நானே வருவேன் திரை விமர்சனம் : சைக்கோ த்ரில்லர் நானே வருவேன் தனுஷ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தான் – வென்றான் | ரேட்டிங்: 3.5/5

0
1347

நானே வருவேன் திரை விமர்சனம் : சைக்கோ த்ரில்லர் நானே வருவேன் தனுஷ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தான் – வென்றான் | ரேட்டிங்: 3.5/5

தனுஷ் செல்வராகவன் யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் இதுவரை வெளிவந்துள்ள படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. இந்த கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைகிறது என்று அறிவிப்பு வந்ததில் இருந்து இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது.  மிகவும் குறுகிய நாட்களில் எடுக்கப்பட்ட நானே வருவேன் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

நடிகர்கள் : தனுஷ், இந்துஜா, எல்லி அவரம், ‘இளைய திலகம்’ பிரபு, யோகி பாபு, ஹியா தவே, பிரணவ், பிரபவ், ஃபிராங்க்கிங்ஸ்டன், சில்வென்ஸ்டன், துளசி, சரவண சுப்பையா, ஷெல்லி என்.குமார் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் கே.செல்வராகவன்.

தொழில்நுட்ப குழுவினர்
இயக்குனர் : கே.செல்வராகவன்
தயாரிப்பு : கலைப்புலி எஸ்.தாணு
இசை : யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவாளர் : ஓம் பிரகாஷ்
படத் தொகுப்பு : புவன் சீனிவாசன்
தயாரிப்பு வடிவமைப்பு : ஆர்.கே.விஜய முருகன்
நடனம் : கல்யாண் மாஸ்டர், சதீஷ் மாஸ்டர்
சண்டைக் காட்சி : திலீப் சுப்பராயன், ஸ்டண்ட் சிவா
பாடல்கள் : யுகபாரதி, மதன் கார்க்கி, செல்வராகவன், தனுஷ்
மக்கள் தொடர்பு : ரியாஸ் கே.அஹ்மத், டைமண்ட் பாபு

பிரபு (தனுஷ்) கதிர் (தனுஷ்)  இரட்டை குழந்தைகள். பிரபு புத்திசாலி. ஆனால் கதிர் முரட்டுத்தனத்துடன் கூடிய சைக்கோ குணமுடையவன். கதிர் பக்கத்து வீட்டு சிறுமியின் ஆடையை எரித்ததிற்காக மன்னிப்பு கேட்காததால் அவன் தந்தை அவனை மரத்தில் கட்டி இரவு வரை அங்கேயே விட்டு விடுகிறார். சிறிது நேரம் கழித்து அம்மா கதிர் கட்டை அவிழ்க்கச் செல்லும் போது கதிரை காணhமல் தேடுகின்றார்.காட்டில் எங்கோ ஒரு சைக்கோ மனிதன் அவனை சங்கிலியால் பிணைக்கிறான். அவனிடமிருந்து தப்பித்து கதிர் அந்த சைக்கோ மனிதனை கொடூரமாக கொன்றுவிடஇ போலீஸ் கதிரை பிடிக்கிறது. விஷயம் அறிந்த கதிரின் பெற்றோர்இ அவரை போலீஸில் இருந்து விடுவிக்கின்றனர். அன்றிலிருந்து கதீரின் அட்டூழியங்கள் அதிகமாகிக்கொண்டே போகிறது. கதிர் தனது தந்தையை கொன்று விட தாய் கதிரை காப்பாற்ற பொய் சொல்லி விடுவிக்கிறார் . இதனால் விரக்தியாகும் தாய் ஜோதிடரிடம் கதிர் பற்றி கேட்க, கதிரும் பிரபுவும் பிரிந்து வாழ்ந்தால் தான் நல்லது என்று கூறுகிறார்.  அதனால் கதிரை கோயிலில் தனியாக விட்டு விட்டு தாய் பிரபுவுடன் வேறு ஊருக்கு சென்று விடுகிறார்இ பிறகு இருபது ஆண்டுகள் கழித்து பிரபு தனது மனைவி புவனா மற்றும் குழந்தை சத்யாவுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். சக ஊழியர் குணா (யோகிபாபு) அவரைப் பார்த்து பொறாமை கொண்டு உன்னைப் புரிந்துகொள்ளும் மனைவியும்இ தெய்வத்தைப் போன்ற மகளும் உனக்கு இருப்பதாகச் சொல்கிறார். அப்படிப்பட்ட பிரபு குடும்பத்தில் பெரும் புயல் வீசுகிறது. 12 வயது பிரபுவின் குழந்தை வினோதமாக நடந்து கொள்கிறது. அதற்கு காரணம் சோனு பேய்  என்றும் தன்னை துன்புறுத்துவதாக அவள் கூறுகிறாள். பிரபு மனநல மருத்துவர் ஆலோசனைப்படி சோனு பேயின் ஆசையை நிறைவேற்ற  முடிவு செய்கிறார். தன் குழந்தையை பயமுறுத்தும் பேயிடமிருந்து கிடைத்த குறிப்பின் மூலம்  பிரபு கதிர் என்பவனை கொன்று தன் தம்பியை காப்பாற்றினால் தான்  அந்த குழந்தையை விட்டு விடுவேன் என்று சோனு பேய் கூறுகிறது. அந்த கதிர் யாரோ இல்லை தன் சகோதரர் என்பது பிரபுவிற்கு தெரிகிறது.எ இரட்டையர்கள் ஏன் பிரிக்கப்படுகிறார்கள்? அவர்களுக்கு இடையே என்ன உறவு? கதிரின் மரணத்தை பேய் ஏன் விரும்புகிறது? சோனு யார்? இரட்டை சகோதரர்களுக்கும் பேய்க்கும் என்ன தொடர்பு? மகளுக்காக தம்பியை கொன்றாரா பிரபு? அல்லது? உண்மையில்இ இந்த சகோதரர்களின் கதை என்ன? இந்த கேள்விகளுக்கு அறிய திரைப்படத்தைப் பாருங்கள்.

தனுஷ்இ பிரபு சாஃப்டாகவும், கதிர் சைக்கோவாகவும், இரண்டு வித்தியாசமான வேடங்களில் அற்புதமாக நடித்துள்ளார்.  குறிப்பாக கதிர் கதாபாத்திரத்தில் தனுஷின் நடிப்பு வெகுவாக ஈர்க்கிறது. தனுஷ{க்கும் அவரது மகளுக்கும் இடையிலான பாசமிகு உணர்ச்சிகளும் மிக அதிகம். நரகத்தை அனுபவிக்கும் மகளைக் காப்பாற்ற முடியாமல் விரக்தியில் இருக்கும் தந்தையாக உணர்ச்சிகரமான காட்சிகளில் தனுஷின் வெளிப்பாடுகள் மெய் சிலிர்க்க வைக்கின்றன. கதிர் சைக்கோ கதாபாத்திரத்தில் ஜொலிப்பதோடு தனுஷின் உருமாற்ற நடிப்பு பிரமிக்க வைக்கிறது.

மனநல மருத்துவர் வேடத்தில் பிரபு, தனுஷ் மனைவியாக இந்துஜா ரவிச்சந்திரன், கதீரின் மனைவியாக ஊமை இளம்பெண்ணாக நடித்த எல்லி அவரம், சைக்கோ மனிதனாக செல்வ ராகவன், துளசி, சரவண சுப்பையா, ஷெல்லி என்.குமார், அவரவர் கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு சிறப்பாக நடித்துள்ளனர். குறிப்பாக குழந்தை நட்சத்திரங்கள் ஹியா தவே, பிரணவ், பிரபவ், ஃபிராங்க்கிங்ஸ்டன், சில்வென்ஸ்டன், உயிரோட்டமாக நடித்து அனைவரையும் கவர்கிறார்கள்.

இடையில் யோகிபாபு சிரிக்க வைக்க முயல்கிறார்.ஆனால் அது மட்டும் எடபடவில்லை.

யுவன் சங்கர் ராஜா இசையில் யுகபாரதி, மதன் கார்க்கி, செல்வராகவன், தனுஷ் ஆகியோரின் பாடல்கள் சிறப்பு. வழக்கம் போல தனது பிஜிஎம் மூலம் பார்வையாளர்களை கவர்ந்துள்ளார் யுவன் ஷங்கர் ராஜா.

யதார்த்தமான சண்டைக் காட்சி அமைத்த திலீப் சுப்பராயன்இ ஸ்டண்ட் சிவாஇ சஸ்பென்ஸ் எமோஷன் த்ரில்லருக்கான சிறப்பான ஃப்ரேமிங் கொடுத்த ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ்இ புவன் சீனிவாசனின் படத் தொகுப்பு செல்வராகவனின் வித்தியாசமான கான்செப்டுக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

செல்வராகவன் – தனுஷ் – யுவன் கூட்டணியின் நானே வருவேன் இரட்டை பிறவிகளான அண்ணன், தம்பி இடையில் நடக்கும் போராட்டம் குறித்த கதை… இரண்டு குழந்தைகளில் ஒருவரிடம் பெற்றோர்கள் அதிருப்தி காட்டுவது.. அதனால் அண்ணன் தம்பிகளுக்கு இடையே இடைவெளி.. இவையெல்லாம் பல படங்களில் பார்த்தவை. தனுஷ் மற்றும் செல்வராகவன் இருவரும் இணைந்து கதை மற்றும் திரைக்கதை அமைத்துள்ளனர். படம் ஆரம்பித்து காட்சிகள் செல்ல செல்ல இது ஏதோ ஒரு ஆங்கில படத்தின் தழுவல் என்று மனதிற்கு வந்தாலும்இ அதனை யோசிக்க விடாமல் திரைக்கதையில் மற்றும் காட்சி அமைப்புகளில் செல்வராகவன் நம்மை கொண்டு செல்கிறார். வித்தியாசமான கான்செப்டுடன் ஹாரர் த்ரில்லராக வரும் இந்த மெயின் சீக்வென்ஸில் சில காட்சிகள் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. அடுத்த பாகத்திற்கான லீடுடன் கதையை முடித்துள்ளனர்.

மொத்தத்தில் வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருக்கும் சைக்கோ த்ரில்லர் நானே வருவேன் தனுஷ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தான் – வென்றான்.