற்றிய ஒரு செய்தியைப் நான்கு கதைகள் மூலம் இயக்குனர் பிரிட்டோ சொல்லி இருக்கிறார். ஒவ்வொரு அத்தியாயமும் அதன் திறமையான நடிகர்களுடன், தனக்குள் ஒரு அர்த்தத்தை உள்ளடக்கி ஒரு நெகிழ்ச்சியான தொகுப்பிற்கான அனைத்து கூறுகளையும் உணர முடிகிறது. வாழ்க்கையையும் அதன் மக்களையும் குறிக்கும் பல்வேறு வண்ணங்கள் உள்ள இந்த படத்தை பார்க்கும் இளைஞர்கள் நிச்சயம் ஒரு முறையாவது தங்கள் பெற்றோரின் வாழ்க்கையைப் பற்றி யோசிப்பார்கள். முக்கியமாக சூழ்நிலையைக் குறை கூறி பெற்றோர்களை தவிக்க விட்ட மகன்கள் மற்றும் மருமகள்கள் உட்பட அனைவரின் நிறமும் மாறும். அந்த முக்கியமான தருணத்தில் அவர்கள் எடுக்கும் முடிவுதான் அவர்கள் வாழ்நாள் முழுவதும் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
தொழில்நுட்ப வல்லுநர்கள் ஒளிப்பதிவாளர் மல்லிகா அர்ஜுன், மணிகண்ட ராஜா, படத்தொகுப்பாளர் தமிழ் அரசன், இசையமைப்பாளர் தேவ் பிரகாஷ் ரீகன் இசை மற்றும் பின்னணி இசை தொழில்நுட்ப ரீதியாக வாழ்க்கையில் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளைப் ஒன்றிணைக்கும் ஒரு வசீகரிக்கும் கதைக்களத்தை காட்டுகிறது.
மொத்தத்தில் எல் கேத்தரின் ஷோபா மற்றும் லெனின் தயாரிப்பில் சிக்னேச்சர் புரொடக்சன்ஸ் மற்றும் ஜி.எஸ். சினிமா இன்டர்நேஷனல் இணைந்து வழங்க பெர்ஃபெக்ட் பிக்சர் ஸ்டுடியோஸ் வெளியீடும் நிறம் மாறும் உலகில் உறவுகளின் அவசியத்தை சொல்லும் உணர்ச்சிகரமான படம்.