நிறங்கள் மூன்று சினிமா விமர்சனம் : நிறங்கள் மூன்று – மூன்று நபர்களின் தலைவிதியை இணைக்கும் ஹைப்பர்லிங்க் த்ரில்லர் | ரேட்டிங்: 2.5/5

0
393

நிறங்கள் மூன்று சினிமா விமர்சனம் : நிறங்கள் மூன்று – மூன்று நபர்களின் தலைவிதியை இணைக்கும் ஹைப்பர்லிங்க் த்ரில்லர் | ரேட்டிங்: 2.5/5

கார்த்திக் நரேன் எழுதி இயக்கிய படம் நிறங்கள் மூன்று. அதர்வா, சரத்குமார், துஷ்யந்த் ஜெயபிரகாஷ், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் நடித்துள்ளனர்.

ஐங்கரன் இன்டர்நேஷனல் சார்பில் கே.கருணாமூர்த்தி தயாரித்துள்ளார்.

ஒளிப்பதிவு டிஜோ டாமி, இசை ஜேக்ஸ் பெஜாய், எடிட்டிங் ஸ்ரீஜித் சாரங். மக்கள் தொடர்பு டைமண்ட் பாபு, சுரேஷ் சந்திரா, அப்துல் ஏ.நாசர், டி.ஒன்.

நிறங்கள் மூன்று ஒரு ஹைப்பர்லிங்க் முறையைப் பின்பற்றி, வெவ்வேறு நிலைகளில் இருந்து வந்தவர்கள் போல் தோன்றும், மாறுபட்ட வேலை மற்றும் நெறிமுறைகளைக் கொண்ட மூன்று நபர்களின் தலைவிதியை இணைக்கும் க்ரைம் த்ரில்லர். வசந்த் (ரஹ்மான்) ஒரு ஆசிரியர் ஆவார், அவர் தனது மாணவர் ஸ்ரீக்கு (துஷ்யந்த் ஜெயபிரகாஷ்) அவரது குடும்ப பிரச்சனைகளுக்கு உதவுகிறார். அதில் இருந்து ஸ்ரீ க்கு தனது ஆசிரியர் மீது நன் மதிப்பு கூடுகிறது. மேலும் அவருக்கு மாணவர்களிடையே நல்ல கெமிஸ்ட்ரி இரு​க்கிறது. ஸ்ரீ தனது ஆசிரியர் வசந்த் (ரஹ்மான்) மகள் பார்வதி (அம்மு அபிராமி) மீது ஈர்ப்பு கொண்டிருந்தார். ஒரு நாள் பார்வதி காணாமல் போகிறாள். வெற்றியின் தந்தை செல்வம் (சரத் குமார்) ஒரு ஊழல் காவலர், புகார் கொடுப்பவரிடம் லஞ்சம் வாங்குகிறார். அமைச்சரின் மகனுக்கும் அவருக்கும் ஏற்கனவே பகை உண்டு. குடும்ப பிரச்சனை காரணமாக தந்தையும் மகனும் தனித்தனியே வசிக்கிறார்கள். மேலும் சினிமா இயக்குனராகும் கனவோடு முயற்சி செய்யும் வெற்றியால் (அதர்வா) படமாக்கப்பட்ட கடத்தல் காட்சியை பார்வதியின் கடத்தல் என்று ஸ்ரீ தவறாகக் கருதுகிறார். ஏனென்றால் பார்வதி ‘தி காட் ஃபாதர்” ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வேனில் கடத்தப்படுவதை ஸ்ரீ பார்க்கிறார். (கடத்தல் நடந்த போது அவனுக்கு அது பார்வதி என்று தெரியாது). இந்நிலையில், வெற்றியின் கதை திருடப்பட்டதும் அவனது இயக்குனராகும் கனவு வாழ்க்கைக்கு சோதனை வந்த போது, வெற்றி போதை பழக்கத்திற்கு அடிமையாகிறான். ஸ்ரீ காணாமல் போன தன் காதலியை தேடும் போது, அவர்களின் வாழ்க்கையில் முக்கிய நபர்களை எதிர்கொள்ளும் போது அவர்களின் மறைக்கப்பட்ட வெவ்வேறு அம்சங்கள் வெளிவருகின்றன. ஒரே இரவில் இடைவெளியில், அனைவரையும் இணைக்கும் சம்பவங்களில் வசந்த், ஸ்ரீ, வெற்றி, செல்வம் மற்றும் பார்வதி ஒன்றாக இணையும் போது வெளிப்படும் அவர்களின் உண்மை முகங்களும் நிறங்களும் என்ன என்பதை தெளிவாக பேசுகிறது கார்த்திக் நரேனின் சுவாரஸ்யமான கதைக்களம்.

அதர்வா, சரத்குமார், துஷ்யந்த் ஜெயபிரகாஷ், ரஹ்மான், அம்மு அபிராமி உட்பட அனைத்து கதாபாத்திரங்களும் வித்தியாசமான பரிமாணத்தில் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் அதர்வா வெற்றியின் கதாபாத்திரத்தின் போதைப் பயணம் கொஞ்சம் ஓவர் என்று தான் சொல்ல வேண்டும். இது போன்ற போதை காட்சிகள் இன்றைய இளைஞர்கள் மத்தியில் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். இனி வரும் காலங்களில் அதர்வா இது போன்ற போதை காட்சிகளை தவிர்ப்பது நல்லது.

ஒளிப்பதிவாளர் டிஜோ டாமி, இசையமைப்பாளர் ஜேக்ஸ் பெஜாய், எடிட்டர் ஸ்ரீஜித் சாரங் ஆகிய தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு ஹைப்பர்லிங்க் த்ரில்லர் கதைக்கு விறுவிறுப்பை கூட்ட முயற்சித்துள்ளனர்.

மனிதர்களின் இருண்ட பக்கம் மற்றும் ஆழமான உணர்வுகள், குழந்தை வளர்ப்பு, அதீத மதுபோதை, இயக்குனர்களின் கதை திருட்டு, மதுவால் ஏற்படும் தடுமாற்றம் என பல முக்கிய சம்பவங்களை வைத்து மூன்று மனிதர்களின் கதைகளைச் சொல்ல ஒரு நேரியல் அல்லாத திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குனர் கார்த்திக் நரேன். இருந்தாலும் காட்சிபடுத்தல் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் அந்த ஹைப்பர்லிங்க் த்ரில்லர் மேலும் விறுவிறுப்பை தந்திருக்கும்.

மொத்தத்தில் ஐங்கரன் இன்டர்நேஷனல் சார்பில் கே.கருணாமூர்த்தி தயாரித்துள்ள நிறங்கள் மூன்று படம் மூன்று நபர்களின் தலைவிதியை இணைக்கும் ஹைப்பர்லிங்க் த்ரில்லர்.