நித்தம் ஒரு வானம் விமர்சனம் : காதல், உணர்ச்சி, உணர்வுகளுடன் சில வாழ்க்கைப் பாடங்களைக் கொண்ட திரைப்படம் நிச்சயமாக உங்களுக்குள் பல எண்ணங்களைத் தூண்டிவிடும் வசீகரமான நிதர்சனமான பயணம். | ரேட்டிங்: 3.5/5

0
241

நித்தம் ஒரு வானம் விமர்சனம் : காதல், உணர்ச்சி, உணர்வுகளுடன் சில வாழ்க்கைப் பாடங்களைக் கொண்ட திரைப்படம் நிச்சயமாக உங்களுக்குள் பல எண்ணங்களைத் தூண்டிவிடும் வசீகரமான நிதர்சனமான பயணம். | ரேட்டிங்: 3.5/5

நடிகர்கள் :

அசோக்செல்வன் (அர்ஜுன், வீர, பிரபா)

ரிதுவர்மா – சுபத்ரா

அபர்ணாபாலமுரளி – மதி

ஷிவாத்மிகா ராஜசேகர் – மீனாட்சி

சிவாதா – கோச்

காளிவெங்கட் – சூசை

அபிராமி – கிருஷ்ணவேணி

அழகம்பெருமாள் – சென்னியப்பன்

தொழில்நுட்ப கலைஞர்கள் :

ஒளிப்பதிவு : விது அய்யன்னா

இசை : கோபி சுந்தர்

பின்னணி இசை : தரன் குமார்

படத்தொகுப்பு : அந்தோணி

தயாரிப்பு நிறுவனம் : ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மென்ட் மற்றும் வயாகாம்18 ஸ்டுடியோஸ்

எழுத்து – இயக்கம் : ரா.கார்த்திக்

மக்கள் தொடர்பு : யுவராஜ்

அசோக் செல்வன் ஐடி நிறுவனத்தில் பணிபுரிபவர். எதிலும் சுத்தமாகவும், எல்லாவற்றையும் ஒழுங்காக வைத்திருக்கவும், எல்லாவற்றையும் சரியாகச் செய்யவும் குணம் கொண்டவர். அப்படிப்பட்டவர் திருமணம் செய்து கொள்ள சம்மதிக்க மணமகள் திருமணத்தன்று காலையிலேயே காதலனுடன் செல்வதாகச் சொல்லிவிட்டுச் செல்கிறாள். இதனால் மனசிதைவுக்கு ஆளாகும் அசோக் செல்வன் மருத்துவரை நாடுகிறார். அதிலிருந்து மீண்டு வர, அவரது மருத்துவர் அபிராமி அவரை பயணம் செய்ய அறிவுறுத்துகிறார், ஆனால் அவர் மறுக்கிறார். பிறகு அசோக் செல்வனின் மருத்துவர் அபிராமி, தான் எழுதிய இரண்டு சிறுகதைகளை அவரிடம் கொடுத்து படிக்கச் சொல்கிறார். சிறு வயதிலிருந்தே எந்தக் கதைப் புத்தகத்தைப் படித்தாலும் அசோக் தன்னையே கதாநாயகனாகக் கற்பனை செய்து கொள்பவர். இரண்டு கதைகளின் நாயகனாக தன்னை கற்பனை செய்து கொள்கிறார். ஓன்றில்; மீனாட்சியை (சிவாத்மிகா) காதலிக்கும் பொறியியல் கல்லூரி மாணவர் வீராவாகவும் மற்றொன்றில் கொங்கு தமிழ் பேசும் போலீஸ் அதிகாரி பிரபா மற்றும் மதி (அபர்ணா பாலமுரளி) பற்றிய கதையில் கற்பனை கதாபாத்திரமாக அசோக்செல்வன் தன்னை நினைத்து கொண்டு படிக்கிறார். ஆனால், அந்தக் கதைகளில் முடிவுகள் பக்கங்கள் கிழிக்கப்பட்டிருக்க அதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற பேராவலில் மருத்துவர் அபிராமியிடம் அதைப் பற்றிக் கேட்க. அவை கதை அல்ல, உண்மை சம்பவங்கள், அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள நீ சண்டிகருக்கும், ஹிமாச்சல் பிரதேசத்திற்கும்; தேடிப் போ என முகவரிகளைக் கொடுக்கிறார். அசோக்கும் அவர்களைப் பார்க்க தனியாக கிளம்புகிறார். தேடலை நோக்கிய பயணத்தில், கொல்கத்தாவில் பானி பூரியை விரும்பி சாப்பிடும் சுபத்ராவை (ரிது வர்மா) சந்திக்கிறார்.அசோக் செல்வன் ரிதுவர்மாவிடம் நட்புடன் பழகி தான் செல்லும் காரணத்தை சொல்கிறான். இதைக் கேட்ட ஏற்கனவே காதல் தோல்வியில் தவிக்கும் ரிது வர்மா தானும் வருவதாக சொல்ல அசோக் செல்வன் ரிதுவை அழைத்துச் செல்கிறான். இருவரும் உண்மையான கதையின் நாயகி-நாயகர்களை சந்தித்தார்களா? அவர்களின் வாழ்க்கையில் நடந்தது என்ன? இதை தெரிந்து கொள்ளும் ஆவலில் செல்லும் அசோக் மற்றும் ரிதுவிற்கு காத்திருக்கும் அதிர்ச்சி என்ன? இவர்களின் வாழ்க்கையை பார்த்து திரும்பி வரும்போது அந்தப் பயணத்தில் அசோக்கிற்கும் ரிதுவிற்கும் ஏற்படும் மாற்றம் என்ன? என்பதே மீதிக் கதை

அசோக் செல்வன் அர்ஜுனாக மட்டுமல்ல, வீராவாகவும், பிரபாவாகவும் மூன்று வித்தியாசமான கெட்டப்களில் தனி பாடி லாங்குவேஜ், பேச்சு என நடிப்பில் அசத்தி நல்ல வேறுபாட்டை காட்டி நம்மை வசீகரிக்கிறார். ஒவ்வொரு கேரக்டரிலும் அவர் காட்டும் வித்தியாசம் அவரது நடிப்புக்காக அவர் எடுத்த முயற்சிகளை விளக்குகிறது. ஓசிடி போன்ற ஒரு நிலையில் உள்ள ஒருவராக அர்ஜுனின் போராட்டத்தில் அதிலிருந்து மீண்டுவர தன்னம்பிக்கை வைப்பதற்காக இரண்டு பேரின் வாழ்க்கைக்குள் நுழைந்து வெளியே வரும் அசோக் செல்வனின் நடிப்பு பாராட்டுக்குரியது. ஹீரோயின்களுடன் கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் ஆகி உள்ளது.

ரிது வர்மா பயணக் கதையில் தற்செயலாக சந்திக்கும் அர்ஜுனுடன் பழகி அவனிடன் மாற்றத்தை ஏற்படுத்தும் வேடிக்கையான மிகவும் கலகலப்பான ஆனால் உறுதியான சுபத்ராவாக நடித்துள்ளார்.

அபர்ணா பாலமுரளி மதியாக கிராமத்து வேடத்தில் நம்மை ஆச்சரியப்படுத்திய மற்றொரு நடிகை. சரியான பேச்சுவழக்கில் பேசுவதும், சரியான வழியை சைகை செய்வதும், குறும்பு மற்றும் காதலில் பிடிவாதமான மதியாக முதல் பாதியில் பயணப்படும் போது அவரின் துறுதுறு செய்கைகள் அனைவரையும் கவரும் விதத்தில் உள்ளது.

ஷிவாத்மிகா, ஷிவதா, அபிராமி, காளிவெங்கட்  மற்றும் அழகம் பெருமாள் ஆகியோர் தங்கள் கதாபாத்திரங்களை கச்சிதமாக கையாண்டு படத்தின் திரைக்கதை நகர்த்தி கூடுதல் பலம் சோர்த்துள்ளார்கள்.

நல்ல இசை இல்லாமல் எந்த ஒரு நல்ல படமும் இருக்க முடியாது. கோபி சுந்தரின் இசை, தரனின்  பின்னணி இசை நிறைவு செய்துள்ளது. வித்து அயன்னாவின் ஒளிப்பதிவில் அழகிய காட்சிகள் மற்றும் அற்புதமான அமைப்புகளும் பிரமிக்க வைக்கிறது. ஆண்டனியின் எடிட்டிங் படத்தின் தரத்தை உயர்த்தியுள்ளது. படத்தின் தயாரிப்பின் உயர் தரம் கதைக்கு நன்றாக உதவுகிறது.

மிக சுவாரசியமான கதைக்களம். ஒன்றில் மூன்று காதல் கதைகள். நம்மிடம் இருக்கும் வாழ்க்கையை நாம் உண்மையில் என்ன செய்கிறோம் என்பதைப் பற்றி சிந்திக்க வைக்கிறது. நாம் அனைவரும் நம்மைக் கண்டறியும் வழியைக் கண்டுபிடிக்க, நீண்ட தூரம் பயணிக்க விரும்பும் வகையில் வாழ்க்கையின் உணர்ச்சிகரமான ரோலர்கோஸ்டரை  நம் அனைவரையும் நன்றாக உணர வைப்பதில் ஒரு அழகான செய்தியை காட்சி படுத்தி காட்டி இயக்குனர் ரா.கார்த்திக் வெற்றி பெற்றுள்ளார்.

மொத்தத்தில் ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மென்ட் மற்றும் வயாகாம்18 ஸ்டுடியோஸ் தயாhரித்துள்ள நித்தம் ஒரு வானம் காதல், உணர்ச்சி, உணர்வுகளுடன் சில வாழ்க்கைப் பாடங்களைக் கொண்ட திரைப்படம் நிச்சயமாக உங்களுக்குள் பல எண்ணங்களைத் தூண்டிவிடும் வசீகரமான நிதர்சனமான பயணம்.